முதியோர்களுக்காக பெரும் வீடுகள், இல்லங்கள், சேவைகள்!
முதியவர்களுக்கான புதிய அடையாளம்!
இப்படி தலைப்பு வைத்ததும் காசா கிராண்டே ஏதாவது விளம்பரம் கொடுத்துவிட்டார்களா என அச்சப்படாதீர்கள். விஷயம் அப்படிப்பபட்டதுதான் என்றாலும், இது முதியவர்களை வைத்து பல்வேறு தொழில்நிறுவனங்கள் தொடங்கப்படுவது தொடர்பானது.
இன்று அரசு வேலை, தனியார் வேலை என கடுமையாக உழைப்பவர்கள் வாழ்வதைப் பற்றி ஐம்பதுக்கு பிறகுதான் யோசிக்கிறார்கள். ஆனால் அதற்குள் காலம் தலையில் வெள்ளை அடித்துவிடுவதோடு, பலருக்கும் முடி கூட கொட்டி விடுகிறது. அதற்குப்பிறகு மாமனார் வீட்டில் செய்துபோட்ட மோதிரம்தான் மிச்சமா என வாழவேண்டியதுதான் என நினைக்கிறார்கள். ஆனால் பெருநகரங்களில் வயதானவர்கள் வேலைக்கு சென்றுகொண்டிருந்த காலத்தை விட இப்போது இன்னும் பெரியதாக வாழ்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட பிள்ளைகளைப் பற்றி இப்போது பெற்றோர் பெரிதாக கவலைப்படுவதில்லை.
தங்களைக் கவனித்துக்கொள்ள அதற்கெனவே இருக்கும் சீனியர் சிட்டிசன் வில்லாக்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கு சென்று வாழ்கிறார்கள். தனியாக அல்ல. அங்கும் இவர்களைப் போல வசதியான பல நூறு முதியவர்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கான மருத்துவம், சமையல் என அனைத்துமே அங்கும் உண்டு. எனவே, வயதானபிறகும் கூட பல்வேறு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யவேண்டியதில்லை. அக்கடாவென அமர்ந்து சீட்டுக்கட்டு, பரமபதம், லூடோ என விளையாடிக் களிக்கலாம். எல்லோருக்கும் இது சாத்தியமா என்றால் சாத்தியம் கிடையாது. நிறைய சம்பாதித்து சிட்டி யூனியன் கணக்கில் 7500க்கும் குறையாத இருப்பு வைத்திருப்பவர்கள் முயன்று பார்க்கலாம்.
இப்படி வயதான பணக்கார பெற்றோர்களை நம்பி சென்னை, பெங்களூரு, கோவை என பல்வேறு இடங்களில் வில்லாக்கள் கட்டுப்பட்டு வருகின்றன. இவை எதிர்பார்த்தது போலவே நகரில் வாழும் கொழுத்த வயதானவர்களை ஈர்க்கிறது என்பது உண்மை. தனிமையில் வாடுவதை விட தன்னைப் போலவே உள்ள மனிதர்களோடு பேசிக்கொண்டு இறுதிக்காலத்தை கழிப்பது சிறந்தது தானே?
பெரும்பாலும் இந்தியர்களை வெளிநாட்டுக்காரர்கள் வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் காரணம் என்ன? எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும் என நினைப்பார்களே ஒழிய வாழவேண்டுமே, வானத்திலுள்ள நட்சத்திரத்தை இரவிலேனும் பார்ப்போம் என்று நினைக்கமாட்டார்கள். இதற்கு வாழ்க்கை சார்ந்த பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டலாம். நிறைய பொறுப்புகள் இருக்கிறதென. ஆனால் இழந்த காலம் இழந்தது தானே?
பணக்கார
முதியோர்கள் கூட பணி ஓய்வுக்குப்
பிறகும் ஏதேனும் தொழில்வாய்ப்புகளை
தேடுகிறார்கள் அல்லது இளமையில்
படிக்க முடியாத படிப்புகளை
இப்போது படிக்கிறார்கள்.
வாசிக்கும்
நமக்கு வேடிக்கையாக இருந்தாலும்
அத்தனை கோமாளித்தனங்களையும்
செய்ய அனைவரையும் போல நமக்கு
இந்த மனித வாழ்க்கைதானே
கிடைத்துள்ளது. ஏற்றுக்கொள்ள
வேண்டியதுதான்.டாடா ஸ்கை நிறுவனம், முதியவர்களுக்காகவே சீனியர் என்ற சேனலை உருவாக்கியுள்ளது. இதில் முதியோருக்கான பல்வேறு விஷயங்களை ஒளிபரப்பு செய்கிறார்கள்.
நன்றி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக