கிராமம், பழங்குடிகள் வாழும் இடங்களுக்கு சென்று மருத்துவ மாணவர்கள் சிகிச்சையளிக்க முன்வரவேண்டும் - நேரு உரை

 

 

 


 




மருத்துவத்தில் இந்தியா தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளது. நமக்கு முன்னும் பின்னும் ஏராளமான மருத்துவர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள் புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் தேவையும் சேவையும் இந்தியாவைக் கடந்தும் கூட இருந்துள்ளது. இன்று யோசிக்கும்போது தொன்மை மருத்துவர்கள், வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களை மக்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.




அவர்கள் திறமையான மருத்துவர்களாக இருந்ததோடு, காலத்தால் மேம்பட்ட சிகிச்சை முறையைக் கையாண்டனர். அவர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களையே நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். அதேசமயம், நாம் இன்னும் பழைமையான முறைகளை விட்டு நவீனமாக காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. மக்களுக்கு அதிகளவு உதவி தேவைப்படும் சமயத்தில் கூட அறிவை புத்துயிர்ப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ளவில்லை.


இப்போது செயல்படவிருக்கும் மருத்துவ நிறுவனம், அறிவியலை அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். பழைமையான முறைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறவில்லை. அவை சரியானதாக இருந்து லாபம் கிடைக்க கூடியதாக இருந்தால் அதை பின்பற்றலாம். பழைமையான முறைகளில் எது பொருத்தமாக இருக்கிறதோ அதைக் கடைபிடிக்கலாம். தொன்மையான காலத்து மருத்துவர்கள் சிறப்பானவர்கள்தான். அப்போது, அறிவியல் தொழில்நுட்பங்களோ, புதிய சிகிச்சை நுட்பங்களோ நவீன காலத்தைப்போல கிடைத்திருக்காது அல்லவா?


மருத்துவ நிறுவனத்தின் தடுப்பு மற்றும் சமூக மருந்துகளை முக்கியமானதாக கருதுகிறேன். அவை நவீன காலத்திற்கு அவசியமானவை. இதுபற்றி விரிவாகப் பேச எனக்கு மருந்துகள் பற்றிய போதிய அறிவு இல்லை. எனவே, நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவது அவசியம். எனவே, அந்த நோக்கில் நோய்களை முன்னமே வராமல் தடுக்கும் தடுப்பு மருந்துகள் முக்கியமானவை. அந்த வகையில் நீங்கள் மருந்துகளைப் பற்றி கவனத்தோடு இயங்குவீர்கள் என நம்புகிறேன்.


இந்தியா பரந்து விரிந்த நாடு. இங்கு ஏராளமான கிராமங்கள், நகரங்கள் என ஏராளம் உண்டு. என் கண்முன்னே உ ள்ள மருத்துவ நிறுவனம் போல நாடு முழுக்க நிறுவனங்கள் அமைந்து அதன் வழியாக, நவீன சிகிச்சையும், மருந்துகள் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும். சிறந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள், நவீன கருவிகள் என நிறைய விஷயங்கள், மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இப்படியான அமைப்பு இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கிராமங்களைச் சென்றடையவேண்டும் என விரும்புகிறேன். இதற்கு தேவையான பணியாளர்களை எப்படி பயிற்சி அளிப்பது என யோசிக்க வேண்டும்.




இதுபோல மருத்துவ நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுபவர்கள், கிராமங்களில் வாழ்பவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யவேண்டும். அப்படியான மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றால், நாம் உண்மையான மக்களை சென்று சேரவில்லை என்று அர்த்தம். நவீன மருத்துவத்தை பெரும்பான்மையான மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கவேண்டும். இது சாத்தியமாக என்று கேட்டால் எப்படி என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகளை செய்யவேண்டும்.


மருத்துவக் கல்லூரிகள் வழியாக நிறைய இளம் புதிய மருத்துவர்கள் உருவாகி வருகிறார்கள். அதை நானும் அறிவேன். இவர்களில் மிக குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களே சிறு, குறு, பெரு நகரங்களைக் கடந்து கிராமங்கள், மலைப்பகுதிகள், பழங்குடிகள் வாழும் காடுகளுக்கு சென்று பணிபுரிய தயாராக உள்ளனர். இளம் மருத்துவர்கள் தங்கள் படிப்பின்போதே, இடையில் பழங்குடிகள், மலைப்பகுதி கிராமங்களில் உள்ள மக்களோடு பழகி சிகிச்சை அளிக்க முயலவேண்டும். அல்லாதபோது அவர்கள் படிப்பு முடிந்தபிறகு கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஈர்க்கப்படமாட்டார்கள்.


மருத்துவர்களின் சிகிச்சை வழியாக மக்களுக்கு பயன்கள் கிடைக்கிறது. அதேசமயம் மருத்துவர்களுக்கு, மக்களின் அறிமுகம் கிடைக்கிறது. இது அவர்களின் மருத்துவம் சார்ந்த புரிதலை ஆழமாக்குகிறது.

 

 

 

https://in.pinterest.com/pin/144607838027432128/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்