இடுகைகள்

முசோலினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனிரெண்டு ஆண்டுகளில் நாட்டையே அதிரடி சட்டங்களால் மாற்றியமைத்த ஆட்சியாளர் ! ஹிட்லர் - பா.ராகவன்

படம்
                ஹிட்லர் பா . ராகவன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பனிரெண்டுகள் ஆண்ட ஆட்சியை , வளர்ச்சியை , அழிவை , மனநிலையை , பழக்க வழக்கங்களை வாசிக்க எளிமையான முறையில் சுவாரசியமாக சொல்லுகிற நூல்தான் இது . மருதன் எழுதிய ஹிட்லர் என்ற நூலும் , பா . ராகவனின் நூலும் வேறுபடுகிற இடம் ஆய்வுத்தன்மைதான் . மருதனின் நூல் ஹிட்லரின் பல்வேறு பரிணாமங்கள் , அவரின் சிந்திக்கும் திறன் , பேச்சு ஆகியவற்றை ஆய்வு நோக்கில் எது சரியாக இருக்க முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறது . பா . ராகவனின் இந்த நூல் அந்தளவு தொலைவாக செல்லவில்லை . ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளை சந்தர்ப்பவாதி ஒருவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதை ஹிட்லர் நூல் மூலம் காட்டியுள்ளார் . பலரும் இன அழிப்பு , யூதர்களின் துன்பம் என்பதை மட்டும் முக்கியப்படுத்தும்போது பொருளாதார வளர்ச்சி சார்ந்து நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார் . இது ஆச்சரியகரமான ஒன்று என கூறலாம் . ஹிட்லரின் செயல்திறனுக்கும் கனவுக்க்கும் உழைக்கும் திறனுக்கும் அவர் வேறு வழியில் சென்றிருந்