இடுகைகள்

இதழியல் அறம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகையாளர்கள் தம் நண்பர்களைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுதினால்...

படம்
  பத்திரிகையாளராக ஒருவர் இருந்தாலும் அவருக்கும் மனதில் சில ஆதரவு, விருப்பு வெறுப்பு கருத்துகள் இருக்கும். அரசியல் கட்சி தொடங்கி, சினிமா பிரபலம், சிறந்த தொழில்நிறுவனம், வங்கி முதலீடு, பிடித்த ஆளுமை, ஆதரவான பல்வேறு துறைசார்ந்த நண்பர்கள் என விளக்கிக் கூறலாம். ‘’பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு நண்பர்களாக இருக்க முடியாது’’ என்று அவுட்லுக் வார இதழ் ஆசிரியர் வினோத் மேத்தா கூறுவார். நான் இங்கு உண்மையான பத்திரிகையாளர்களைப் பற்றி சொல்கிறேன்.   நீங்கள் அரசியல்வாதிகளின் நண்பராக இருந்தால், அவரைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுத முடியாது. அவர் செய்த ஊழல்கள், தவறுகள் பற்றி நண்பர் என்ற காரணத்திற்காக பூசி மெழுகி சமாளிக்க வேண்டும். உங்கள் கட்டுரையைப் படிக்கும் வாசகர் இதனால் ஏமாற்றப்படுகிறார். ஆக, பத்திரிகையாளராக நீங்கள் நேர்மையாக செயல்படவில்லை என்றாகிறது. பத்திரிகையாளர் என்பது தொழிலாக இருந்தாலும் வேலையைக் கடந்து அவரும் விருப்பு, வெறுப்பு கொண்ட மனிதர்தான். பொதுவாக 30 வயதில் ஒருவருக்கு உலகம், சமூகம் என திட்டவட்டமாக முடிவுகள் உருவாகிவிடுகின்றன. ஆனால் பத்திரிகையாளரைப் பொறுத்தவரை இப்படி முடிவுகளை உரு

செய்தியை ஆராய பத்து நொடி விதி முக்கியம்!

படம்
  செய்திகளை எழுதுவது, அதிலுள்ள அறம் பற்றி யோசிப்பது எல்லாம் சரிதான். ஆனால் செய்தியை எழுதுவது என ஒப்புக்கொண்டால் அதை குறிப்பிட்ட நேரத்தில் எழுதி க் கொடுத்தே ஆகவேண்டும்தானே? பிராந்திய மொழி நாளிதழில் குறிப்பிட்ட பகுதிகளை பார்த்து செய்தி சேகரிப்பவர் குறைந்தபட்சம் நான்கு செய்திகளையேனும் தரவேண்டிய அழுத்தம் இருக்கிறது. செய்தியை முந்தி எழுதி தருவதில் உங்கள் சக போட்டியாளர்களாக நிருபர்களும் உங்கள் கூடவே அருகில் இருக்கிறார்கள். நேரவரம்பும் இருக்கிறது. எப்படி இந்த அழுத்தங்களை சமாளிப்பது? ஒரு செய்தியை எழுதி அனுப்பலாமா, காட்சி ஊடகத்தில் வீடியோவை ஒளிபரப்பலாமா என்ற சூழ்நிலை வந்தால் பத்து நொடி சிந்தனை என்ற விதியைக் கையாளலாம். இவ்வகையில் உங்களிடம் உள்ள செய்தியை எந்த வித அழுத்தங்கள் இன்றி கவனமாக ஆராய வேண்டும். எனக்கு என்ன தெரிந்திருக்கிறது, இன்னும் என்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்ற இரு கேள்விகள் செய்தியில் முக்கியமானவை. அப்போதுதான் செய்தியை ஆழமாகவும் விரிவான தன்மையில் செம்மையாக்க முடியும். முழுமையில்லாத செய்தியை எப்போதும் பிரசுரிக்க கூடாது. ஒரு செய்தியை எழுதுகிறீர்கள். அதில் தனிநபரின் மதம் பற்றிய குற

செய்திகளை எழுதும்போது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
  ஒரு விவகாரத்தில் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கிறீர்கள் என்றால், முதலில் அந்த விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள முயலுங்கள். அதில் மக்களுக்கு கூறவேண்டிய விஷயம் என்னவென்று பத்திரிகையாளர்கள் இறுதியான முடிவுக்கு வரவேண்டும். ஒரு விவகாரம் சரியா, தவறா என்று முடிவெடுப்பது உண்மையான கொள்கை ரீதியான தன்மையைக் குறிக்காது. அந்த விவகாரத்தில் ஏதும் செய்யாமலேயே சரியான முடிவு கிடைத்துவிடும் என்றாலும் கூட அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு பிரச்னையை வெவ்வேறு வழிகளில் சரியானது என்று சொல்லும்படி தீர்க்க முடியும் என்றால் கீழ்க்கண்ட கேள்விகளை பத்திரிகையாளர் கேட்டுக்கொண்டு பதில் கண்டறிவது முக்கியம். பிரச்னையை இந்த வகையில் தீர்க்கும்போது உலகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அரசு, சட்ட விதிகள், மத கோட்பாடுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? அவை என்ன மாதிரியான எதிர்வினைகளை வெளிப்படுத்தும்? அனைத்து மக்களுக்கும் சமரசமாக செல்லும்படியான தீர்வு, நடுநிலையான முடிவு ஏதேனும் இருக்கிறதா? பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும்படி என்னால் செயல்பட முடியுமா? எனது செயல்பாட்டால் மக்கள் பயன் பெறுவார்களா? பிரச்னையை நான

நேர்மை, சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை எனும் மூன்று நம்பிக்கை கொள்கைகள்! - இதழியல் அறம்

படம்
  உலக நாடுகளிலுள்ள பத்திரிகை ஊடக நிறுவனங்கள் அவற்றுக்கே உரிய கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நிலப்பரப்பு, உள்ளூர் கலாசாரம் சார்ந்து சில அம்சங்கள் மாறுபடலாம். உலகளவில் புகழ்பெற்ற மதிக்கப்படும் ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ், பின்பற்றும் இதழியல் கொள்கைகளுக்கு ட்ரஸ்ட் பிரின்சிபல் என்று பெயர். இந்த நம்பிக்கை கொள்கைகளில் சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை, நேர்மை ஆகியவை அடங்கியுள்ளன. இந்த மூன்று கொள்கைகளையும் நிருபர் / செய்தியாளர், ஆசிரியர் ஆகியோர் அனைத்து செய்திகளிலும், கட்டுரைகளிலும் கடைபிடிப்பது அவசியம். இப்போது பத்து முக்கியமான கடைபிடிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம். 1.     செய்திகளில் எப்போதும் துல்லியம் இருக்கவேண்டும். 2.       நேரும் தவறுகளை வெளிப்படையாக ஏற்று சரி செய்யவேண்டும். 3.     பாகுபாடற்ற தன்மையை சமநிலையாக பராமரிக்க வேண்டும். 4.     ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி மேலாளர் / மூத்த ஆசிரியரிடம் கூறவேண்டும். 5.     ரகசியமான செய்திகளை எப்போதும் மதிக்க வேண்டும். 6.     செய்திகளைக் கொடுக்கும் ஆதாரங்களை, அதிகாரத்திடமிருந்து பாதுகாக்கவேண்டும். 7.     கட்டுரை அல்லது செம்மைப்