கட்டற்ற மென்பொருட்களின் பயன் என்ன?
அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கணினி வைரஸ் எப்படி பரவுகிறது? கணியம் சீனிவாசன் போல கோடிங் அறிவுகொண்ட நபர்கள், உலகிற்கு தன்னை நிரூபிக்க நினைத்து எழுதும் புரோகிராம்கள்தான் வைரஸ்கள். சீனி, கிடைக்கும் ஓய்வு நேரத்தை தமிழை மேம்படுத்த கணித்தமிழுக்காக உழைக்கிறார். வைரஸ் உருவாக்கும் கோடர்கள், சுயநலனுக்காக வேலை செய்கிறார்கள். இதில் லாபத்தை விட அழிவின் சந்தோஷமே அதிகம். விஷமமாக எழுதி அனுப்பப்படும் புரோகிராம்கள் மூலம் ஒருவரை உளவு பார்க்கலாம், அவரின் மின்னஞ்சலை செய்தியை படிக்கலாம். அழிக்கலாம். கணினியை முழுமையாக கட்டுப்படுத்தக்கூட செய்யலாம். இப்போது டிஜிடல் அரஸ்ட் என்று செய்திகள் கூட வருகிறதே அந்தளவுக்கு வேலைகளை செய்யலாம். 2000ஆம் ஆண்டில் ஐலவ்யூ என்ற வைரஸ் கணினிகளில் பரவி, ஐந்து பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார சேதத்தை விளைவித்தது. வைரஸ்களைக் கட்டுப்படுத்த இலவச, கட்டண சேவைகள் உள்ளன. ஒருகட்டத்தில ஆன்டி வைரஸ் நிறுவனங்களே ஆபத்தானவை என்று கூட பிரசாரம் செய்யத் தொடங்கினர். இன்று உருவாக்கப்படுகிற வைரஸ்கள், பணம் பறிக்க பயன்படுகின்றன. தகவல்களை திருடி கருப்பு இணையத்தில் விற்கிற...