இடுகைகள்

யுவகிருஷ்ணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்பமாக மகிழ்ந்திருக்க வாசிக்கலாம்! - லுங்கி - யுவகிருஷ்ணா - கட்டுரைகள்

படம்
  லுங்கி  யுவகிருஷ்ணா யுவகிருஷ்ணா, தனது லக்கிலுக் ஆன்லைன் தளத்தில் முன்னர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.  நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள்.  இதனை வாசிக்கும் யாரும் புன்னகைக்காமல் படிக்கவே முடியாது. அந்தளவு வரிக்குவரி பகடி, நையாண்டி என தனது சிறுவயது வாழ்க்கை, சினிமா அனுபவங்கள், காதலர்தினத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டம் செய்யும் கோமாளித்தனங்கள், கண்ணில் பட்ட செய்திகள் என அனைத்தையும் ஜாலியாக கேலி செய்து எழுதியிருக்கிறார்.  உல்லாசம் கட்டுரையில் செய்தியை எப்படி எழுதுவது என தந்தி நிருபர்களின் திறமையை போற்றுவது போல தோன்றும் ஆனால் படித்த பிறகுதான் அந்த கதையில் உள்ள ஓட்டைகள் பெரிதாக தெரியும். அந்தளவு நக்கலும் நையாண்டியுமாக எழுதியிருக்கிறார். ராமசாமியை இனி யாரும் ஊர் உலகத்தில் மறக்கவே முடியாது. அவர் தனது மனைவி மற்றும் என்ஜினியரிடம் அப்படியொரு சோதனையை செய்து பார்த்திருக்கிறார்.  தாலியக் கட்டு கட்டுரையைக் கூட நாம் சிரித்தபடியே வாசிக்கமுடியும். அதன் இறுதி வரியை நிச்சயம் படிப்பவர்கள் புன்னகைக்காமல் கடக்க முடியாது. வலைப்பதிவராக இருந்து பத்திரிக்கையாளராக மாறிய யுவகிருஷ்ணா, நையாண்டி செய்வ

அழிக்கப்பிறந்தவன்: பரபர க்ரைம் த்ரில்லர் சொல்வது என்ன?

படம்
Add caption அழிக்கப்பிறந்தவன் யுவகிருஷ்ணா டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத்தை கொடுத்த நண்பர் சுமாரான புக்தான். ஆனா நீ படிக்கணும் என்றார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.  படத்தின் மையம் பர்மா பஜாரின் சிடி, டிவிடி பிஸினஸ்தான். அதில் டானாக இருக்கும் வாப்பா, வெள்ளிக்கிழமை ஐட்டம் டான்ஸ் ஆடும்போது கொலை செய்யப்படுகிறார். உடனே பர்மா பஜார் முழுக்க பதற்றம் தொற்றுகிறது. யார் கொலைக்கு காரணம் என வாப்பாவின் குடும்பமே பலரையும் அடித்து உதைத்து விசாரிக்கிறது. இதற்கிடையே ஷங்கரின் நண்பன் படம் வேறு லீக்காகிவிடுகிறது. அதையும் வேறு ஷங்கர் ரசிகரான கமிஷனர் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். கதை ஒரே வாரத்தில் நடந்து முடிகிறது.  இறுதியில் கொலைகாரன் யார்? எதற்கு இந்த கொலை என்பதுதான் கதை.  யுவகிருஷ்ணாவின் எழுத்து சுவாரசியத்திற்கு கேட்கவேண்டுமா? பின்னி எடுக்கிறார். கதை தொடக்கமே க்ரைம் த்ரில்லர் படத்திற்கு டிரைலர் ஓட்டியது போல உள்ளது. கதையின் மர்ம முடிச்சுகளை கணிக்க முடியாமல் செய்யும் வாசகர்களை சந்தேகப்பட வைக்கும் விஜய சங்கர் கேரக்டர் அருமை. அதிலும் முக்கிய கேரக்டர் மூலமே கொலை செய்ததாக