இடுகைகள்

வழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல

அகதிவேலியால் உணவின்றி தவிக்கும் விலங்குகள்!

படம்
  அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்! போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.  போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன.  மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உய

விமானங்களின் தொழில்நுட்பத்தை 5 ஜி சேவை பாதிக்குமா?

படம்
  விமான சேவையை பாதிக்கிறதா 5 G? அமெரிக்காவில் 5 ஜி தொலைத்தொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது, விமானங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்தும் என விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கருதியது. இது பற்றிய அறிவுறுத்தலை, விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு விடுத்தது. இதன் காரணமாக ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.  பயம் ஏன்? அமெரிக்காவில் உள்ள வெரிஸோன், ஏடி அண்ட் டி ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சி பேண்ட் அலைவரிசையிலான 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளன.  இதன்விளைவாக விமானங்களில் தரையிறங்க, உயரத்தைக் கணிக்கப் பயன்படுத்தும் ரேடியோ அல்டிமீட்டர், பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க அரசின் வான்வழி போக்குவரத்து முகமை (FAA) எச்சரித்தது. எனவே, பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி, பயணத்திட்டத்தை மாற்றின.   பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் போயிங் 777 என்ற விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இதன் சிக்னல்களை 5 ஜி சேவை,  இடைமறித்து பாதிக்கும் என பலரும் அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் போஸ்டன், சிகாகோ நகரங்களுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. லாஸ் ஏஞ

திசை தெரியாமல் போகிறதா? - உங்கள் பிழை அல்ல!

படம்
Cartoon Connie Comics Blog ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சிலருக்கு வழி தேடும் திறன் ஏன் மிக குறைவாக உள்ளது? மூளையிலுள்ள முன்புறப்பகுதி வழிதேடும் திறனுக்கானது. ஆனால் இது அனைவருக்கும் அப்படியே செயல்படாது. சிலர், பிறரிடம் வழிகேட்டு ஒரு இடத்தை எளிதாக சென்று சேர்வார்கள். சிலர் அலைந்து திரிந்துதான் சரியான இடத்திற்கு செல்வார்கள். என்னைக்கூட தொலைந்து போய்விடுவான் என எங்கேயும் போக அனுமதிக்க மாட்டார்கள். என்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையால் நான் புதிய இடங்களுக்கு மிகச்சரியாக, தவறாகச் செல்வேன். தட்டுத்தடுமாறித்தான் அந்த இடங்களை சென்று சேர்ந்துள்ளேன். அதனால் கவலைப்படாதீர்கள். உடனே எக்ஸ்ட்ரோவர்ட், இன்ட்ரோவர்ட் என கிளம்புவார்கள். உள்ளூரில் ஓரிடத்திற்கு ஒரு பெயரைச் சொல்லுவார்கள். நமக்கு காகித த்தில் திருத்தமான பெயர் இருக்கும். எனவே தவறுகள் நடப்பது சிரமம். இதை சாக்காக வைத்து நாலைந்து மனிதர்களோடு பேசுகிறீர்கள். முன்னே பின்னே பார்க்காத கட்ட டங்களை அறிந்துகொள்கிறீர்கள் என்றால் லாபம்தானே? நன்றி:பிபிசி எர்த்

வழி தெரியாமல் தடுமாறுவது ஏன்?

படம்
Design Intervention நம்மில் சிலர் வழி சொன்னாலும், அதனைக் கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறுவது ஏன்? அண்மையில் நண்பர், அமேசான் டெலிவரி பையனுக்கு வழிசொல்லியே களைத்துப்போனார். பில்டிங் பின்னாடி ஹாஸ்டல். அதுக்குப்பக்கத்தில் ஆபீஸ் முதல் மாடியில் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எதிர் முனையில் பையன், பில்டிங் என்பதிலேயே ஸ்ட்ரக் ஆகி நின்றுவிட்டார். எழுத்தாளர் அ.முத்துலிங்கம், தன்னை ஒரு தெருவில் விட்டால் விரைவிலேய தொலைந்துபோய்விடுவேன் என்று பகிரங்கமாக பலவீனத்தை  சொல்லியிருக்கிறார். இதற்கு காரணம் என்ன? மூளையிலுள்ள ஃபிரன்டல் மற்றும் டெம்பொரல் பகுதிகள்தான். திசைகளை மிகச்சிறப்பாக காம்பஸ் இல்லாமல் கண்டுபிடிப்பவர்களுக்கு இப்பகுதிகள் பெரிதாக இருப்பதை அண்மைய ஆய்வுகள் கூறியுள்ளன. நன்றி: பிபிசி