பெண்கள் தங்கள் உரிமைக்காக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை - ஏஞ்செலிகா அரிபம்
எழுத்தாளர் ஏஞ்செலிகா அரிபம் இவர், அண்மையில் பிஃப்டீன் என்ற நூலை ஆகாஈ் சத்தியவாலியோடு இணைந்துஎழுதி வெளியிட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம். பெண்கள் அரசியலில் பங்கு பெற்று பாலின பாகுபாடு, இனவெறி ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள். இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன? சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்த பெண் என்ற வகையில், அன்னி மஸ்கரின், பேகம் அய்ஸாஸ் ரசூல், தக்சாயணி வேலாயுதன் ஆகியோரின் போராட்டங்களை அடையாளம் கண்டுள்ளேன். ஆனால் இன்று அவர்களைப் போல தேசிய அரசியலில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை. இன்றைய சூழலில் பாலின பாகுபாடு, இனவெறி தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன. சின்கி, சோமெயின், மோமோஸ் என பட்டப்பெயரிட்டு என்னை இழிவுபடுத்திவருகின்றனர். எதற்கு நீ அரசியலுக்கு வந்தாய், உன்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் கடைகளில் விற்பனை பெண்களாக, பரிசாரகர்களாக சிறப்பாக பணியாற்றுகிறார்களே என்ற பாகுபாடான கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன். இங்கு ஆண்களே பெண்களுக்கான வேலைகளை உருவாக்குகிறார்கள். அதை செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். பெண்கள், தங்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என குரலுயர்த்தி உரிம...