இடுகைகள்

கொரியத் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் மவுசு பெறும் ராம்யுன் உணவு! - கொரிய தொடர்களின் விளைவு

படம்
  பாய்ஸ் ஓவர் ஃபிளவர்ஸ் கொரிய தொடர் இந்தியாவிற்குள் கொரிய தொடர்கள் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம், காதலும் அதனை வண்ணமயமாக படமாக்கும் விதம்தான். டிவி தொடர் என்றாலும் கூட நிறைய செலவு செய்து அதனை எடுக்கிறார்கள். இவையெல்லாம்தான் ஆங்கிலம், இந்திய நிகழ்ச்சிகளின் மீது ஆர்வம் குறைந்து கொரிய தொடர்கள் பக்கம் மக்கள் செல்வதற்கு காரணமாக உள்ளது. கொரிய மற்றும் சீன தொடர்களில் முக்கியமான விஷயம், அவர்களின் உணவு கலாசாரம். தொடர்களில் சாப்பிடும் கிம்ச்சி, ராம்யுன், ஸ்டீக் போர்க், வறுத்த கோழி என அனைத்து விஷயங்களையும் இந்திய மக்கள் வாங்கி  சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.  சூப்பர் மார்க்கெட் முதல் ஹைப்பர் மார்க்கெட் வரை இவற்றை தேடி வாங்கி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு லாக்டௌனில்தான் சிம்ரன் டாண்டன் கொரிய தொடர்களை பார்க்க தொடங்கினார். அதுவும் கூட இந்திய மற்றும் ஆங்கிலத் தொடர்களில் சலிப்பு ஏற்பட்டுத்தான் ஓடிடி தளங்களை நாடினார். தொடர்களின் கதைகளும் கூடவே அதில் காட்டப்பட்ட உணவுகளும் அவரை ஈர்த்தன. கொரிய வறுத்த கோழி, கிம்ச்சி ஃபிரைட் ரைஸ், டம்ப்ளிங்க்ஸ், ட்டியோக் போக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை