இடுகைகள்

பாலியல் சீண்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவிழாவில் இளம்பெண்ணின் இடுப்பைக் கிள்ளி, அவளது குடும்பத்தை ஆபத்தில் தள்ளும் நாயகன்!

படம்
      மிளகா நட்ராஜ், பூங்கொடி இயக்கம் ரவி மரியா படத்தில் இசை, பாடல்கள் எல்லாமே சுமார்தான். குறைந்த பட்ஜெட் படம். படத்தின் கதைதான் முக்கியமானது. அலங்காநல்லூர் அழகர் என்ற நாயகன் பாத்திரம்தான் படத்தில் நாயகன், வில்லனும் கூட அவன்தான். இதில் என்ன வேடிக்கை என்றால், அவர் செய்த ஒரு செயலால் நாயகியின் குடும்பமே பாதிக்கப்படுகிறது. ஆனால், அதை நாயகன் அறியாமல் இருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த பிரச்னையே அவரின் கையில் வந்துவிழுகிறது. மிளகாய் மண்டிக்காரரான அவர், பிரச்னையை அவரது வழியில் காரசாரமாக சண்டை போட்டு தீர்த்து வைப்பதே படத்தின் கதை. படத்தில் வரும் முரண், அதற்கான வித்தை நாயகனே செய்திருக்கிறான் என்பது மட்டுமே சற்று ஆர்வமூட்டுகிறது. மற்றபடி சினிமா ஒரே டெம்பிளேட்டில் பயணித்து முடிகிறது. எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குநர் என்பதாலா என்னவோ தெரியவில்லை. நாயகியின் (பூங்கொடி) இடுப்புதான் கதைக்களம். பின்புறமாக இடுப்பை பல்வேறு குளோசப் காட்சிகளில் காட்டுகிறார்கள். அலங்காநல்லூர் அழகர், மிளகாய் மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு ஆப்பம், சோடா, பருத்திப்பால், பண்டு பாத்திரங்கள் விற்கும் ...

நூறு கிராம் முதுகெலும்பு!

படம்
        நூறு கிராம் முதுகெலும்பு! மல்யுத்த வீரருக்கு எதிராக பல கட்டுரைகள், விளக்கங்களை அம்பானி, அதானி வாங்கியுள்ள ஊடகங்கள், நாளிதழ்கள் முன்வைக்கின்றன. நாடாளுமன்றத்தில் மதவாத கட்சி எம்பிகள், இது விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர்களுக்கு ஒரு பாடம் என நக்கலாக பேசுகிறார்கள். மகளிர் ஆணையத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடிகை, கடைசி சிரிப்பு எங்களுடையது என குறியீடாக பதிவொன்றை இடுகிறார். இந்திய ஆட்சித்தலைவர், மல்யுத்த வீரரின் வெற்றிக்கு பாராட்டவில்லை. தகுதிநீக்கத்திற்கு ஆறுதல் சொல்ல முதல் ஆளாக வந்துவிட்டார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர்,மல்யுத்த வீரருக்கு இதுவரை ஆன செலவுகளை எடுத்து படிக்கிறார். ஒரு நாடு தரம் தாழ்ந்த கீழ்த்தரமான ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட வீழ்ச்சியை அடைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இவை.   என்ன எழுதினாலும் கேலி சித்திரக்கலைஞர் சந்தீப் அட்வார்யுவுக்கு நிகராக எதையும் சுருக்கமாக சொல்லிவிட முடியவில்லை. இதோ, மல்யுத்த வீரர் தனது ஓய்வை அறிவித்துவிட்டார். வலதுசாரி மதவாத சக்திகள் வென்றனர். இந்தியா தோற்றது.  

திரைப்படத்துறையில் உள்ள பாலின பாகுபாடு, நிறவெறியை எதிர்த்துப் போராடும் கருப்பின நடிகை!

படம்
  taraji p henson தாராஜி, ஒரு சினிமா நடிகை. இவர் சமூக வலைத்தளங்களில் தனது உடல் நளினத்தை காட்டும் புகைப்படங்களை பதிவிட்டுவிட்டு சொந்த வேலைகளைப் பார்க்க செல்பவரல்ல. ரசிகர்களை சொந்த சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்பவரும் அல்ல. கருப்பினத்தவரான தாராஜி, தன்னைச் சார்ந்த இனக்குழுவினர் ஊடகங்களில், திரைப்படங்களில் பாகுபாடுடன், பாலியல் பிரச்னைகளோடு இருப்பதை வெளிப்படையாக உலகிற்கு கூறியவர். ஒருமுறை நேர்காணலில், தனது அனுபவம், திறமைக்கு ஏற்ற ஊதியத்தை கருப்பின பெண் என்பதற்காக தயாரிப்பாளர்கள் தருவதில்லை என்று வெளிப்படையாக கூறினார். அவர் கூறியபோது அந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. டிவி சேனல், திரைப்படம் என இரண்டிலும் தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் தாராஜி.  தி குயூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் பிராட் ஃபிட்டிற்கு போட்டி கொடுத்து நடித்தவர் தாராஜி. அதற்கு பிராட் பிட் பல மில்லியனில் சம்பளம் பெற்றபோது, தாராஜி பெற்றது 72 ஆயிரம் டாலர்கள் மட்டுமே. இன்றுமே கருப்பின பெண்கள், வெள்ளை இனத்தவர் பெறும் சம்பளத்தில் எழுபது சதவீதம்தான் பெறுகிறார்கள். இதற்கு பாலினம், நிறம...

இந்தியாவை பற்றிய வெளிப்படையாக கருத்துகள்! - சூப்பர் ஸ்டார் இந்தியா! - ஷோபா டே

படம்
  ஷோபா டே இந்தியா சூப்பர்ஸ்டார் ஷோபாடே பெங்குவின்  350 ரூபாய் பழைய அட்டை ஷோபா டே இந்தியாவில் வெளியாகும் தேசிய நாளிதழ்களில் ஏராளமான பத்திகளை எழுதியுள்ளார். இவரின் எழுத்து விசேஷம் என்னவென்றால், சீரியசாக போகும் ஆங்கில கட்டுரையில் திடீரென இந்தி வார்த்தைகளை புகுத்தி எழுதுவதுதான். மேலும் கட்டுரை இப்படித்தான் இருக்கவேண்டுமென்று விதிகள் இல்லாமல் மெல்லிய நகைச்சுவையுடன் எழுதுவார். கட்டுரை முழுக்க இந்தியாவைச் சார்ந்தது. இதில் இந்தியாவின் தன்மை, அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இதனை நானூறு பக்கங்களுக்கு படித்துவிட்டு பிறகு கடைசி மூன்று பக்கங்களில் இந்தியாதான் எனது தாய் நாடு, அதனை நேசிப்பேன் என்று எழுத்தாளர் சொல்லுவது நம்பகத்தன்மையாக இல்லை.  ஆனாலும் நூலை எதற்கு வாசிக்க வேண்டும்? இந்தியாவை புரிந்துகொள்ள என இந்தியா டுடே மாதிரி தான் சொல்லவேண்டும். இந்தியாவில் நிலவும் கலாசாரம், பெண்களை வெறித்துப் பார்ப்பது, அவர்களிடம் மோசமாக நடந்துகொள்வது, வல்லுறவு, பிச்சை எடுப்பது, ஐடி கலாசாரம் புனே நகரை மாற்றி வருவது, வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் செல்வது, அரசியலி...

சாதி, பாலியல் சீண்டல் ஆகியவற்றை சமாளித்து காதலிக்கும் காதலர்களின் கதை! லவ் ஸ்டோரி -தெலுங்கு

படம்
  லவ் ஸ்டோரி தெலுங்கு  இயக்கம் சேகர் கம்முலா இசை பவன் சிஹெச் சாதி, குழந்தை மீதான பாலியல் சீண்டல் என இரண்டு விஷயங்களையும் இயக்குநர் சொல்ல முயன்றிருக்கிறார். நாயகனுக்கு சாதி, நாயகிக்கு பாலியல் சீண்டல் என இரண்டு பிரச்னைகளை சொல்ல முயன்றதில் படமா, பாடமா, சீரியலா என இழுத்துவிட்டது.  ஆஹா தலைப்பு லவ் ஸ்டோரி. அதற்காக கிரியேட்டிவிட்டியாக காதல் எல்லாம் கிடையாது. டான்ஸ் அதையொட்டி வரும் காதல்தான் உள்ளே இருக்கிறது. அதை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். ரேவந்த், மௌனிகா என்ற பாத்திரங்களில் நாக சைதன்யா, சாய் பல்லவி இருவருமே எனர்ஜியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு போட்டி போட்டு இசை கொடுத்திருக்கிறார் பவன் சி.ஹெச். ரேவந்திற்கும், அவரது அம்மாவிற்கும் உள்ள உறவு இயல்பானதாக இருக்கிறது. படத்தின் உயிர்த்தன்மையே எதார்த்தம் குறையாத சில விஷயங்கள்தான்.  ஐயையோ சாதி, பாலியல் சீண்டல் என்ற இரு விஷயங்களுமே தனித்தனியே பார்க்கும்போது தீவிரமானவை. இதனை தனியாகவே படம் எடுக்கலாம். ஆனால் இரண்டையும் ஒன்றாக கொண்டு வரும்போது சிக்கலாகிறது.  ரேவந்த் பாத்திரம் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். முடிவெட்டக்கூ...