இடுகைகள்

ரஷ்மி பன்சல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிதையும் தாய்மாமன் வழி உறவு! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? தேர்தலுக்கான இரைச்சல் சென்னையில் அதிகமாகிவிட்டது. 6 மணிக்கு மேல் சாலையில் தேர்தல் இரைச்சல் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.  இன்று தகைமை சான்ற கோ ஆர்டினேட்டர் வரவில்லை. எனவே, இதழ் வேலைகளைப் பார்க்கத் சொல்லிவிட்டார் பொறுப்பாசிரியர். எனவே, எழுத நினைத்த கட்டுரைகளை எழுத முடியவில்லை. சனி என்றால் அலுவலக சகாக்கள் நிறையப் பேர் விடுமுறை எடுத்துவிடுவார்கள். ஆறுநாட்கள் அலுவலகம் என்பது மிக நீண்டதுதானே? இன்று தாய்மாமா மகன் தனது திருமணத்திற்காக அழைத்தார். நான் அழைப்பை ஏற்கவில்லை. அவரது திருமணத்திற்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பினேன். அவரும் அதற்குமேல் வற்புறுத்தவில்லை. எல்லாமே சடங்கு, சாங்கியம் என ஆகிவிட்டது. நமக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதெல்லாம் கிடையாது. செய்யவேண்டும் அவ்வளவுதான். தாய்மாமன் வழி உறவு இதோடு முடிவுக்கு வருகிறது.  ரஷ்மி பன்சலின் தொழில் சம்பந்தமான நூலைப் படித்து வருகிறேன். இன்னும் 70 பக்கங்கள் மிச்சமிருக்கிறது. எம்பிஏ படிக்காத தொழில்முனைவோரைத் தேர்ந்தெடுத்து பேட்டிகளை எடுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த

கல்லூரியில் தொழில் தொடங்கிய நம்பிக்கை தரும் இளைஞர்களின் கதைகள்! - ரஷ்மி பன்சல்- எழுந்திரு விழித்திரு

படம்
  எழுந்திரு விழித்திரு ரஷ்மி பன்சல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் இது தொழில்முனைவோர்கள் பற்றிய நூல். நூலில் பிராக்டோ  நிறுவனம் முதல், புக்கட் எனும் உணவு நிறுவனம் வரையில் நிறைய இளைஞர்களின் கனவு தொழில்களை விளக்கியுள்ளார் ஆசிரியர்.  ரஷ்மி பன்சலின் எழுத்துமுறை, கனெக்டிங் டாட்ஸ் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. தொழிலதிபர்கள் பற்றிய சுவாரசிய ஒருபக்க அறிமுகத்தை தொடர்ந்து அவர்களின் கனவுத்தொழிலைப் பற்றிப் பேசுகிறார்.  இந்த முறை படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  தொடக்க தொழில்கதையான பிராக்டோ உண்மையில் இன்றைய வேலை, சுயதொழில் ஆகியவற்றுக்கு இடையில் அல்லாடும் இளைஞர்களை சிறப்பாக பிரதிபலிக்கிறது. இப்போதே கிடைக்கும் வேலைக்கு செல்வதா அல்லது காத்திருந்து சுயதொழிலுக்கான வாய்ப்புகளை தேடுவதா என அலைபாயும் இடம் முக்கியமானது. இன்று பிராக்டோ நிறுவனம் சிறப்பாக வளர்ச்சி அடைந்துவருகிறது. இதுவே அவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வளர்ச்சிக்கு சான்று.  இதில் நடைமுறையாக இல்லாத விஷயங்களை செய்து பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்கும் இளைஞர்களின் கதைகள் நிறைந்துள்ளன.  தோசாமேட்டிக் நிறுவனம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் அமைப்புப்படி தோச