இடுகைகள்

நிலவின் தரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவுக்குச் செல்லும் தீவிரம் ஏன்?

படம்
சந்திரயான் சிறப்பிதழ்! நிலவுக்குச்செல்ல ஏன் இந்த அவசரம்? அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று வந்த வரலாற்று நிகழ்ச்சி நடந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்குச் செல்ல பேரார்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பூமியைப் போல மற்றொரு மனிதர்கள் வாழும் சூழல் கொண்ட கோளைக் கண்டுபிடிப்பதுதான். இந்தியா நிலவை ஆராய முடிவெடுத்து சந்திரயான் -1 விண்கலனை விண்ணில் செலுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நிலவின் பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததும்தான் விமர்சகர்கள் அமைதியானார்கள்.  சந்திரயான் 1 இல் வட்டப்பாதையைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மட்டுமே உண்டு. அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாக 386 கோடி ரூபாயை மட்டுமே இந்தியா கொண்டு புதிய கண்டுபிடிப்பை சாதித்தது. சந்திரயான் 2 இல் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. சோவியத் ரஷ்யா 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று லூனா 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவே நிலவுக்குச் சென்ற முதல்