விழுப்புரம் இளைஞர்களை முன்னேற்ற முயலும் விக்ளக் அமைப்பு!

 
இடதுபுறத்தில் முதல் நபர் திரு.கணியம் சீனிவாசன்
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் விக்கிமீடியா பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, அண்மையில் ஹேக்கத்தான் உதவித்தொகைக்கு இந்தியாவில் இரு அமைப்புகளை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் ஒரு அமைப்பு விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. ஹேக்கத்தானில் விக்கிப்பீடியா . ஆர்க் தளத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்கிறார்கள். 

பொதுவாக ஐடி நிறுவனங்கள் என்றால் ஹைதராபாத் அல்லது பெங்களூருவைச் சொல்லுவார்கள். ஆனால், விழுப்புரம் அங்கே எப்படி வந்தது என பலரும் நினைப்பார்கள். 

விழுப்புரம் ஜிஎன்யூ லினக்ஸ் பயனர்கள் குழுவின் பெயர், விகிளக். இவர்களைத்தான் விக்கி மீடியா தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் இலவச மென்பொருட்களை பயன்படுத்த கிராம மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதில் கோடிங்குகளை எழுதவும் பயிற்றுவிக்கின்றனர். 

இந்த பயிற்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்தான். பயிற்சி மாணவர் ஒருவரின் தாய், வீட்டு வேலை செய்து வருகிறார்.  இன்னொருவர் தினக்கூலி செய்பவர்களின் பிள்ளை என இதுபோல மாணவர்களுக்குத்தான் நாங்கள் கணினி கோடிங்குகளையும் மென்பொருட்களையும் இயக்க கற்றுக்கொடுக்கிறோம் என்றார் வி க்ளக்கின் மேலாளாரான யு கார்க்கி. 

விழுப்புரம் மோசமான செய்திகளுக்காக செய்திகளில் அடிபடும் பகுதி. பொருளாதார ரீதீயாகவும் பின்தங்கியுள்ளது. இதனை தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த விக்ளக் குழுவினர் முயன்று வருகிறார்கள். இளைஞர்களை சரியான வழியில் ஊக்கப்படுத்தி பயிற்றுவித்தால் மாற்றம் நடைபெறும் என விக்ளக் குழுவினர் நினைக்கிறார்கள். இந்த பயிற்சிகளை இவர்கள் எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். விக்ளக்கில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலரும் பெரிய ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சென்றுள்ளனர். விழுப்புரத்திலுள்ள நூறு கிராமங்களில் விக்ளக் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். 

பாலின பாகுபாடு இன்றி மாணவிகளுக்கும் பெண்களுக்கும் கணினி பயிற்சிகளை வழங்குகின்றனர். இதன்மூலம் பெண்கள் சுயமாக பிறரது ஆதரவின்றி தன்னைப் பார்த்துக்கொள்ள முடியும். விக்கிமீடியாவின் உதவித்தொகை, பின்தங்கிய மாவட்டத்தின் இளைஞர்களை வாழ்க்கையில் முன்னேற்ற உதவுகிறது என்பது நல்ல விஷயம்தானே? 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

கிரித்திகா சீனிவாசன் 

 

https://vglug.org/


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்