இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய சோனி வாக்மேன்!

 











இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய வாக்மேன்!





இன்று ஐபோன், இயர் பட்ஸ், ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன் என வாழ்க்கை மாறிவிட்டது. பாடல் கேட்கும் அனுபவத்தை இன்று ஜேபிஎல் ஹார்மன், இன்ஃபினிட்டி, ஸ்கல் கேண்டி, பிலிப்ஸ், போஸ் என நிறைய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடி ஒன்று உண்டு. அதுதான் சோனியின் வாக்மேன். 

இன்றுமே சில காமன்சென்ஸ் இல்லாத முட்டாள்கள், ஊருக்கே ரேடியோ வைத்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஜிஃபைவ், லாவா, கார்பன் என உருப்படாத போன்களை வைத்துக்கொண்டு முத்துக்கொட்டை பல்லழகி என ஊருக்கே தண்ணீர் தொட்டியில் பகவதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி போல பாட்டு போட்டுக்கொண்டிருந்தனர். இங்கே எங்கே பிரைவசி? அதைத்தான் சோனியின் வாக்மேன் கொண்டு வந்தது. 

நான் ஒலிப்பெருக்கி என்றால் வெளிநாடுகளில் ரேடியோ, கிராம போன் என பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி வாக்மேனை அறிமுகப்படுத்தியது. இசை கேட்பதில் தனித்துவமான பொருளாகவே வாக்மேன் இன்றும் உள்ளது. 

1978ஆம் ஆண்டு சோனியின் துணை நிறுவனர் மசாரு இபுகா, பாடல் கேட்பதை எளிமையாக்க நினைத்தார். இதற்காக டிசி டி5 ஸ்டீரியோ கேசெட் ரெக்கார்டரை எளிமையான வடிவத்தில் உருவாக்க கனவு கண்டார். இதன்மூலம் அதனை எளிதாக பயணித்துக்கொண்டே பயன்படுத்தி பாடல் கேட்கலாம். சோனி நிறுவன பொறியாளர்கள், சோனி பிரஸ்மென் ரெக்கார்டரில் சர்க்கியூட்டை மட்டும் தனியாக எடுத்து, ஸ்பீக்கருடன் இணைத்து ஸ்டீரியோ ஆம்பிளிஃபையரை வைத்து வேலை செய்தனர். 

இதனுடன் ஹெட்போனான ஹெச் ஏஃ எம்டிஆர் 3 யை சேர்த்து விற்கலாம் என்பது மசாருவின் ஐடியா. இந்த ஹெட்போன் அன்று சந்தையில் விற்று வந்த பிற போட்டியாளர்களின் ஹெட்போன்களை விட எடை குறைவானது. கையாள எளிமையானது. இளைஞர்களை குறிவைத்துத்தான் வாக்மேன் விற்பனை செய்யப்பட்டது. 

தொடக்க மாதத்தில் வாக்மேன் பெரிதாக விற்பனை ஆகவில்லை.  பின்னாளில்தான் விற்பனை உச்சத்திற்கு சென்றது. இன்றுவரையும் கூட மிக அதிகளவில் விற்பனையான சோனியின் பொருட்களில் வாக்மேனுக்கு முக்கிய இடமுண்டு. சோனி வெளியிட்ட ஆண்டில் மட்டும் 400 மில்லியன் அளவில் வாக்மேன்களை விற்றது. சோனியின் ஒலித்தரம் அனைவருக்கும் தெரிந்தது தானே? 

டெல் மீ வொய் இதழ்

 2002






 



கருத்துகள்