இடுகைகள்

வர்த்தகப்போட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் ட்ரம்ப்!

படம்
ஹூவெய் நிறுவனத்தை அமெரிக்க தற்போது கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க டெக் நிறுவனங்கள் சந்தையில் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. சீன அரசின் உளவு நிறுவனமாக ஹூவெய் செயல்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்ய, சீனாவின் மீது வர்த்தக தடை நடவடிக்கைகள் தீவிரமாயின. கூடுதலாக அந்நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவெய் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன. அதன் உச்சமாக அந்நிறுவன தலைவரின் மகளை கனடாவில்  கைது செய்யும் அளவு பிரச்னை முற்றியது. குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவரின் மீதான தீவிரமான கைது நடவடிக்கை என்பது குறியீடாக தொடர்புடைய நாடு குறித்தும் என்பதை யாரும் அறியாதவர்களல்ல. இதுகுறித்து ஹூவெய் நிறுவனம், இது அரசியல்ரீதியான நடவடிக்கை என்று கூறியதோடு பேச்சை இறுதிக்கு கொண்டுவந்தது. ஹூவெய் நிறுவனத்திற்கு சீன அரசின் ஆதரவு இல்லை என மறுக்க முடியாது. ஏன் ட்ரம்ப் கூட அந்நாட்டு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனத்திற்கு இறக்குமதி வரி விதிக்கக்கூடாது என இந்தியாவை எச்சரிக்க வில்லையா என்ன? இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் 2 வது இடம