இருபது அறிவியல் மொழிபெயர்ப்பு நேர்காணல்களைக் கொண்ட நூல்! - அறிவியலே உலகு- அன்பரசு சண்முகம்

 






இந்த நூலில் இருபது அறிவியல் மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் உள்ளன. கணிதம், இயற்பியல்,வானியல், செயற்கை நுண்ணறிவு, உளவியல் சார்ந்த துறை வல்லுநர்கள் தங்களது ஆராய்ச்சி பற்றி பேசியுள்ளனர். 

இந்த நூல் எழுதப்பட முன்மாதிரி பாரதி புத்தகாலய ஆசிரியர் இரா. நடராசன் ஆவார். அவரது நேர்காணல் ஒன்றை பாரதி  புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் படித்தேன். அதற்குப்பிறகுதான் அறிவியல் நேர்காணல்களை எழுதலாம் என்ற எண்ணம் மனத்தில் வலுப்பட்டது. அப்படி உருவானதுதான் இந்த நூல். 

நேர்காணலின் இறுதியில் மூலக்கட்டுரையை படிப்பதற்கான க்யூஆர் கோடு உள்ளது. எனவே, படிக்கும் வாசகர்கள் அதனைப் பயன்படுத்தி மூலக்கட்டுரையை வாசித்து அறிவியலாளர்கள் பற்றி கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். 

மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் எந்தெந்த வலைத்தளங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன என்ற தகவலும் இறுதிப்பக்கங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலை வாசிப்பவர்களுக்கு அறிவியல் துறையில் ஈடுபடுவதற்கான ஆர்வம் வரவேண்டுமென்பதே இலக்கு. வாசியுங்கள் நன்றி!


https://www.amazon.in/s?k=ariviyalae+ulagu&i=digital-text&ref=nb_sb_noss


அன்பரசு சண்முகம்






கருத்துகள்