இடுகைகள்

லெஸ்பியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேகன் ராபினோ - பெண்களுக்கான உரிமைப் போராளி

படம்
  மேகன் ராபினோ - கால்பந்து உலகின் கலகத் தலைவி மேகன் ராபினோ மேகன் ராபினோ தனது இணையரான சூ பேர்டுடன்... மேகன் ராபினோ – கால்பந்து உலகின் உரிமைப் போராளி   பெண்கள் கால்பந்துபோட்டிகளை ஆக்ரோஷமானதாக மாற்றி அதை லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும்படி செய்த அமெரிக்க விளையாட்டு வீரர்களில் முக்கியமானவர் மேகன் ராபினோ. இவரது தந்தை கட்டடங்களை கட்டித்தரும் ஒப்பந்ததாரர். அம்மா, ஹோட்டல் ஒன்றில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். ராபினோவுக்கு, அவருடன் பிறந்த இரட்டையரான சகோதரி ஒருவர் உண்டு. தற்போது 38 வயதாகும் மேகன் ராபினோ, இளம் வீரர்களுக்கு முன்மாதிரியான வீரர்.   ஐந்து அடி ஏழு அங்குலம்   உள்ள இவர், பெண்களுக்கு சம ஊதியம், பால்புதுமையினருக்கு விளையாட்டு அணியில் விளையாட உரிமை ஆகியவற்றை கேட்டு போராடி வருகிற போராளி. டச் மோர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சூ பேர்ட் என்ற தனது காதலருடன் இணைந்து தொடங்கி நடத்தி வருகிறார். அமெரிக்காவில் ராபினோவுக்கு பெண்கள் மத்தியில் பெரும் மரியாதை உண்டு. அதை அவர் களத்திலும் களத்திற்கு வெளியிலும் சம்பாதித்துக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும்.   2019ஆம் ஆண்டு அமெரிக்க பெண்கள் கால்பந்து

ஆணோ, பெண்ணோ காதலை ஒளித்து வைக்காதீர்கள்! - ஹோலி ஸ்லெப்ட் ஓவர் 2020

படம்
      Holly Slept Over ஹோலிஸ்லெட்ப் ஓவர் Director: Joshua Friedlander Writer(s): Joshua Friedlander   Music by Jason Nesmith Cinematography John W. Rutland     நோயல், ஆட்ரே என்ற இருவரும் தம்பதிகள். ஓராண்டாக முயன்றும் குழந்தை பெற முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்திக்க ஆட்ரேவின் தோழி ஹோலி வருகிறாள். அவளுக்கும் ஆட்ரேவுக்கும் கல்லூரி காலத்தில் நடந்த உறவு நோயலுக்கு தெரிய வர அவர் அதிர்ச்சியாகிறார். உண்மையில் இருவருக்குள்ளும் என்ன உறவு என்பதுதான் படத்தின் முக்கியமான மையக்கதை.  படம் எதையும் மறைமுகமாகவெல்லாம் சொல்லவில்லை. நேரடியாகவே காதல், காமம், குழந்தை பிறந்த பிறகு கணவனை காயவிடும் மனைவி என பல்வேறு விஷயங்களை பேசுகிறது. ஒருவகையில் காதல் கல்யாணத்திற்கு பிறகு என்னவாகிறது என பேசுகிற படமாகவும் இருக்கிறது.  நோயலின் நண்பர் பீட்டே, மனைவி பற்றி நோயலிடம் புலம்புகிறார். நோயல் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அவருக்கும் புதுபுது விதங்களில் உடலுறவை அனுபவிக்க நினைக்கிறார். ஆனால் இருவருக்குள்ளும் சந்தோஷம் காவிரி ஆறாக பெருகும்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. என்

மகளிடம் பேச முடியாமல் தடுமாறும் கூலிக்கொலைக்கார தந்தையின் மனப்போராட்டம்! - ஃபிரைடே கில்லர்

படம்
            பிரைடே கில்லர் 2011 Director: Yuthlert Sippapak Actors: Anna Chuancheun , Apinya Sakuljaroensuk , Chumphorn Thepphithak , Jaran 'See Tao' Petcharoen , Kowit Wattanakul , Ploy Jindachote , Suthep Pongam Country: Thailand வெள்ளிக்கிழமை மட்டும் பிறரை திட்டம் போட்டு கொல்லும் கொலைகாரன் . சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறான் . வந்தவுடன் அவனுக்கு சிகரெட் கொடுத்து புகைக்க சொல்லுகிறான் ஒருவன் . அவனை விடுதலையானவன் பார்த்ததே கிடையாது . அவன் யாரென்று கேட்கும்போது , திடீரென கத்தியால் அவனைக் குத்திவிட்டு ஓடிவிடுகிறான் . கீழே ரத்தசகதியில் கிடப்பவனை காவல்துறையைச் சேர்ந்த பெண் ஒருவள் காப்பாற்றுகிறாள் . அவனுக்கு தன் அம்மா எழுதிக்கொடுத்த கடிதத்தை கொடுக்கச்சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள் . அக்கடிதத்தைப் படிப்பவன் , ஆவேசம் அடைகிறான் . ஆனால் மீண்டும் அந்த கடிதத்தைப் படித்துவிட்டு தன்னை மருத்துவமனையில் சேர்த்த பெண்ணைப் பார்க்கச் செல்கிறான் . அங்கு நேரும் ஒரு அசம்பாவித நிகழ்ச்சியை அவன் தன்னுணர்வின்றி தடுக்க நினைக்க , அது அவன் மேல் வீண்பழியாக விழுகிறது . இதனால் அவனை ம