இடுகைகள்

அனுபவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடைபெறும் அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது!

படம்
  கிரேக்க தத்துவவாதியான எபிக்டெட்டஸ், மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதில்லை. அதைபற்றிய பார்வைகளால் கோணங்களால்தான் துயரத்தை சந்திக்க நேருகிறது என்று கூறினார். அதே சிந்தனையை அப்படியே உளவியலுக்கு மாற்றி கூறியவர் உளவியலாளர் ஆல்பெர்ட் எல்லிஸ். இவர். 1955ஆம்ஆண்டு ரெப்ட் என்ற சிகிச்சையை தான் நம்பிய கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார். ஒரு மனிதர் சந்திக்கும அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது. ஆனால், மனிதர்கள் அதை எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அதன்படி அனுபவம் அமைகிறது.  நாற்பது, ஐம்பதுகளில் எல்லிஸ் தனது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆய்வு செய்தார். அவர்கள், தங்களுக்கு இருக்கும் பிரச்னை ஒன்று தீர்ந்தால் இன்னொன்றை அதே இடத்திற்கு கொண்டு வந்து வருந்திக்கொண்டு இருந்தனர். எனவே,இதற்கு சிகிச்சை என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பதுதான் என எல்லிஸ் முடிவு செய்தார். இதற்கு ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம். ஒருவரை திடீரென வேலையில் இருந்து நீக்குகிறார்கள். இதற்கு அலுவலக குழு அரசியல், ஒருபக்க சார்ப

உலகம் சுற்றிவர தனியாக கிளம்பும் பெண்கள் - சாகச பயணத்தின் மேல் உருவாகும் புதிய மோகம்

படம்
  இன்று உலகம் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய மாறியிருக்கிறது. அதேசமயம், ஆண், பெண் என பாலின வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார வலிமையில் பெண்கள், ஆண்களுக்கு நிகர் இணையாக ஏன் அவர்களையும் கடந்து சென்றுவிட்டார்கள். வீடு, அலுவலகம் கடந்து புதிய இடங்களுக்குச் செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு   பொருளாதார வலிமையும் கைகொடுக்கிறது. லீவு போட்டுவிட்டு அல்லது வேலையை விட்டு விலகிச் செல்ல துணிச்சலான மனமும் இருக்கிறது. அப்புறம் என்ன? உடனே பையை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதானே? பெங்களூருவில் எஃப்5 எஸ்கேப்ஸ் என்ற நிறுவனம், பெண்களுக்கு மட்டுமேயான பயணங்களை திட்டமிட்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு என அவசிய விஷயங்களை, இந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. பெண்கள் முடிவு செய்யவேண்டியது ஒன்றுதான். குழுவாக செல்வதா அல்லது தனியாக செல்வதா என்பதை முடிவு செய்வது மட்டும்தான். இந்த நிறுவனம் 300க்கும் மேலான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. 30க்கும் அதிகமான முறை, பெண்களின் குழுக்களை   சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் பெண்கள் பயணித்துள்ளனர். வாண்டர் வும

ஆளுமை பிறழ்வுக்கு என்ன காரணம்?

படம்
  ஆளுமை என்பதை நூல் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். சுய முன்னேற்ற நூல்களில் ஆளுமை என்பது முக்கியமான வார்த்தையும் கூட. ஒருவர் பேசுவது, சிந்திப்பது, செயல்படுவது ஆகியவற்றில் தனது கலாசாரம் சார்ந்த தன்மைகளை தாண்டி இருப்பது ஆளுமைக் குறைபாடு அல்லது பிறழ்வு என கூறலாம். அதாவது சமூகத்தை சீர்திருத்துபவர்களை இதில் உள்ளடக்க முடியாது. குறிப்பிட்ட தன்மையில் யோசிப்பது, செயல்படுவது ஆகியவற்றால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல், மனம் என இரண்டுமே பாதிக்கப்படும் நிலை என புரிந்துகொள்ளலாம். உளவியலாளர், ஒருவருக்கு ஆளுமை பிறழ்வு உண்டா இல்லையா என சோதனை மூலம் உறுதி செய்ய முடியும். ஆளுமை பிறழ்வு அல்லது குறைபாடு வகையில் மொத்தம் பத்து வகைகள் உள்ளன. பாரனாய்டு, ஸிசோய்டு, ஸிசோடைபால், ஆன்டி சோசியல், பார்டர்லைன், ஹிஸ்டிரியோனிக், நார்சிஸ்டிக், அவாய்ட்ன்ட், டிபென்டன்ட்,ஆப்செசிவ் கம்பல்சிவ். இவற்றைப் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் திகைப்பாகவே இருக்கும். எப்படி உச்சரிப்பது என்பது முக்கியல்ல. என்ன அறிகுறிகள், பாதிப்பை குறைத்து கட்டுப்படுத்துவது மட்டுமே அவசியமானது. மனநல குறைபாடுகளுக்கு தீர்வு

புதிய மின்னூல் வெளியீடு - மயிலாப்பூர் டைம்ஸ் - அமேஸானில் வாசியுங்கள்

படம்
  பிளாக்குகளில் அதாவது வலைப்பூவில் எழுதுவது என்பது டயரிக்குறிப்பு போலத்தான் அதற்கு மேல் அதில் ஏதுமில்லை என்று கணியம் சீனிவாசன் ஒருமுறை கூறினார். வலைப்பூவில் எழுதப்படும் கட்டுரைகளைப் பொறுத்து இப்படி கூறலாம். அவர் கூறுவதற்கு மயிலாப்பூர் டைம்ஸ் கட்டுரைகள் சற்று ஒத்துவரும். இந்த நூலில், எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது வரையிலான  நிகழ்ச்சிகளை சுட்டப்பட்டுள்ளன.  மயிலாப்பூர் என்பது காஞ்சிபுரம் போலத்தான். இங்கும் தெருவுக்கு தெரு கோவில்கள் உண்டு. தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கும் பிராமணர்களின் குழுக்கள் உண்டு. கபாலீஸ்வரர் கோவில், அதைச்சுற்றியுள்ள முக்கியமான நூல், உணவு நிறுவனங்கள் என பேச ஏதாவது விஷயங்கள் உண்டு. ஆண்டுதோறும் அனைத்து மாதங்களிலும் இங்குள்ள கோவில்களில் ஏதேனும் ஒரு விசேஷம் நடந்தவாறே இருக்கும். இங்கு வாழும் ஒரு பத்திரிகையாளன் பார்க்கும், கேட்கும், அனுபவித்த விஷயங்களின் தொகுப்புதான் நூல்.  இந்த அனுபவங்களை வாசிக்கும் யாவரும் புன்னகையுடன் அதை வாசிக்க முடியும். நூலின் கட்டுரைகள் அனைத்துமே சுய எள்ளல் தன்மையுடன் தான் உள்ளன. எனவே, வெறும் டயரிக் குறிப்பாக மட்டும

பொதுமுடக்கத்தில் மனதிற்கு நம்பிக்கையூட்டும் சில நூல்கள்... உங்களுக்காக....

படம்
                  பொதுமுடக்கத்தில் படிப்பதற்கான சில நூல்கள் தி ஹேப்பியஸ்ட் மேன் ஆப் தி எர்த் எடி ஜாகு எப்படி யூத இனத்தில் பிறந்து வதை முகாம்களிடையே தப்பித்து ஏழு ஆண்டு கள் வாழ்ந்தார் , இந்த நரகமான காலத்தில் வாழும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கச் செய்தது எது , எப்படி தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார் என்பதை புன்னகையுடன் நீங்கள் படித்து ஆறுதல் பெறலாம் . டீம் கைண்ட்னெஸ் - எ ரிவல்யூஷனரில் கைட் பார் தி வே பார் வீ திங்க் , டாக் அண்ட் ஆக்ட் இன் கைண்ட்னெஸ் உலகம் பல்வேறு சுயநலனுக்காக அரசியலுக்காக பிளவுபட்டு வருகிறது . இந்த இடைவெளியை எப்படி கருணை கொண்டு நிரப்புவது என ஆராய்கிறது இந்த நூல் . கருணையை தினசரி நாம் செய்யும் செயல்கள் மூலம் எப்படி நடைமுறைப்படுத்துவது , அன்பை பிறருக்கு வழங்குவது எப்படி என நூல் வழிகாட்டுகிறது . தி பாய் தி மோல் , தி பாக்ஸ் அண்ட் தி பாக்ஸ் நான்கு நண்பர்களின் வாழ்க்கை வழியாக நம்பிக்கையையும் , நட்பையும் பரப்பும் நூல் இது . 2019 இல் வெளியான நூல் இதுவரை பத்து லட்சம் பிரதிகள் விற்றுள்ளது . நூல் எளிமையாக படிக்கும்படியும் , இதிலுள்ள வசனங்

நாயிடம் எப்படி பழக வேண்டும்? - நடத்தை உளவியல் ஆய்வு

படம்
pixabay உளவியலும் பழகும் முறையும் ஒருவர் சமூகத்தில் பழகும் முறை சார்ந்து அவரின் உளவியலை ஆராய்ச்சி செய்கின்றனர். இதற்கு பிஹேவியர் சைக்க்காலஜி என்று பெயர். உங்களுடைய நண்பர் இருக்கிறார். அவரை நீங்கள் எப்படி நண்பராக ஏற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? அவரின் பழகும் முறை, கருத்து, வெளியில் நடந்துகொள்ளும் முறை இவை உங்களுக்கு அவரிடம் பிடித்திருக்கலாம். பொதுவாக நம் கருத்துக்கு இசைந்தவர்களையே நாம் நண்பர்களாக தேர்ந்தெடுக்கிறோம். இதைத்தான் நடத்தை உளவியல் என வரையறுக்கலாம்.  உலகில் ஒருவர் பார்க்கும் விதம், அவரின் கருத்து சார்ந்து நடத்தை உளவியல் உருவாகிறது. இதற்கான சோதனைகள் தனியே குறிப்பிட்ட இடத்தில் நடப்பவையே. இவற்றில் நடத்தை உளவியல் சாரந்த பல்வேறு அறிஞர்களின் கோட்பாடுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து ஒருவரின் நடத்தை உளவியல் தீர்மானிக்கப்படுகிறது.  1913ஆம் ஆண்டு ஜான் வாட்சன் என்ற ஆய்வாளர் நடத்தை உளவியல் என்ற பதத்தை உருவாக்கினார். இதன் செயல்பாட்டில் மனிதர்களின் பங்கு, மனம் பற்றி வரையறைகளை உருவாக்கினார். அவற்றை இன்றளவும் ஆய்வாளர்கள் ப

டிக் டிக் டிக் - மிஸஸ் டக்ளஸ்

படம்
pexels.com மிஸஸ். டக்ளஸ் கூடா நட்பு ஆடும் புலியும் ஒன்றாக படுத்து தூங்கலாம். ஆனால் ஆட்டுக்கு தூக்கம் வராது. எதுவுமே.. எதுவும் சுலபமல்ல, ஆனால் எல்லாமே சாத்தியம்தான். ஒலியின் வலிமை ஒன்றைச் சத்தமாக சொல்வதை விட கிசுகிசுப்பாக சொன்னால் மக்கள் நம்பிவிடுகிறார்கள். இரண்டு விதிகள் வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டே இரண்டு விதிகளைக் கடைப்பிடித்தால் போதும். 1. உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 2......................................................................... எது வேண்டும்? கண்ணீர் அனுதாபம் தரும். ஆனால்  வியர்வைதான் பலன் தரும். மோசம் உண்மையைச் சொல்லி ஒருவரை அழ வைப்பது எவ்வளவு மோசமோ, அத்தனை மோசம் பொய்யைச் சொல்லி அவரைச் சிரிக்க வைப்பது. அனுபவ வேலைக்காரன் அனுபவம் உங்களுக்கு கற்றுத்தராது. கதவைத் திறந்துவிடும் பணியாள். நீங்கள்தான் கம்பீரமாக உள்ளே செல்ல வேண்டும். உண்மை எந்த ஒரு சுறுசுறுப்பான விவாதத்தையும் ஒரு சின்ன உண்மையால் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும். உண்டு ஆனால்.. அதிர்ஷ்டம் என்பது உண்டுதான்.