இடுகைகள்

50 நாட் அவுட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

50 நாட் அவுட்! - விஷயங்கள் என்ன?

படம்
அரைசதம் அடிப்போம் இந்த ஆண்டில் அரைசதத்திற்கான நிறைய விஷயங்கள் உண்டு. என்னென்ன? நிலவில் மனிதன்! மனிதன் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. அப்போலோ 11 விண்கலம் 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று நிலவை எட்டிப்பிடிக்கும் பயணம் தொடங்கியது. ஜூலை 20-21 இப்பயணம் தன் இலக்கை எட்டியது. நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலில் தன் காலை நிலவின் பரப்பில் வைத்தார். அதற்குப் பிறகு இருபது நிமிடங்கள் கழித்து  பஷ் ஆல்ட்ரின் தன் காலை நிலவில் ஊன்றினார். இதுவே பின்னாளில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் நிலவு குறித்து ஆராய ஊக்கப்படுத்தியது. நம்பர் ஒன் சீரியல்(நவ.10) 1969 ஆம் ஆண்டு தொடங்கி வெளியான சீசேம் ஸ்ட்ரீட் என்ற சீரியல் இன்றுவரை தொடர்கிறது. அரைசத ஆண்டுகளை அநாயசமாக கடந்த இத்தொடர் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல. ஸ்டோன்வால் போராட்டம்(ஜூன் 28) 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் ஸ்டோன்வால் இன் என்ற தன்பாலினத்தோருக்கான பாரில் போலீஸ் ரெய்டு நடத்தியது. செய்தி அறிந்ததும் மக்கள் தம் எதிர்ப்பை காட்ட போராட்டம் வெடித்தது. மறக்கமுடியாத மக்கள் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாக 2016 ஆம் ஆண்டு அந்த பார்,