புகைப்படம் எடுப்பது என்பது வேட்டையாடுவதைப் போன்றது! - பாப்லோ பார்த்லோமியூ

 








பாப்லோ பார்த்லோமியூ
புகைப்படக்கலைஞர். 




எழுபது, எண்பதுகளில் இருந்ததை விட ஸ்ட்ரீட் போட்டோகிராபி என்பது எப்படி மாறியுள்ளது?

இன்று ஒரு பட்டனை தட்டினால் படத்தை எளிதாக பதிவு செய்து பார்த்துவிடலாம். அன்றைய காலத்தில் நீங்கள் ரோல் பிலிமை முழுக்க படம் எடுத்து தீர்த்தால்தான் அதனை புரோசஸ் செய்து படங்களை பார்க்க முடியும். அதற்கு குறிப்பிட்ட நேரமாகும். நீங்கள் வெளிப்புறத்தில் இருந்தால், படங்களை எடுத்து முடித்து அதனை எடிட் செய்து பார்க்க சில மாதங்களே தேவைப்படும். 1989ஆம் ஆண்டு நான் வடகிழக்கு இந்தியாவில் இருந்தேன். அங்கிருந்த நாகா பழங்குடிகளை புகைப்படம் எடுத்தேன். பிறகு ஸ்டூடியோ வந்து அதனை எடிட் செய்து புகைப்படங்களைப் பார்க்க இரண்டு மாதங்கள் ஆனது. 




இன்று நீங்கள் பார்க்கும் காட்சிகளை கண்கள் இமைப்பதை விட வேகமாக புகைப்படமாக எடுத்துவிடலாம். ஆனால் காட்சிக்கு பின்னே உள்ள நுட்பம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. குறிப்பிட்ட காட்சியை அவுட் ஆஃப் போகஸ் உத்தியில் அல்லது போகஸ் உத்தியில் எடுக்க நினைத்தால் எப்படி எடுப்பீர்கள் என்றால் பலருக்கும் பதில் தெரியாது. பழைய கால புகைப்பட கலைக்கும் இன்றைக்கும் உள்ள வேறுபாடு இதுதான். 

அனலாக் வகை கேமராவை எடுத்துக்கொண்டு எப்படி புகைப்படம் எடுக்கிறீர்கள்?

இதற்கு உதாரணமாக ரகுவின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் டூமென் என்ற புகைப்படத்தை 1970இல் எடுத்தார். இதில் மில்லிசெகண்ட் தள்ளி புகைப்படம் எடுத்தால் என்னவாகியிருக்கும்?புகைப்படத்தில் வயதானவர் வைத்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை, முன்னாடி உள்ளவர் மறைக்க அதிக வாய்ப்பிருந்தது. புகைப்படம் என்பது வேட்டையாடுவது போலத்தான். அதற்கென சரியான நேரம், வேகம், வாய்ப்பு எல்லாம் அமையவேண்டும். 

கேமரா முன்னே நிற்கும் மனிதர்கள் இன்று மாறியுள்ளனரா?

இன்று மொபைலில் கேமரா உள்ளது. அதில் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். போஸ் கொடுக்கிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள். ஆனால் தொடக்க காலத்தில் நாங்கள் புகைப்படம் எடுக்கிறோம் என்பதையே தொடர்புடைய மனிதர்கள் அறிய மாட்டார்கள். இதனால் புகைப்படம் இயல்பாக இருந்தது. பெரும்பாலும் புகைப்படம் எடுப்பதை கவனிக்கமாட்டார்கள். இதற்கு முக்கியக் காரணம், கேமரா சிறியதாக இருந்ததுதான். 

அப்படியெனில் புகைப்படத்தை நீங்கள் மறைந்திருந்து உளவாளி போல எடுக்கிறீர்கள்?

இல்லை. உளவாளி என்று கூறமுடியாது. சுவற்றில் உள்ள பறவை போல என வைத்துக்கொள்ளலாம். 


ஸ்ட்ரீட் போட்டோகிராபியில் சந்திக்கும் சவால்கள் என்ன?

அதில் உள்ள மூடநம்பிக்கைகள்தான். சீனாவில் நான் 1987இல் புகைப்படம் எடுக்க போயிருந்தபோது மக்கள் புகைப்படம் எடுக்க சம்மதிக்கவில்லை. புகைப்படம் எடுத்தால் அவர்களின் ஆன்மா திருடப்பட்டு விடும் என நம்பினார்கள். 

சோரர் ஷைசா

இந்தியன் எக்ஸ்பிரஸ் 

கருத்துகள்