வெற்றிக்கான கொள்கைகள் என்னென்ன? எம்இ மாத இதழ் சொல்லும் ரகசியம்
பெருநிறுவனங்கள் அனைத்துமே அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கான இதழ்களை நடத்துகின்றன. அதில் பல்வேறு தொழில் முன்னேற்றங்கள், பணியாளர்களின் சாதனை, நிறுவனரின் லட்சியம், தற்போதைய இயக்குநரின் தொழில்கொள்கை இடம்பெறும். இந்த வகையில் மகிந்திரா எம்இ என்ற இதழை நடத்துகிறது. அதில் வந்த தொழில் அறிவுறுத்தல் கொள்கைகளைப் பார்ப்போம். எப்போதோ ரெடி தொழிலில் வெல்வதற்கான வாய்ப்பு என்பது எப்போது வரும் என தெரியாது. எனவே, நிறுவனம் குறிப்பிட்ட சந்தையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறங்கினால் திட்டங்களை அறிவிக்கும் வேகத்தில் பணியாளர்களை முடுக்கிவிட தலைவர் தயாராக இருக்கவேண்டும். இல்லையெனில் வெகு விரைவில் வாய்ப்பை இழந்து கையில் உள்ள சந்தையையும் இழந்துவிடுவோம். அத்தனையும் வேண்டாம் கையில் உள்ள அத்தனை பணத்தையும் தொழில் முதலீடாக பயன்படுத்த வேண்டியதில்லை. அதில் ஆபத்துகள் அதிகம். பெரிய முதலீடு மூலம் பெரிய வருமானம் கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை. சமரசமற்ற வாழ்வு மேசையை விட்டு விலகி வர தைரியம் இல்லாதபோது அறைக்குள் நுழையவே கூடாது. செய்யும் வேலையில் அழுத்தம் என காரணம் சொல்லி தரத்தையும், மதிப்பையும் சமரசம்