ஜனநாயகத்தை வளர்க்க, அரசு அமைப்புகள் சட்டத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டும்!

 

 




 


நேர்காணல்
பொருளாதார ஆய்வாளர் டாரன் ஆஸ்மொக்லு

சில நாடுகள் தோற்றுப்போகையில் சில நாடுகள் வளம் பெறுவது எப்படி?

அனைத்து நாடுகளும் வெற்றிபெறுவதற்கு தேவையான பொருளாதார, சமூக காரணங்கள் உள்ளன.இவற்றை ஒருங்கிணைக்க தேர்ந்தெடுக்கும் அமைப்புகள் திறன் பெற்றவையாக இருக்கவேண்டும். இந்த அமைப்புகள் அரசியல் ரீதியாக, சமூகரீதியாக, பொருளாத ரீதியாக சிறப்பானவையாக இருத்தல் அவசியம். வெற்றிபெற்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் அனைத்து மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை உரிமைகளை சமத்துவமாக பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். அரசு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வரும். இந்த அமைப்புகள் பலவீனமான மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை பாதுகாக்கவும் முயலும். அதேசமயம் பெரு, பன்னாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும்.

கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது சில நாடுகளை வளப்படுத்தும் என பொருளாதார வரலாற்று அறிஞர் ஜோயல் மொக்யிர் கூறியிருக்கிறார். இக்கருத்தை ஏற்கிறீர்களா?

ஒரு நாட்டின் வளர்ச்சியில் கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது முக்கியம் என்ற ஜோயலின் கருத்தை நான் ஏற்கிறேன். இந்த கிளர்ச்சிப் போராட்டம் என்பது சமநிலை கொண்டதாக இருக்கவேண்டும். அரசு அமைப்புகள் மூலம் சட்டம் சரியாக பராமரிக்கப்படவேண்டும். அரசின் அதிகாரம், சமூக கட்டுப்பாடு என்பது சமநிலையாக இருந்தால் மட்டுமே பொருளாதார ரீதியான வளர்ச்சி ஏற்படும்.

ஏஐ காலத்தில் மனிதர்கள் தங்களை மாற்றிக்கொண்டு பிழைத்திருப்பது எப்படி?

செயற்கை நுண்ணறிவோடு மனிதர்கள் போட்டியிடுவது தவறு. தங்களது திறமைகளை மனிதர்கள் தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்வது அவசியம். எதிர்காலத்தில் வரும் தொழில்நுட்பத்தை யாராலும் முன்னரே திட்டமிடமுடியாது. செயற்கை நுண்ணறிவை மனிதர்களின் ஆக்கப்பூர்வ முன்னேற்ற திசையில் திருப்ப வேண்டும். தகவல்களை சிலர் மட்டுமே தங்களின் கைகளில் வைத்திருக்கக்கூடாது. முழுக்க தானியங்கு என்ற அடிப்படையில் தொழில்களை அமைத்துக்கொள்ளக்கூடாது. மக்களின் உரிமைக்காக போராடும் அமைப்புகளை ஆதரிக்கவேண்டும். ஊடகங்களில் மக்களின் கருத்துகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுமாறு செய்யவேண்டும். இப்படி ஜனநாயகப்பூர்வமாக இயங்குவதன் வழியாக மனித இனத்திற்கு செயற்கை நுண்ணறிவு பயனளிக்கும்.

உலக அளவில், தேசிய அளவில் அமைப்பு ரீதியாக என்னவிதமான மாற்றங்களை செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?

சர்வதேச அளவில் ஜனநாயகத்தன்மை என்பது பாதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலுமத் பிளவுகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களுக்கான நன்மையில் அக்கறையற்று, பிறரின் மீது நம்பிக்கையற்ற நிலைமை உருவாகி வருகிறது. இந்தப் பிரச்னையை முதன்மையாக கருதி தீர்க்க முயலவேண்டும். அரசு அமைப்புகள் ஜனநாயகத் தன்மையோடு இருந்தால்தான் ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்த முடியும். இதன் விளைவாக தகவல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அனைவரும் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். சமத்துவமின்மை, ஜனநாயக மதிப்பீடுகளை பாதிக்கும் பிரச்னைகளைத் தீர்க்க தேசிய அளவில் தீர்வுகளை உருவாக்க உழைக்கவேண்டும்.  

டிஓஐ - அனிருத் சூரி

india shouldnot become passive player in age of ai nobel winner acemoglu

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://economics.mit.edu/people/faculty/daron-acemoglu&ved=2ahUKEwjX8PjVjJ2JAxVx2wIHHfLwNtsQFnoECDgQAQ&usg=AOvVaw2dPyYgIwZkubcv9v1g0qnj
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்