இடுகைகள்

செயல்வழிக் கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாண்டிசோரி முறைக்கு மாறும் அமெரிக்க கல்வி!

படம்
தொடக்க கல்விக்கு எகிறும் எதிர்பார்ப்பு!  அமெரிக்க தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ், ஏழைக் குழந்தைகளின் தொடக்க கல்விக்கு நூறுகோடி ரூபாய் வழங்க உள்ளார். இங்கு கூறப்படும் குழந்தைகளின் தொடக்க கல்வி என்பது ப்ரீகேஜி நிலையிலுள்ள குழந்தைகளை உள்ளடக்கியது. தற்போது, அமெரிக்காவில்  குழந்தைகளின்  தகவல்தொடர்பு, நினைவுத்திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேம்படுத்த தொடங்கியுள்ளனர்.  இதற்காகத்தான் அமெரிக்க தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ் நிதியுதவி வழங்க முன்வந்திருக்கிறார். இச்செயல்முறையில்  பொறியியல் பாடநூல்களை படித்து காட்டி மனப்பாடம் செய்யச் சொல்லுவார்களோ என பயப்பட வேண்டாம். மாதுளம்பழத்தை எடுத்து உரித்து அதன் சிவப்பாக உள்ள விதைகளை ஒரு டம்ளரில் போடச்சொல்லுவார்கள். அவ்வளவுதான். இதற்கான குறிப்பை மட்டுமே ஆசிரியர் குழந்தைக்கு கூறுவார். அக்குழந்தை என்ன செய்கிறது என்று கவனித்துக்கொண்டு இருப்பதுதான் வகுப்பில் ஆசிரியரின் பணி. இதற்கான தேவை என்ன உள்ளது என்று பலரும் நினைக்கலாம். காரணம், காலம்தோறும் வேலைவாய்ப்புகள் மாறி வருகின்றன. இதனால் குழந்தைகளை  படங்களைக் கொண்ட புத்தகங்களை அச்சிட்டு வழங்கி படித்துக்கொ