இடுகைகள்

களைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல் களைத்து தளர்ந்து தூங்குகிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி மிகவும் உடல் தளர்ந்து சோர்ந்து தூங்குவது சாத்தியமா? கணக்கு பாடத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தாலே தலை கிறுகிறுவென்று ஆகி படுத்து தூங்கியவனைப் பார்த்து இந்தக்கேள்வி. பொதுவாக நமக்கு ஐம்புலன்கள் பகலில் வேலை செய்யும். அதில் சிலருக்கு பாரபட்சமாக சில உறுப்புகள் வேலை செய்யப்பட திறன்கள் மாறும். ஆனால் இயல்பாக கண்கள் சோர்ந்து போனால், மூளை படுத்துவிடும். உடனே ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவது போல எதையும் செய்ய முடியாது. உடனே தூங்கிப்போனால் உடல் புத்துணர்ச்சியோடு எழும். அப்போது உணவு, தண்ணீர் கூட உடலுக்கு தேவைப்படாது. பேய்த்தூக்கம் போல சிலர் தூங்குவார்கள். மிகவும் உடல் தளர்ந்து தூங்குவது என்பது அரிசி மூட்டை தூக்குவது, பழக்கமின்றி திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுவது போன்றவை செய்தால் நிச்சயம் கடுமையாக சோர்ந்து போய் தூக்கம் வரும். நன்றி - பிபிசி