இடுகைகள்

ஸ்மூத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழச்சாறு vs ஸ்மூத்தி Vs கார்பன் பானங்கள் எது சிறந்தது?

படம்
pixabay உடனுக்குடன் பிழியப்பட்ட பழச்சாறு, பழத்திலிருந்து எடுக்கப்பட்ட கான்சென்ட்ரேட் என இரண்டு இருக்கிறது. இவற்றில் எது நல்லது? இரண்டிலும் வித்தியாசம் ஏதுமில்லை. கான்சென்ட்ரேட்டில் கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதாவது ப்ரக்டோஸ். இது கலோரி அளவைக் கூட்டுகிறது. இது சிறுவர்களின் பற்களை பெருமளவு பாதிக்கிறது. பெப்சி, கோலா இவற்றைவிட பழரசம் சிறப்பானது என நினைப்பீர்கள். ஆனால் பழரசத்தில் சர்க்கரை அளவை குறைத்துக்கொண்டால் மட்டுமே நீரிழிவு போன்ற பிரச்னைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். இல்லையெனில் நீரிழிவு பிரச்னை பெரியவர்களுக்கு மட்டுமல்ல ப்ரூட்மிக்ஸ் குடிக்கிற சிறுவர்களுக்கும் வந்துவிட வாய்ப்பு உள்ளது. பழங்கள், காய்கறிகளை கலந்து செய்யும் ஸ்மூத்தி பழச்சாறுகளுக்கு நல்ல மாற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றை கவனமாக தயாரிக்கவேண்டும். ஒவ்வொரு பழங்களுக்கும் உள்ள தன்மையைப் பொறுத்தே அவற்றை ஒன்றாக சேர்க்கவேண்டும். இவற்றைக் குடித்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் இதிலுள்ள இயற்கையான சர்க்கரையும் கூட பற்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பழச்சாறுகளையோ