இடுகைகள்

மசூதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா ஒளரங்கசீப் அழித்த கோவில்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்! - பேராசிரியர் மக்கன்லால்

படம்
பேராசிரியர் மக்கன் லால், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெரிடேஸ் ரிசர்ச் அண்ட் மேனேஜ்மென்ட்.    நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவதில் ஏன் பிரச்னை எழுகிறது? வரலாறு எப்போதும் எழுதப்பட்டு பிறகு மாற்றி எழுதப்பட்டுத்தான் வந்திருக்கிறது. வரலாற்றை மூன்று விதமான ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் . ஒன்று, பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், மார்க்சிய ஆய்வாளர்கள், மூன்று தேசியவாத ஆய்வாளர்கள். நேரு, இந்திராகாந்தி காலத்தில் இடதுசாரி ஆய்வாளர்கள் வரலாற்றை மாற்றி எழுதினர். அந்தகாலத்தில் அவர்களுக்கு வரலாற்று அமைப்பில் முக்கியமான பதவி இடங்கள் கிடைத்தன. நிதியுதவியும் செய்தனர். இப்போது நிலை மாறிவிட்டது. இடதுசாரி ஆய்வாளர்கள் இப்போது இல்லை. அவர்களின் ஆதரவாளர்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது. எனவே வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என கூறி வருகிறார்கள்.  வரலாற்றில் ஒளரங்கசீப்  ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி கோவில்களை அழித்தார் என்று கூறப்படுவது ஏன்? ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகியோர் வரலாற்றில் மதிக்கப்படும் இடத்தைப் பெறவில்லை. ஆனால் அவர்களைப் பறிற நாம் இன்றும் விவாதம் செய்துகொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் ஒளரங்கசீப்பையும் நாம் விவாத

மசூதியை மாற்றிய மழைநீர் சேகரிப்பு!

படம்
தண்ணீர் பஞ்சம் என்பது இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு இல்லை. ஆனாலும் கூட நீராதாரங்களை காப்பாற்றி வைப்பது எதிர்காலத்திற்கான முக்கியமான தேவை. அப்படியில்லாதபோது மழைப்பொழிவு குறைந்தகாலத்தில் பஞ்ச பருவத்தில் படாதபாடு படும் நிலை ஏற்படும். கோவையில் உள்ள முஸ்லீம்கள் அதனை உணர்ந்து நீரை சேகரிக்க தொடங்கியுள்ளனர். கோவையில் உள்ள 135க்கும் மேற்பட்ட மசூதிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளன. இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளன ஆழ்துளை கிணறுகளில் நீர் வரத்து கூடியுள்ளது. தொழுகைக்கு முன்னர் முஸ்லீம்கள் தங்கள் முகம், கை, கால்களை கழுவிக்கொள்வது வழக்கம். இதனை வுசு என்கின்றனர். இதற்காக செலவிடும் நீரையும் நிலத்திற்கு திருப்பிவிட்டிருக்கின்றனர். கூடவே மழைநீர் சேகரிப்பையும் செய்து வருகிறார்கள். இப்படி செய்வதற்கு காரணமான சம்பவம், 2016-17இல் நடைபெற்றது. அப்போது மசூதிகளில் இருந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோய்விட்டன. நீருக்காக லாரி டேங்கர்களை நாடினர். இதற்கு தினசரி 8 ஆயிரம் ரூபாய் செலவானது. பிறகுதான் வுசு ஐடியா அத்தர் ஜமாத் தலைவர் ஷா நாவாஸூக்கு வந்திருக்கிறது. சிறுதுளி தன்னார்வ தொண்ட

பெண்களை குரான் புறக்கணிக்கவில்லை! - எழுத்தாளர் ஜியா அஸ் சலாம்

படம்
நேர்காணல் குரான் பெண்களை ஒதுக்கவில்லை! பெண்களை மசூதிக்குள் பொதுவாக அனுமதிப்பதில்லை. அவர்களுக்கும் ஆண்களுக்கும் தனி இடங்கள் அங்கு உண்டு. இதுபற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாய் அஸ் சலாம் வுமன் இன் மஸ்ஜித்: எ க்வெஸ்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். அவரிடம் பேசினோம். நீதிமன்றம், பெண்களை சபரிமலை போன்ற இடங்களில் அனுமதித்து உள்ளது. அதை நீங்கள் ஏற்கிறீர்களா? இது சரி, சரி அல்ல என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. மதம் பெண்களை அனுமதிக்கும்போது, அதனை ஆண்கள் ஏன் தடுக்கிறார்கள் என்பதே எனது கேள்வி. நீதிமன்றம் குரான் மற்றும் அரசியல் அமைப்பு சட்டப்படி பெண்களை அனுமதிப்பு ஏற்புடையதே. இந்தியாவில் வரலாற்று ரீதியாக பெண்களின் உரிமைகளை எப்படி வரையறுக்கிறீர்கள்.  சுல்தான்கள் காலத்தில் இங்குள்ள பெண்கள் சிறப்பான கல்வித்தகுதியை அடைந்தனர். காரணம், அங்கு ஏராளமான மதரசாக்கள் செயல்பட்டு வந்தன. மேலும், அடிமையாக வேலை செய்து வந்த பெண்கள் கூட குரானைப் படிக்கும் அளவு கல்வி அறிவு பெற்றிருந்தனர். மொகலாயர்கள் காலத்தில் பெண்கள் மதரசாக்களையும், மசூதிகளையும் கட்டியது வரலாறு மூலம் தெரிய வர