இடுகைகள்

வில்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதியோர்களுக்காக பெரும் வீடுகள், இல்லங்கள், சேவைகள்!

படம்
            முதியவர்களுக்கான புதிய அடையாளம் ! இப்படி தலைப்பு வைத்ததும் காசா கிராண்டே ஏதாவது விளம்பரம் கொடுத்துவிட்டார்களா என அச்சப்படாதீர்கள் . விஷயம் அப்படிப்பபட்டதுதான் என்றாலும் , இது முதியவர்களை வைத்து பல்வேறு தொழில்நிறுவனங்கள் தொடங்கப்படுவது தொடர்பானது . இன்று அரசு வேலை , தனியார் வேலை என கடுமையாக உழைப்பவர்கள் வாழ்வதைப் பற்றி ஐம்பதுக்கு பிறகுதான் யோசிக்கிறார்கள் . ஆனால் அதற்குள் காலம் தலையில் வெள்ளை அடித்துவிடுவதோடு , பலருக்கும் முடி கூட கொட்டி விடுகிறது . அதற்குப்பிறகு மாமனார் வீட்டில் செய்துபோட்ட மோதிரம்தான் மிச்சமா என வாழவேண்டியதுதான் என நினைக்கிறார்கள் . ஆனால் பெருநகரங்களில் வயதானவர்கள் வேலைக்கு சென்றுகொண்டிருந்த காலத்தை விட இப்போது இன்னும் பெரியதாக வாழ்கிறார்கள் . வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட பிள்ளைகளைப் பற்றி இப்போது பெற்றோர் பெரிதாக கவலைப்படுவதில்லை . தங்களைக் கவனித்துக்கொள்ள அதற்கெனவே இருக்கும் சீனியர் சிட்டிசன் வில்லாக்களை தேர்ந்தெடுக்கிறார்கள் . அங்கு சென்று வாழ்கிறார்கள் . தனியாக அல்ல . அங்கும் இவர்களைப் போல வசதியான பல நூறு முதியவர்கள் வாழ்கிறா