கட்டற்ற மென்பொருட்களின் பயன் என்ன?

 

 

 

 

 





அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி

கணினி வைரஸ் எப்படி பரவுகிறது?
கணியம் சீனிவாசன் போல கோடிங் அறிவுகொண்ட நபர்கள், உலகிற்கு தன்னை நிரூபிக்க நினைத்து எழுதும் புரோகிராம்கள்தான் வைரஸ்கள். சீனி, கிடைக்கும் ஓய்வு நேரத்தை தமிழை மேம்படுத்த கணித்தமிழுக்காக உழைக்கிறார். வைரஸ் உருவாக்கும் கோடர்கள், சுயநலனுக்காக வேலை செய்கிறார்கள். இதில் லாபத்தை விட அழிவின் சந்தோஷமே அதிகம். விஷமமாக எழுதி அனுப்பப்படும் புரோகிராம்கள் மூலம் ஒருவரை உளவு பார்க்கலாம், அவரின் மின்னஞ்சலை செய்தியை படிக்கலாம். அழிக்கலாம். கணினியை முழுமையாக கட்டுப்படுத்தக்கூட செய்யலாம். இப்போது டிஜிடல் அரஸ்ட் என்று செய்திகள் கூட வருகிறதே அந்தளவுக்கு வேலைகளை செய்யலாம்.

2000ஆம் ஆண்டில் ஐலவ்யூ என்ற வைரஸ் கணினிகளில் பரவி, ஐந்து பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார சேதத்தை விளைவித்தது. வைரஸ்களைக் கட்டுப்படுத்த இலவச, கட்டண சேவைகள் உள்ளன. ஒருகட்டத்தில ஆன்டி வைரஸ் நிறுவனங்களே ஆபத்தானவை என்று கூட பிரசாரம் செய்யத் தொடங்கினர். இன்று உருவாக்கப்படுகிற வைரஸ்கள், பணம் பறிக்க பயன்படுகின்றன. தகவல்களை திருடி கருப்பு இணையத்தில் விற்கிறார்கள். வைரஸ்களை கண்டறிவது எளிதான காரியமல்ல. பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் இயக்கமுறை கணினிகளே குறிவைத்து தாக்கப்படுகின்றன.

ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் என்றால் என்ன?

ப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளத்தில் இதற்கென புத்தகங்களே கிடைக்கின்றன. தரவிறக்கி படியுங்கள். கட்டற்ற மென்பொருட்கள், திறமூல மென்பொருட்கள் என கூறலாம். இதன் கோடிங்குகளை பயனர்களே மாற்றிக்கொள்ளலாம். அதற்கு அதை உருவாக்கியவரின் அனுமதி பெறத் தேவையில்லை. கட்டற்ற மென்பொருட்கள் என்பதன் அர்த்தம், அவை இலவசம் என்பதல்ல. அதன் கோடிங்குகளை நீங்கள் பார்க்க முடியும், மாற்றிக்கொள்ள முடியும் சுதந்திரத்தை குறிப்பிடுகிறார்கள். இந்தவகை மென்பொருட்களை காசுக்கும் விற்கிறார்கள். கருத்தியலில் குழப்பம் ஏற்பட்டால், ஃப்ரீ சாப்ட்வேர் பவுண்டேஷனுக்கு சென்று பார்வையிடுங்கள்.

கட்டற்ற மென்பொருட்கள், காபிலெப்ட் என்ற உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகின்றன. இதில் யாருக்கும் காப்பரிமை பணம் செல்லாது. ஆனால் பயனர்களுக்கு மென்பொருள் பிடித்திருந்தால் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த நன்கொடைகளை வழங்கலாம். இதனால் அவரும் அவர் சார்ந்த குழுவும் ஊக்கம் பெறுவார்கள். எடுத்துக்காட்டு விஎல்சி. இந்த நிறுவனம் கட்டற்ற மென்பொருள்தான். ஆடியோ,வீடியோ இயக்க மென்பொருளில் விஎல்சி சிறப்பானது.




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்