payonin pakkaM

எனக்கு பிடித்த எழுத்தாளர் நல்லவனாக இருப்பதன் சோகங்கள் Posted on May 31, 2013 Woodcutter/cut my shadow./Deliver me from the torture/of beholding myself fruitless. - Federico Garcia Lorca இப்போதெல்லாம் வாழ்க்கையின் பெரும்பகுதி முழுவதும் ரகசியமாக மனம் புழுங்கிக் கிடப்பதிலேயே கழிகிறது. குற்றவுணர்வைவிடக் கொடிய நரகம் ஒன்று உண்டென்றால் அது இன்னும் அதிக குற்றவுணர்வுதான். எப்படி நான் மட்டும் இவ்வளவு நல்லவனாக இருக்கிறேன்? எத்தனையோ பேர் இருக்கையில் நான் மட்டும் ஏன்? கசாப்ளாங்கா கதையாக இருக்கிறதே. என்னிடம் அப்படி என்ன விசேசம்? நான் அடைந்திருக்கும் உயரம்கூட என்னைக் கீழிறக்கவில்லையே? தடுக்கி விழும் இடமெல்லாம் கைகொடுத்துத் தூக்கிவிடுபவர் அயோக்கியராக இருக்கிறார். பவுடர் பூசிக்கொள்ளக் கண்ணாடியைப் பார்க்க முடியவில்லை. என் தெய்வாம்சம் என் கண்களையே குருடாக்கிவிடும் நிலைமை. நான் இவ்வளவு நல்லவனாக இருப்பதால்தான் மற்றவர்கள் எல்லோருமே அயோக்கியர்களாக இருக்கிறார்களா, அல்லது அது தனியா? எனக்கென்னவோ தவறு என் மீதுதான் என்று தோன்றுகிறது. நான் அடைந்திருக்கும் உயரம் – அது எனக்கே பெரும் பாரம். இ