இடுகைகள்

நிகிதா சிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூகு எனும் கொடிய வழக்கம்!

படம்
ozy.com நீங்கள் திருமணம் செய்வது சிறப்பான விஷயம். ஆனால் உங்கள் சொந்த கிராமத்தினருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தபின்தான் உங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? 2016 ஆம் ஆண்டு புத்து நாக் என்பவர், நிகிதா சின்கா, என்ற சமூக செயற்பாட்டாளரை அணுகினார். ஒரே கோரிக்கைதான். இந்தியர்கள் வேறு என்ன கோரிக்கை வைப்பார்கள். நான் லவ் பண்ணுகிற பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்றுதான். அப்புறம்தான் அவரின் பெற்றோரிடம் பேசினார் சிங். ஆனால் அவர்கள் கல்யாணமெல்லாம் பண்ண முடியாது மேடம் என்று சொல்லி விட்டனர். நிகிதா சின்கா அப்புறம் ஃபிளாஷ்பேக்கை கேட்டு ஷாக்கானார். கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லி கேட்டவர் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார். பத்து வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. இதற்கு பெயர் தூகு(dhuku). பழங்குடிகளின் சமூகமான நாக், கல்யாணம் செய்தால் கட்டாயமாக முழு கிராமத்திற்கும் சோறு போட்டு விருந்து வைத்தே ஆக வேண்டும். பட்ஜெட் பத்மநாபனாக காசு இல்லையே என கையைப் பிசைந்தால் கல்யாணம் கிடையாது. பட் ஒண்ணாக வாழ தடையில்லை. இவர்களை கிராமத்தில் தூகு என்று குறிப