இந்தியாவின் காய்கறிகள் மற்றும் வாசனைப்பொருட்கள் ஆச்சரியம் தருகின்றன! - அலைன் டுகாசி, சமையல் கலைஞர்

 











அலைன் டுகாசி
சமையல் கலைஞர்





உலகளவில் மிச்செலின் ஸ்டார் பெறுவது கடினம். அலைன் இந்த வகையில் 17 ஸ்டார்களைப் பெற்றுள்ள சமையல் கலைஞர். தனது தொழில்முறை வாழ்க்கையில் 21 ஸ்டார்களைப் பெற்றுள்ளார். இப்போது சூழல் நிலைத்தன்மை கொண்ட  தாவர உணவுகளை சமைக்கும் செயல்பாடுகளை செய்துவருகிறார். குர்கானில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தில் இகோல் டுகாசி எனும் தனது வளாகத்தை உருவாக்குவதாக கூறியுள்ளார். அவரிடம் பேசினோம். 

இந்தியா சார்ந்து உங்களுக்கு பிடித்த உணவு வகை என்ன?

இப்படி கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. பிரெஞ்சு உணவு வகைகளில் பிடித்த உணவு என்றாலும் கூட கூறமுடியாது. பிரெஞ்சு நாட்டில் நான் நீண்டகாலமாக வசித்தாலும இப்படித்தான் இதற்கு பதில் கூற முடியும். இந்தியாவில் எனக்கு பிடித்த விஷயம், மக்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள். அப்புறமாக பருப்புகள். இவற்றை எப்படி பயன்படுத்துவது சமைப்பது என ஓராண்டாக கற்று வருகிறேன். 

மிச்செலின் ஸ்டார்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் போராடி வருகிறீர்களா?

எங்களது உணவகம் மூன்று மிச்செலின் ஸ்டார்களைப் பெற்றுள்ளது. நாங்கள் நடத்தும் உணவகம் பல்வேறு வகைப்பட்டதாக அமைந்துள்ளது. மிச்செலின் ஸ்டார் எங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி தான் என்றாலும் அது மட்டுமே எங்களது செயல்பாட்டில் நிறைவை அளிப்பதில்லை. நாங்கள் செய்வதை எப்போதும் விரும்பி செய்கிறோம். 

இந்திய உணவுகளை நீங்கள் உங்கள் உணவகங்களில் சமைத்து பார்த்திருக்கிறீர்களா?

இந்திய துணைக்கண்ட உணவுகளை சமைத்திருக்கிறோம். இவற்றை நாங்கள் பாரம்பரிய சுவை கொண்டதாக தயாரிக்கவில்லை. பிரான்சின் பாரிசில் ஸ்பூன் என்ற உணவகம் உள்ளது. பங்குச்சந்தை நிறுவனத்தின் அருகில் உள்ள இங்கு, இந்திய உணவுகள்தான் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும். இந்தியா, உணவுகளை தயாரிப்பதில் பழமையான நாடு. இந்தியாவில் சமையல் பள்ளி ஒன்றை அமைப்பதற்கு அதுவே காரணம். 

காய்கறிகளுக்கென சபித் என்ற உணவகத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். காய்கறி உணவுகளை சமைப்பது பற்றி சமையல் கலைஞர்கள் ஏதேனும் கற்க முடியும் என நினைக்கிறீர்களா?

சமையல் கலைஞர் ஹேமந்த் ஓபராய் தான் எனக்கு  இந்திய சமையல் பற்றி கற்றுத்தருகிறார். இதன் மூலம் காய்கறிகளை அடிப்படையாக கொண்ட உணவு வகைகளை செய்ய முடியும் என நம்புகிறேன். ஜப்பானின் கியோட்டோவில் சோஜின் என்ற காய்கறி உணவு வகை உண்டு. அதை இந்திய காய்கறி அடிப்படையோடு பிரெஞ்சு உணவு முறையையும் கலந்து செய்தால் எப்படியிருக்கும். இவை ஒன்றையொன்று குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் என நினைக்கிறேன். 

பெருந்தொற்று காலத்தை எப்படி சமாளித்தீர்கள்?

அமெரிக்காவில் பென்னெட் என்ற உணவகம் நடந்து வந்தது. அதில் 75 பேர் பணியாற்றினர். பெருந்தொற்று காலத்தில் இவர்களை வேலையை விட்டு நீக்க பத்து பேர் மிஞ்சினர். பிறகு நிலைமை மீட்சியடைய ஆட்களை மெல்ல வேலைக்கு எடுக்கத் தொடங்கினோம். அமெரிக்கா, லண்டன், பாரிசிலும் இதே போலத்தான் செயல்பட்டோம். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா 

சரத் கோலி


கருத்துகள்