இடுகைகள்

உணவ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்நாக்ஸ்கள்தான் எதிர்கால உணவா? மாண்டெல்ஸ் ஆய்வு முடிவுகள் வெளியீடு

ஸ்நாக்ஸ் சாப்பிடு சோற்றை கைவிடு இப்படி முடிவெடுத்தவர்கள் வேறு யாருமில்லை உலகளவில் இந்தியர்கள் இச்சாதனையைச் செய்திருக்கிறார்கள். உணவு நிறுவனமான மாண்டெல்ஸ் செய்த ஆய்வில் இந்தியர்கள் நொறுக்குத் தீனிக்கு முதன்மை இடம் கொடுத்து சோற்றையும், சப்பாத்தியையும் தள்ளி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேற்சொன்ன ஆய்வு பன்னிரண்டு நாடுகளிலுள்ள ஆறாயிரம் பேர்களிடம் நடத்தப்பட்டது. அதில் 75 சதவீத இந்தியர்கள் அதுதாங்க எங்க வாழ்க்கை எதிர்கால உணவு கூட என்று சத்தியம் செய்திருக்கிறார்கள். 53 சதவீத ஆட்கள் உலகளவில் இதே சத்தியத்தை சிலுவை வைத்து சொல்லியிருக்கிறார்கள். இந்தியர்கள் நாள் முழுக்க சிறிது சிறிதாக ஏதேனும் கொறித்துக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக சாப்பாட்டுக்கு முன்னதாக அவர்கள் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார்கள் என தங்கள் கம்பெனிக்கான பிடிமானத்தை மாண்டெல்ஸ் கண்டுபிடித்துவிட்டது. தற்போது உலகளவில் உப்பு பிஸ்கெட்டுகளுக்கான சந்தை 60 ஆயிரம் கோடியாக உள்ளது. விரையில் இந்த எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது. நன்றி - இடி