இந்தியா ஒளரங்கசீப் அழித்த கோவில்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்! - பேராசிரியர் மக்கன்லால்










பேராசிரியர் மக்கன் லால், டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஹெரிடேஸ் ரிசர்ச் அண்ட் மேனேஜ்மென்ட். 

 

நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவதில் ஏன் பிரச்னை எழுகிறது?


வரலாறு எப்போதும் எழுதப்பட்டு பிறகு மாற்றி எழுதப்பட்டுத்தான் வந்திருக்கிறது. வரலாற்றை மூன்று விதமான ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் . ஒன்று, பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், மார்க்சிய ஆய்வாளர்கள், மூன்று தேசியவாத ஆய்வாளர்கள். நேரு, இந்திராகாந்தி காலத்தில் இடதுசாரி ஆய்வாளர்கள் வரலாற்றை மாற்றி எழுதினர். அந்தகாலத்தில் அவர்களுக்கு வரலாற்று அமைப்பில் முக்கியமான பதவி இடங்கள் கிடைத்தன. நிதியுதவியும் செய்தனர். இப்போது நிலை மாறிவிட்டது. இடதுசாரி ஆய்வாளர்கள் இப்போது இல்லை. அவர்களின் ஆதரவாளர்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது. எனவே வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது என கூறி வருகிறார்கள். 

வரலாற்றில் ஒளரங்கசீப்  ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி கோவில்களை அழித்தார் என்று கூறப்படுவது ஏன்?

ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகியோர் வரலாற்றில் மதிக்கப்படும் இடத்தைப் பெறவில்லை. ஆனால் அவர்களைப் பறிற நாம் இன்றும் விவாதம் செய்துகொண்டுதானே இருக்கிறோம். அப்படித்தான் ஒளரங்கசீப்பையும் நாம் விவாதிக்கிறோம். அவர் ஆட்சி, மக்களை எப்படி நடத்தினார், இஸ்லாமியர் அல்லாதோரை எப்படி கொடுமைப்படுத்தினார், மக்களை எப்படி மதமாற்றம் செய்தார் என பேசுகிறோம். நம் தேசமே ஒளரங்கசீப் எத்தனை கோவில்களை அழித்தார் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். 

வரலாற்றில் கோவிலை அழித்தது அரசியலமைப்பு சட்டத்தை பாதிக்கிறதா என்ன?

அரசியலமைப்புச்சட்டத்தை சரியாக பராமரிக்க நமக்கு ஒருங்கிணைந்த சிவில் சட்டம் கூடத்தான் தேவை. இந்தியாவில் குடியேற்றம் ஏற்பட்டு பல கோடி ஆண்டுகள் ஆகிறது. கோவில்களை ஒளரங்கசீப் அழித்ததற்கு வரலாறு உள்ளது. இப்படி அவர் 3700 கோவில்களை அழித்தார். அந்த இடத்தில்தான் இன்றைய மசூதிகள் உருவாகியுள்ளன. நமக்கு மூன்று கோவில்கள் தேவை. ராம ஜென்ம பூமி, காசி, மதுரா கோவில்கள். 

இந்தியா சுதந்திரமான சமூகம். வலதுசாரி தன்மை எப்படி மக்களிடமிருந்து அழிந்துபோனது?

விடுதலையான சமூகம் என்றால் தனக்கு ஆபத்து வரும்போது ஆயுதம் தூக்காது என்பதல்ல. வலது சாரி ஆய்வாளர்கள் நிறைய நூல்களை எழுதினர். அப்போது அவை வெளிச்சத்திற்கு வரவில்லை. இன்று சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் பெருகியுள்ளதால் அவை பற்றி அறிய வந்துள்ளது. 


 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

கவிதா பஜேலி தத்



கருத்துகள்