மூக்கில் அடிக்கடி ரத்தம் வந்தால் என்னாகும்?
அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி
மூக்கில் ரத்தம் வருவதற்கு என்ன காரணம்?
மனநல பிரச்னைகள், மூக்கில் ஏற்படும் காயங்கள், நோய்த்தொற்று, அதிக ரத்த அழுத்தம், கல்லீரல் வீக்கம், ரத்தசோகை, மரபணு நோய்கள் ஒருவரின் மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் சிந்துவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மாதவிலக்கு சார்ந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு மூக்கில் ரத்தம் வெளிப்படுகிறது. இப்படி வெளியாகும் ரத்தத்தில் சிவப்பு நிறம் மாறுபாடு கொண்டிருந்தால், மருத்துவமனையை அணுகுவது நல்லது. ரத்தப்போக்கை நிறுத்த, குளிர்ச்சியான நீரில் துணியை நனைத்து மூக்கில் ஒற்றி எடுக்கலாம். ரத்தம் வெளியேறுகிறதே என்று பயந்து தலையை பின்னால் சாய்த்தால் மூக்கில் வரும் ரத்தம் தொண்டைக்கு சென்று வாந்தி வர வாய்ப்புள்ளது. கவனம்.
அடிக்கடி மூக்கில் ரத்தம் வருபவர்களுக்கு ஃபெர்ரம் மெட்டாலிகம், பாஸ்பரஸ், ட்யூபர்குலினம் ஆகிய ஹோமியோபதி மருந்துகளைக் கொடுக்கலாம்.
பல்வலிக்கான காரணம் என்ன?
பற்கள் நோயுற்றுவிட்டன என்பதே இதன் அர்த்தம். உணவுப்பொருட்கள் பற்களில் சிக்கியிருந்தால் பற்கள் சொத்தையாகத் தொடங்கும். ஈறுகள் வீங்கி பாதிக்கப்படும். பற்களில் நோயிருந்தால் அதை சரி செய்துகொண்டு, மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு பற்பசைகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். பற்பசை ஒன்றை அதிக விலையில் வாங்கி தேய்ப்பதால் எந்த மாறுதலும் ஏற்பட்டுவிடாது.
முட்டை வாங்கும்போது அதன் ஓட்டைப் பற்றி கவலைப்படவேண்டுமா?
முட்டையின் மேலோட்டில் கோழியின் கழிவுப்பொருட்கள் இருக்கலாம். அதன் விளைவாக, சால்மோனல்லா என்ற கிருமி நம்மை பாதிக்கும். எனவே, முட்டைகளின் மேலோடும் தூய்மையாக இருப்பது முக்கியம். அப்படி இருக்கும் முட்டைகளை மட்டுமே வாங்குவது நல்லது. கவனிக்காமல் வாங்கியதில் அப்படி அசுத்தம் தெரிந்தால் அதை தூய்மை செய்து வேகவைத்து சாப்பிடுங்கள்.
முட்டை சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு அதிகரிக்குமா?
உடலுழைப்பு முக்கியம். இதை எந்த உணவுக்கும் பொருத்திப் பார்க்கலாம். முட்டையில் புரதம் அதிகம் உள்ளது. உடலில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு புரதம் அவசியம். குறைந்த விலையில் புரதம் என்பது முட்டை வழியாக கிடைக்கிறது. வளரும் பருவத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு சைவ, அசைவ கருத்தியல் போரை ஒத்திவைத்துவிட்டு முட்டையை உணவில் சேர்ப்பது அவர்களது எதிர்கால உடல் மன வளர்ச்சிக்கு முக்கியமானது. முட்டையில் உள்ள கொழுப்பு, உடலுக்கு நலம் பயப்பதுதான். கேடு விளைவிப்பது அல்ல. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் முட்டை முக்கியமான உணவு. அதை வழங்குவதற்கு மறக்காதீர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக