இடுகைகள்

கள்ளச்சாராயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலி சாராயத்தில் பறிபோகும் உயிர்கள்!

படம்
TOI விதவைகள் கிராமம் உ.பியிலுள்ள புசைனா கிராமத்தில் விதவைகள் அதிகரித்துள்ளனர். என்ன காரணம்?  மது. இங்குள்ளு 300 குடும்பங்களில் 150 குடும்பங்களில் ஆண்கள் பலியாவது, மதுவினால்தான்.  கடந்த 65 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் குறைந்தது 5 ஆண் உறுப்பினர்கள் உயிரிழப்பது இங்கு சாதாரணமாகியுள்ளது. போலி சாராயத்தை அருந்தியே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. பத்து ரூபாய் பவுச்களில் இந்த போலி சாராயம் கிடைப்பது மரணங்களை பரவலாக்கியுள்ளது. உ.பி மற்றும் உத்தர்காண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பொதுவான மரணங்களுக்கு காரணம், போலி சாராயம்தான். புசைனா கிராம மக்களின் எண்ணிக்கை  4 ஆயிரத்து எட்டு. ஆண்களை இழந்து வறுமையில் வாடும் பெண்களால் இன்னும் கள்ளத்தனமாக பலரின் வாழ்வை அழிக்கும் போலி சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. பலரும் போலிச்சாராயத்தைப் பற்றி பேச மறுக்கிறார்கள். காரணம் தெரிந்ததுதான். சாராய மாஃபியாக்களின் அச்சுறுத்தல் வாழ்வுக்கே உலை வைத்துவிடுமே? இங்குள்ள நெக்ஸி தேவி தன் கணவரை மட்டுமல்ல நான்கு பிள்ளைகளையும் போலி சாராயத்துக்கு பலி கொடுத்துள்ளார். சுனிலா தேவிக்கு இளம் வயதில் நான்கு பெண்கள் உண்டு. இவரது