இடுகைகள்

சத்தீஸ்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்

படம்
              பூபேந்திரசிங் பாதல் சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா ? நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் . 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம் . கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது . தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது . முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு , உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும் . அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும் . மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள் , முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே ? இங்கே பாருங்கள் . ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்குரிய பதவியில் இருக்கிறார் . அதற்க

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவர்! - ஹிட்மா

படம்
                  மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர் . இதில் மூளையாக செயல்பட்டவர் கமாண்டர் ஹிட்மா என்று அறிய வந்துள்ளது . இவரது ராணுவப்படைதான் அரசின் படைகளை தாக்கி வீழ்த்தியுள்ளது . ஹிட்மா , வெளியே தெரியாத கமாண்டர் தலைவராக மக்கள் விடுதலை கொரில்லா படைபிரிவை நடத்தி வந்தவர் ஆவார் . தண்டகாரண்யா சிறப்பு பகுதி அமைப்பின் உறுப்பினருமாவார் . தெற்கு பஸ்தர் , பிஜாபூர் , சுக்மா ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கி வருகிறது . 2010 இல் சிஆர்பிஎப் படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்களைக் கொன்றது . 2013 இல் மாநில காங்கிரஸ் தலைவரை கொன்றது , பேஜி , புர்காபால் , மின்பா , டாரம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு . இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 25 லட்சம் பரிசு கொடுப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது . பிற மாநில அரசு அமைப்புகள் ரூ .20 லட்சம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர் . ஹிட்மா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை இன்ன

முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி!- முதலையால் ஒற்றைக்கையை இழந்தும் குறையாத அன்பு!

படம்
                  முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி ! சத்தீஸ்கர் மாநிலத்தில் கோட்மி சோனார் எனும் குளத்தில் உள்ள மக்கர் வகை முதலைகளை பாதுகாக்கும் பணியை 2006 ஆம் ஆண்டிலிருந்து செய்துவருகிறார் . சீத்தாராம் தாஸ் என்பதுதான் அவரின் பெயர் . ஆனால் கிராமத்தினர் ஒற்றைக்கை இல்லாத அவரின் பணிகளைப் பார்த்து பாபாஜி என்று அழைக்கின்றனர் . துன்பம் செய்தவருக்கும் நன்மை நினைத்து நல்லது செய்யவேண்டும் என்று சொல்வார்கள் . திருக்குறளிலும் கூட இப்படி சொல்லப்படுவதுண்டு . உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்தால் அவரை நாம் சந்திக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் ? பாபாஜியும் அப்படித்தான் . 2006 ஆம் ஆண்டு குளத்திலுள்ள முதலை முட்டைகளை காப்பாற்ற முயன்றார் . இதில் கோபமுற்ற பெண் முதலை அவரது இடதுகையை கடித்துவிட்டது . முற்றாக சேதமடைந்த கையை அகற்ற வேண்டியதாகிவிட்டது . அப்படி ஒரு கொடுமை நடந்தபோதும் பாபாஜிக்கு முதலைகள் மீது கருணை குறையவில்லை . இப்போதும் அவர் காப்பாற்ற நினைத்த மூன்று முதலைகளை வந்து பார்த்துவிட்டு செல்கிறார் . தினசரி மூன்று முறை அதனை அழைக்கிறார் . அவையும் யார் அழைப்பது என எட்டிப்பார்த்துவிட்டு அவரை அட