இடுகைகள்

அனிமேஷன் - ப்ளீச் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடவுள் பாதி சாத்தான் மீதி -ப்ளீச் அனிமேஷன்

படம்
Bleach(1-41 Episodes)  இச்சிகோ குரசாகி ஸ்கூல் மாணவன். தாய் ஒரு விபத்தில் இறந்துவிட அதற்கு காரணம் தான்தான் என்ற குற்றவுணர்வு அவனை விரக்தியில் தள்ளுகிறது. தாய் இறப்புக்கு காரணமான இச்சிகோவை தந்தை, சகோதரிகள் உட்பட யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பதுவும் பெரும் மனச்சோர்வை தர விதியே என பள்ளி சென்று வந்து கொண்டிருக்கிறான். அப்போது நேரும் விபத்தில் ருக்கியா என்ற ஆவியுலக பெண்ணை சந்திக்கிறான். கண்ணுக்கு தெரியாத ஹாலோ என்ற விநோத ஜீவன்களோடு மோதும் முயற்சியில் ருக்கியா காயமுறுகிறாள். அப்போது அவளின் சக்தியை இச்சிகோ பெற்று மக்களை கொல்லும் விலங்குகளை வாள்முனையில் தீர்த்து கட்டுகிறான். ஆனால் அதன்பிறகு அவன் வாழ்க்கையே மாறுகிறது. ருக்கியாவை தேடி ஆவிச்சங்க அதிகாரிகள் வர பிரச்னை தீவிரமாகிறது. ருக்கியாவை அவர்கள் கூட்டிச்செல்ல அதனை இச்சிகோ தடுத்தானா, அவனுக்குள் இருக்கும் சக்தி கடன்வாங்கியதுதானா? அவன் வாழ்வின் சோகத்திற்கு காரணம் என்ன என்பதே ப்ளீச் அனிமே கதை.  2004 ஆம் ஆண்டு டோக்கியோ டிவியில் வெளியான அனிமே கதை இது.  இச்சிகோ, ருக்கியா, ஒரு தலைக்காதலி ஓரிஹிமே, முரடன் சாட், விவேகி இஷிதா, பழிக்க