இடுகைகள்

நோட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கையால் எழுதுவதற்கும், மூளையின் சிந்தனைத்திறனுக்கும் தொடர்பு உண்டு!

படம்
கையால் எழுதினால் சிந்தனைத்திறன் கூடும்! அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படங்களை நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் அமெரிக்க நாட்டினர், அதிபர் கையெழுத்தை பதிவு செய்து வைத்து அதை கோப்புகளில் பயன்படுத்தவென ஆட்டோபென் என்ற கருவியை தொண்ணூறுகளிலேயே உருவாக்கிவிட்டனர். இதைக் கேட்கும்போது, எந்திரம் கையெழுத்திடுவதைப் பற்றிய சந்தேகம் மனதில் தோன்றலாம். ஆட்டோபென் கருவி, இன்றும் பயன்பாட்டில் உள்ளது. கையால் எழுதுவது என்பது ஒருமுறை எழுதியது போல மறுமுறை இருக்காது. எந்திரம் கையெழுத்தை அப்படியே நகல் செய்துவிடும். கோப்புகளில் எழுதுவது, கையெழுத்திடுவது இன்றும் சமூக, அரசியல், பொருளாதார வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கையால் எழுதுவது இளையோரிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. 2012ஆம் ஆண்டு, அமெரிக்க பள்ளி நிர்வாக சங்கம் ஆய்வொன்றைச் செய்தது. அதில், 33 சதவீத அமெரிக்க மாணவர்கள் பெரிய, சிறிய ஆங்கில எழுத்துகளை எழுதுவதில் தடுமாறுவது தெரிய வந்தது. இளையோரும் தாளில் தங்களது கருத்தை நண்பர்களுக்கு எழுதக்கூட திணறினர். தட்டச்சு எந்திரம் தொட...