இடுகைகள்

அல்டிஹைடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொத்துமல்லி சுவை ஓவ்வொருவருக்கும் மாறுபடுமா?

படம்
மிஸ்டர் ரோனி கொத்துமல்லியை சாப்பிடும் சிலர் அதை சோப்பின் சுவையுடன் ஒப்பிடுகிறார்களே அது ஏன்? காரணம், அவர்களின் உடல் அந்தளவு நுட்பத்தன்மையுடன் இருப்பதுதான். இதனால், கொத்துமல்லியை சுவைக்கும் ஐந்தில் ஒருவருக்கு அது சோப் சுவையைப் போல உள்ளதாக தோன்றுகிறது. இதற்கு காரணமான வேதிப்பொருள் அல்டிஹைடு. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 14 ஆயிரம் பேரின் டிஎன்ஏவை ஆராய்ந்தனர். அதில் இரண்டு டிஎன்ஏ மட்டும் மாறுபட்டு இருந்தது. அதுவே கொத்துமல்லியை சோப்பு சுவையில் காண்பித்த மனிதர்களுடையது. இவர்களின் மரபணுவில் அல்டிஹைடு இருப்பதே காரணம். நன்றி - பிபிசி