இடுகைகள்

மினிமலிசம் - ஆளுமைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெங்களூரு மினிமலிச ஆளுமைகள்

படம்
அர்விந்த் சிவக்குமார் பெங்களூரைச் சேர்ந்த அர்விந்த் சிவக்குமார், மினிமலிச சிந்தனையை வாழ்வுக்கு அப்ளை செய்து வென்றிருக்கிறார்.இவர் புதிய ஆடைகளை வாங்கி பத்து ஆண்டுகளாகிறது. தன் மனைவியுடன் தனியாக வீடு எடுத்து தங்கியவர், இப்போது சூழல் சிக்கனம் கருதி தன் பெற்றோருடன் ஒன்றாக சேர்ந்து வசிக்கிறார். ஏன்? மின்சாரம், பொருட்கள் பயன்பாடு என பல விஷயங்களில் இது லாபம் என்று சிரிப்பவர், பட்டு, தோல் பொருட்களை தவிர்த்துவிட்டு வீகன் டயட்டுக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முக்கியக்காரணம், ஆறு வயதில் இவர் கலந்துகொண்ட இயற்கை பற்றிய முகாம் ஒன்று. அங்கு தேவையில்லாமல் பொருட்களை வீண்டிக்க கூடாது என அறிவுறுத்த அதனை பின்னாளிலும் கடைபிடித்து இன்று அவரைப் பற்றி நாம் பேசுமளவு வளர்ந்திருக்கிறார். சாகர் மன்சூர் நான் வெகு ஆண்டுகளாக இளநீர் வாங்கினால் ஸ்ட்ரா வாங்காமல்தான் அதனைக் குடிக்கிறேன். இந்த மாற்றத்திற்கு நீங்கள் பழகினாலே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம் என ஆச்சரியப்படுத்துகிறார் மன்சூர். டிபன் பாக்ஸ், ஸ்டீல் ஸ்ட்ரா என போகுமிடமெல்லாம் கொண்டு செல்லும் புதுமைப் பெண் மன்சூர். கடந்த 2

மினிமலிச சிந்தனை - கற்க வேண்டியது என்ன?

படம்
மினிமலிச சிந்தனை அறையில் இரண்டு பேர்தான் இருப்பார்கள். ஆனால் நான்குபேர்களுக்கான பொருட்களை வைத்திருப்பார்கள். அது பிரச்னையில்லை. ஆனால் நடமாட இடம் வேண்டுமே? இதற்காகவே மினிமலிசம் கலாசாரம் நடைமுறையில் பிரபலமாகி வருகிறது. இதுகுறித்து குங்குமத்தில் நான் எழுதிய கட்டுரையை யாரும் படித்திருக்க மாட்டீர்கள். உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும். வெரி வெல், பிரச்னையில்லை. உலகமெங்கும் மினிமலிச சிந்தனையைப் பரப்பும் சிந்தனையாளர்களின் அணிவகுப்பு இதோ... மேரி கோண்டோ ஜனவரி முதல் தேதியிலிருந்து நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் தொடர் இது. மேரி எப்படி தன் கிளைண்ட்களின் வீட்டை குப்பைகளை குறைத்து எளிமையாக்குகிறார் என்பதே இத்தொடர். வாய்ப்பிருந்தால் பாருங்கள். ஃப்யூமியோ சசாகி பெங்குயின் பதிப்பகத்தில் குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங் என புத்தகம் போட்டிருக்கிறார். டோக்கியோவில் வசிக்கும் இளைஞரின் வாழ்க்கை எப்படி மினிமலிச கருத்துக்குள் வருகிறது, அதன் விளைவுகள் என்ன , சமூகம் அதனை எப்படி பார்த்தது என்பதை புட்டு வைத்திருக்கிறார். புக் விலை ரூ. 500. கல்வி வேலை வழிகாட்டி நிருபரான வெங்கடசாமி ப