இடுகைகள்

அறிவியல் பேச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் பேச்சு நிறைவுப்பகுதி - முதல் கணினி அனிமேஷன் படம் - மிஸ்டர் ரோனி

படம்
          அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி கணினி அனிமேஷனை முதன்முதலில் உருவாக்கியது யார்? 1964ஆம் ஆண்டு, ரூதர்போர்ட் அப்ளெட்டன் லேபோரட்டரி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரில் தொடங்கப்பட்டது. இங்குதான் ஃபெரான்டி அட்லஸ்1 என்ற சூப்பர் கம்யூட்டர் இயங்கியது. அப்போது இதன் விலை 3 மில்லியன் பவுண்டுகள். இதற்கென இரண்டு மாடி கட்டிடம் தேவைப்பட்டது. அட்லஸ் கணினியின் புரோசசர் 5, 600 சர்க்கியூட் போர்டுகளைப் பயன்படுத்தியது. ஏறத்தாழ தற்போதுள்ள சிப்களை விட 90 ஆயிரம் மடங்கு அதிகம். அட்லஸ் கணினி மூலம் எம்6 என்ற பாலத்தின் மாடல் அனிமேஷனால் கட்டமைக்கப்பட்டது. இந்த படத்தை 1976ஆம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச தொழி்ல்நுட்ப திரைப்படப் போட்டியில் திரையிட்டனர். மூல நூல் ஹவ் மெனி மூன்ஸ் டஸ் தி எர்த் ஹேவ் - பிரையன் கிளெக் மேலும் வாசித்து அறிய... 30-Second Evolution, (eds) Mark Fellowes and Nicholas Battey (Icon Books, 2015) A Brief History of Infinity: The Quest to Think the Unthinkable, Brian Clegg (Constable & Robinson, 2003) Aspirin, Diarmuid Jeffreys (Bloomsbury Publishing, 2...

ரோபோட்டுகள், லென்சின் வடிவம், பேவாட்ச் குறைந்த நேர கொள்கை - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
            அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி ரோபோட்டுகள் என்றால் என்ன? 1920ஆம் ஆண்டு ரோபோட் என்ற சொல்லை காரெல் கெபெக்கின் நாடகம் வழியாக மக்கள் அறிந்துகொண்டனர். நாடகத்தின் பெயர் ஆர் யு ஆர். ரோபோட்டுகள் என்பவை எந்திரக்கருவிகள், குறிப்பிட்ட செயல்களை தொடர்ந்து செய்ய பயன்படுத்தப்படுகின்றன. கார் தொழிற்சாலையில் உள்ள ரோபோ கரம். வீட்டை சுத்தம் செய்யும் ரோபோ வேக்குவம் க்ளீனர்.ஆகியவற்றை உதாரணமாக கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்துகிற சொல்லாக மாறியுள்ளது. ஆண்ட்ராய்டின் மூலம் கிரேக்க மொழி. இதற்கு மனிதனைப் போல என்று அர்த்தம். பேவாட்ச் கொள்கை என்றால் என்ன? பேவாட்ச் படத்தில் பிரியங்கா சோப்ரா, இன்னும் வேறு பிகினி அழகன், அழகிகளைப் பார்த்து கட்டழகில் உலகை மறந்திருப்போம். அதில் முக்கியமான காட்சிகளில் ஒன்று, கடல் நீரில் மூழ்கியவர்களை வீரர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது... கடலில் மூழ்கியவர்களை குறைந்த நேரத்தில் ஓடிச்சென்று காப்பாற்ற வேண்டும். லைஃப் கார்டுகள் நேரடியாக நீரில் மூழ்கி செல்வதை விட படகுகள், அதற்கென உள்ள வண்டிகளை பயன்படுத்தி ஆபத்திலுள்ளவர்களை சென்றடைவார்கள். ந...

சூரியன், நிலவு பிரகாசம், ஐன்ஸ்டீனின் வேலை, திரள்மேகம் - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
            அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தபோது, பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்ற செய்தி உண்மையா? இல்லை. அப்போது அவர் பெர்ன் நகரில் உள்ள சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். 1905ஆம்ஆண்டு ஐன்ஸ்டீன் தனது வாழ்க்கையில் புகழ்பெற்ற மூன்று ஆய்வுக்கோட்பாடுகளை வெளியிட்டார். 1909ஆம் ஆண்டு, அவருக்கு ஜூரிச் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. அந்த ஆண்டில்தான் E=mc ஸ்கொயர்ட் என புகழ்பெற்ற சமன்பாட்டை கல்வி தொடர்பான மாநாட்டில் சமர்ப்பித்தார். அப்போது அவரின் வயது முப்பது. அன்றைய காலகட்ட வழக்கப்படி, முப்பது வயதில் பெரும்பாலான அறிவியலாளர்களின் அறிவியல் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிடும் காலம். ஆனால், அந்த வயதில் இருந்துதான் ஐன்ஸ்டீனின் அறிவியல் பயணம் தொடங்கியது. க்ளவுட் நைன் என்றால் என்ன அர்த்தம்? நேரடியான அர்த்தம் என்பது நான் மகிழ்ச்சியாக திருப்தியாக இருக்கிறேன் என்று கூறலாம்.அறிவியல் அடிப்படையில் ஆழமாக சென்றால், மேகத்தின் வகைகளில் க்ளவுட் நைனும் ஒன்று. மேகத்தில் மொத்தம் 52 வகைகள் உண...

பசுமை இல்ல வாயுக்கள் இல்லாத உலகம், மத நெருக்கடிகளை எதிர்கொண்ட ரோஜர் பேக்கான்

படம்
            அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி உலகில் பசுமை இல்ல வாயுக்களே இல்லை என்றால் பூமியின் வெப்பம் என்னவாக இருக்கும்? தோராயமாக மைனஸ் 15 டிகிரி தொடங்கி மைனஸ் இருபது டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பசுமை இல்ல வாயுக்களின் காரணமாகவே பூமியில் தோராய வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக உள்ளது. முற்றாக பசுமை இல்ல வாயுக்களே இல்லை என்றால் நம் வாழ்க்கை முற்றாக பூமியில் இல்லாமல் போய்விடும். அளவோடு இருப்பது நல்லது. கூடவும் கூடாது, குறையவும் கூடாது. சூரிய வெப்பம் பசுமை இல்ல வாயுக்களின் ஊடாகவே பூமிக்கு வருகிறது. இந்த வெப்பம் வாயுக்களின் காரணமாகவே பூமியில் தங்குகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அளவை தாண்டாமல் இருந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கான காலநிலையை உருவாக்குகிறது. குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு, தாவரங்கள் வளர்வதற்கு அத்தியாவசியம். கார்பன் அனைத்து தாவரங்கள், விலங்குகள் வாழ்க்கைக்கும் தேவையான ஒன்று. ரோஜர் பேக்கான் என்பவர் யார்? 1214 அல்லது 1220 ஆண்டில் பிறந்தவர் என்றே கூறவேண்டியுள்ளது. இவர் ஒரு அறிவியலாளர். ரோஜர் பேக்கானை பலரும் தத்துவவாதி பிரான்சிஸ் பேக்கானோட...

சைனீஸ் ரெஸ்டாரெண்ட் சிண்ட்ரோம் - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
                  நமக்கு ஐந்து உணர்வுநிலைகள் மட்டுமே உள்ளன? அதைவிட அதிகமாக இருக்கலாம். பறவைகளால் பூமியின் மின்காந்த அலைகளை உணர முடியும். கடலில் உள்ள சுறாக்கள், தம் இரை உமிழும் மின் புலங்களை எளிதாக அறிந்துவிடுகின்றன. வௌவால் திசையறிய மீயொலிகளைப் பயன்படுத்துகின்றன. சில உயிரினங்களால் அக ஊதாக்கதிர்கள், புற ஊதாக்கதிர்களை எளிதாக அறிய முடிகிறது. நாயைப் பொறுத்தவரை வாசனையை முகர்வதுதான் அதன் வாழ்க்கையே.அதில் தடுமாறும்போது அதனால் எதையும் கண்டறிய முடியாது. மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஐந்து உணர்வு நிலைகளுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு இடத்திற்கு சென்றால், அந்த இடத்தைப் பற்றிய அறிவை ஐம்புலன்களும் நமக்கு அளிக்கின்றன. இந்த தகவல்களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட முறையில் விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். தடுப்பூசி போடு்ம்போது ஏற்படும் வலிக்கும், மிளகாயை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வலி உணர்வுக்கும் வேறுபாடு உண்டு. சைனீஸ் ரெஸ்டாரெண்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன? சீன உணவுகளை குறிப்பாக மோனோ சோடியம் குளுட்டமேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்ட உணவுகளை கொலைப்...

உப்புச்சுவையை உணரும் நாக்கு - எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
      அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி நாக்கில் எந்த பகுதி உப்புச்சுவையை அறிகிறது? அனைத்து பகுதிகளுமேதான். சிலர் நாக்கில் குறிப்பிட்ட பகுதி உணவில் உள்ள சில சுவைகளை அறிகிறது என வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். போலிச்செய்திகள் என்பதை உருவாக்க இன்று ஏஐயைக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். உண்மைக்கு நிரூபணம் தேவை. பொய்க்கு குழப்பமே போதும் அல்லவா? எனவே வதந்திகளை நம்பாதீர்கள். நாக்கில் குழுவாக, குறிப்பிட பகுதியில் சுவையை தனியாக உணரும் சுவை மொட்டுகள் ஏதுமில்லை. அறுசுவைகளை நாக்கில் உள்ள அனைத்து சுவை மொட்டுகளுமே அறிய முடியும். குறிப்பிட்ட பகுதியில் அந்த சுவை தெரிகிறது என நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் ஹல்லுசினேஷன்தான். உடனே சென்று டாக்டர் தசாவதாரத்தைப் பாருங்கள். 2 எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன? மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள், பரிணாம வளர்ச்சி ஆய்வாளர்கள் ஆகியோர் ஒரே உயிரினத்திலிருந்து மனிதன், எலி, சி்ம்பன்சி ஆகியோர் உருவாகி பரிணாம வளர்ச்சிப்படி வளர்ந்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மனிதர்களோடு எலி எழுபது தொடங்கி எண்பது மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கலாம் என ஆ...

தலையில் எத்தனை மயிர்க்கற்றைகள் உள்ளன?

படம்
      தலையில் எத்தனை மயிர்க்கற்றைகள் உள்ளன? 10 ஆயிரம் மயிர்க்கற்றைகள். குரங்குகளுக்கு உடல் முழுக்க உரோமங்கள் உண்டு. இப்படி இருப்பது தோலுக்கு பாதுகாப்பு. வெப்பம், குளிர் ஆகிய பருவகால மாறுதல்களையும் எதிர்கொள்ள உதவியது. பரிணாம வளர்ச்சிப்படி, மனிதர்கள் ஆதிகாலத்தில் உடல் முழுக்க முடிகளைக் கொண்டிருந்தாலும் அதற்கான தேவை குறைந்துவிட்டது. வெற்று உடலாக இருந்தால் முடி தேவை. உடைகளை உடுத்தியபோது உடலிலுள்ள உரோமங்கள் மெல்ல குறையத் தொடங்கின. பிறகு அவை காலப்போக்கில் உருவாகவில்லை. உருவான உரோமங்கள் கூட குறிப்பிட்ட நீளத்தில் வளர்ச்சி நின்றுவிட்டது. ஆனால் தலைமுடி அப்படியில்லை. தலைமுடி என்பது இறந்த செல் போன்றது. அது வளருகிறது என ஷாம்பூ விற்பவர்கள் நடிகைகளை பேன் காற்றில் முடியை பறக்கவிட்டு விளம்பரம் எடுப்பார்கள். அது உடான்ஸ். உண்மையல்ல. பொய்களை திரும்ப திரும்ப சொல்லும்போது நூறில் பத்து பேராவது நம்புவார்கள். ஆனால், இப்படியான பொய்களை இ்ந்தியா போன்ற மூடநம்பிக்கை கொண்ட பகுத்தறிவு குறைந்த சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர்களும் நம்புவதுதான் வேதனை. அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முடி வளருவது அழகு என்று ...

ஒரு பறவை பறக்கும் அதிகபட்ச உயரம்! - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
          அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி ஒரு பறவை பறக்கும் அதிகபட்ச உயரம் என்ன? 38 ஆயிரம் அடி. பொதுவாக பறவைகள் இரண்டாயிரம் அடிகளுக்கு மேல் பறப்பதில்லை. நீர்ப்பறவைகள் நான்காயிரம் அடிகளைத் தொடுகின்றன. இப்படி பறக்கும் விஷயம் கூட அரிதானதுதான். வாத்து, மலார்ட், அன்னப்பறவை, பட்டைத்தலை வாத்து ஆகியவை இருபதாயிரம் அடி தொடங்கி முப்பதாயிரம் அடி வரை உயர்ந்து பறக்கின்றன. உயரமாக பறக்கும் பறவைகள் பெரும்பாலும் வலசை செல்லுபவையாக உள்ளன. கேள்விக்கு வருவோம். ரப்பல்ஸ் கிரிஃபோன் ruppells griffon என்ற பறவை, மூன்று மீட்டர் நீளம் கொண்ட இறக்கைகளைக் கொண்டது. இதுவே 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது. இதில் துரதிர்ஷ்டம் இப்படி பறந்து விமானத்தின் எந்திரத்தில் சிக்கிக்கொண்டு உயிரைவிட்டுவிட்டது. இதை கின்னஸ் புத்தகத்தில் கூட பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து பம்பிள்பீ அதிக உயரம் பறக்கும் பட்டியலில் இடம்பெறுகிறது. இதற்கடுத்து நுண்ணுயிரிகள் வருகின்றன. பாக்டீரியா, 65 ஆயிரம் அடிவரை பரவியுள்ளன. கான்கார்டு விமானமே 56 ஆயிரம் அடி உயரம்தான் பறக்கிறது. எனவே, தங்கவேலு நாடார் கடையில் பரிசுக்கப்பை பெயர்...

விலங்குகளின் குணநலன்கள் என்ன?, நம் கண்களால் பார்க்க முடிந்த தொலைவு? - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
              ஈத்தாலஜி என்பது என்ன? எதைப்பற்றியது? கிரேக்க மொழியில் இருந்து உருவான சொல் ஈத்தாலஜி. ஒருவரின் செயல், நடத்தை, அறம் ஆகியவற்றைக் குறிப்பது. தற்போது, விலங்கியல் பக்கம் நகர்ந்து விலங்கின் நடத்தை என்பதாக மாறிவிட்டது. 1872ஆம் ஆண்டு டார்வின், தி எக்ஸ்பிரஷன் ஆப் தி எமோஷன் என்ற நூலை எழுதினார். மனிதர்களின் உணர்வு வெளிப்பாட்டுத்தன்மை, விலங்குகளின் நடத்தைக்கு அடிப்படையாவதுஎப்படி என ஆய்வு செய்து எழுதியிருந்தார். 1950களில் விலங்குகளின் நடத்தை எப்படி மாறுகிறது என கான்ராட் லோரன்ஸ் என்பவர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார். அதில், விலங்குகளை தூண்டிவிடும் இயல்பு கொண்டதாக இனப்பெருக்க கால துணையின் நடனம், வாசனைகள் உள்ளன என கண்டறிந்தார். இப்போதும் தேனீக்கள், எறும்புகளைப் பார்த்தால் உலகில் அவை மட்டுமே உள்ளது என எண்ணுவதைப் போல குழுவாக எதிலும் மூக்கை நுழைக்காமல் வேலை செய்துகொண்டிருக்கும். விலங்குகள் தனியாக செயல்படும்போது உற்பத்தி திறன் கொண்டவையாகவும், குழுவாக இருக்கும்போது பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் கூடுவதையும் ஆராய்ச்சிகள் காட்டின. இனக்குழுவின் நன்மைக்காக தன்...

சப்லைமினல் அட்வர்டைசிங் என்றால் என்ன?

படம்
              சப்லைமினல் அட்வர்டைசிங் என்றால் என்ன? மிஸ்டர் ரோனி ஒரு திரைப்படத்தில் அல்லது கே டிராமாவில் குளிர்பானம், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனைக் காட்டி விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது இப்படி காட்டினால் அதை மக்கள் பின்பற்றுவார்கள் என நிறுவனத்தினர் நம்புகிறார்கள். இதை ஜேம்ஸ் விகாரி என்பவர், திரைப்படத்தின் வழியாக சோதித்து பார்த்தார். அதற்காக இவர் கொக்ககோலாவையும், சோளப்பொரியையும் கையில் எடுத்தார். படத்தில் மிகச்சில நொடிகளே வரும்படி கோலாவைக் காட்டினார். இதன்மூலம், கோலாவின் விற்பனையும், சோளப்பொரியும் விற்றுத் தீர்ந்தது. கோலா 18.1 சதவீதமும், சோளப்பொரி 57.5 சதவீதமும் விற்பனை கூடியதாக விகாரி தகவல் கூறினார். வெளிநாடுகளில் குளிர்பானம், சோளப்பொரி ஆகியவை சேர்த்தே காம்போவில் டிக்கெட்டோடு வாங்குவது விதியாக உள்ளது. இதை மனதில் கொள்ளுங்கள். இந்தியாவில் பிவிஆர் நிறுவனம், தற்போது திரையரங்கில் விற்கும் சோளப்பொரிகளை தனியாக கடைபோட்டு விற்க தொடங்கியுள்ளது. நொறுக்குத்தீனிக்கான வேட்கை மக்களிடையே அந்தளவு பெருகியுள்ளது. திரையரங்கில் தீனிகளை தின்பது என்பதே தனி சந்தையாக மாறி வர...

அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி - காரிங்க்டன் நிகழ்ச்சி என்றால் என்ன?

படம்
       காரிங்க்டன் நிகழ்ச்சி என்றால் என்ன? மிஸ்டர் ரோனி ரிச்சர்ட் காரிங்க்டன் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர். சூரியனை கண்காணித்து அதன் மாற்றங்களை பதிவு செய்தவர். அதன் மேற்புறத்தில் நடைபெறும் சுழற்சி, சீரற்றதாக உள்ளது என கண்டுபிடித்துக் கூறினார். சூரியனில் நடைபெறும் வேதி வினைகள் காரணமாக மின்காந்த அலைகள் அதிகளவில் வெளியேறுகிற நிகழ்வை காரிங்க்டன் நிகழ்ச்சி என்று கூறுகிறார்கள். 1859ஆம் ஆண்டு வானியலாளர் காரிங்க்டன் இப்படியான நிகழ்ச்சி ஒன்றை பதிவு செய்தார். அன்று, மின்காந்த அலைகளின் பாதிப்பு உலகிற்கு பெரிதாக இல்லை. மின்னணு பொருட்கள் குறைவாக பயன்பாட்டில் இருந்தன. மின்சார வசதிகளும் பேரளவில் பரவலாகவில்லை. ஆனால் தந்தி முறை பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. அலுவலகங்களில் நெருப்பு பற்றிக்கொண்டது. முழு எந்திரங்களையும் பாதித்தது. சூரிய மின்காந்த தாக்குதல், சீரான இடைவெளியில் நடப்பவை என கணிக்க முடிவதில்லை. இந்தமுறை அதுபோல தாக்குதல் நடந்தால், செயற்கைக்கோள்கள் நிரந்தரமாக பழுதாகும். பூமியில் உள்ள தகவல் தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்படும். அமெரிக்க அறிவியல் அகாடமி இதுபற்றிய ஆய்வை ...

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? - மிஸ்டர் ரோனி

படம்
            பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? இதற்கான பதிலை பலரும் அறிந்திருப்பார்கள். பதில் சொல்வதும் எளிதுதான். ஆனால் அதன் பின்னணிதான் இங்கு முக்கியம். சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளுக்கு 67 நிலவுகள் உள்ளன. இதில் பெரிய நிலவின் பெயர், கனிமெட். 2600 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதுவே பிற கோள்களுக்கும் நிலவு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள தகவல். இதுபற்றிய டிவி வினாடி வினா நிகழ்ச்சியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஜீரோ தொடங்கி பதினெட்டாயிரம் நிலவுகள் வரை பதில் தரலாம் என கூறப்பட்டது. ஆனால் பொருத்தமான உண்மைக்கு அருகில் உள்ள பதில் ஒன்று. பூமிக்கு ஒரு நிலவு உள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏராளமான பாறைக்கோள்கள் வட்டப்பாதைக்கு வருகின்றன. பல்லாண்டுகளாக சுற்றி வருகின்றன. அவற்றை நாம் நிலவு என்று கூறுவதில்லை. இதற்கு காரணம் இரண்டே விஷயங்கள்தான். துல்லியமாக சொன்னால் அறிவியலாளர்கள் வகுத்த இரண்டு விதிகள். அவை ஆயிரம் ஆண்டுகளாக வட்டப்பாதையில் சுற்றிவர வேண்டும். அதன் அளவு ஐந்து கி.மீ. என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்கவேண்...