இடுகைகள்

முதலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணியாளர்களைக் கொன்றால்தான் முதலைக்கு உணவு கிடைக்கும்!

படம்
  ஜோபால் 1892ஆம் ஆண்டு பிறந்த முதலை விரும்பி. முதலை நேயர். சோசியபிள் இன் என்ற ஹோட்டலை நடத்தி வந்தார் ஜோ பால். இவருக்கு நிறைய மனைவிகள் உண்டு. முதலைகளுக்கு இறைச்சியை தனது கையால தூக்கி வீசுவது பிடித்தமானது. ஒருமுறை இவரது குளத்தில் அழுகிய இறைச்சி வாடை வருகிறது என அருகில் வாழ்ந்த வீட்டுக்காரர் கூறினார். அதற்கு ஜோ டக்கென துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அதை தடவியபடியே, ‘’அழுகிய இறைச்சியை முதலைக்கு போட்டேன். அதுதான் காரணம்’’ என்று சொன்னார். துப்பாக்கி கையில் இருக்க சமாதானம் ஏற்படாமல் இருக்குமா என்ன? டெக்ஸாஸின் எல்மண்டோர்பில் வாழ்ந்தவர், ஜோபால். எல்லோருடனும் பேசும் ஜோவியலான ஆள்தான். ஆனால் அவரது இருளான பகுதியை பலரும் அறியவில்லை.ஜோ பாலைப் பற்றி பலரும் அறிய வந்தது, அவரது ஹோட்டலில் வேலை செய்த பெண் பணியாளர்கள் காணாமல் போன சம்பவத்தின் போதுதான்… முதல்முறை ஒரு பெண் பணியாளர் காணாமல் போனார். காவல்துறை சம்பிரதாய சடங்காக ஜோவிடம் கேள்வி கேட்டபோது, அந்த பெண் வேறு வேலை தேடி போனதாக கூறிவிட்டார். சரி சொன்ன பதில்தான் லாஜிக்காக இருக்கிறதே என நினைத்து விட்டுவிட்டார்கள், ஆனால் அடுத்தடுத்து பெண்கள் காணாமல் போனபோது

தூங்கும் கோணமே ஆளுமையை தீர்மானிக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  முதலைகள் நீரில் குதிரைபோல பாய்ந்து செல்லும்! ஒப்பீட்டுக்காக இப்படி உயர்த்தி சொல்லுகிறார்கள். உண்மையில், குதிரைகள் நிலத்தில் பாய்ந்தோடுவதைப்போல முதலை நீரில் வேகமாக செல்லுமா என கேட்காதீர்கள். அது சாத்தியமில்லை. முதலை மணிக்கு நீரில் 11 கி.மீ. வேகத்தில் பாய்ந்து இரையைப் பிடிக்கும்  என 2019இல் வெளியான நேச்சர் இதழ் கட்டுரை கூறுகிறது. முதலை நான்கு கால்களுடன்  நீரைக் கிழித்து வேகமாக செல்வதைப் பார்ப்பது நன்றாகவே இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் குதிரையை நினைக்க கூடாது அவ்வளவுதான்!  பிறந்த குழந்தையின் உடலில் முக்கால் பங்கு நீர்தான்! உண்மைதான். பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீத நீர் இருக்கும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தகவல் அளித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு உடலில் உள்ள நீரின் அளவு  55 முதல் 60 சதவீதம் இருக்கும்.  கண்ணின் கண்மணியை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்!  மிக  அரிதாக இப்படி நடக்கலாம். பொதுவாக உடலில் நடக்கும் நிறைய செயல்பாடுகள், நாம் கட்டுப்படுத்தாமலேயே நடக்கும். இருட்டில் இருந்துவிட்டு திடீரென ஒளியைப் பார்த்தால் அதனை எதிர்கொள்ள முடியாமல் கண்களை சுருக்குவோம். அதாவது இமைகளை கீழே

ஓராண்டு இடைவெளியில் சமூகத்தை கற்ற சிறுவனின் கல்வி! - தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ்

படம்
  ராகுல் அல்வரிஸ் - தெருக்களே பள்ளிக்கூடம் தெருக்களே பள்ளிக்கூடம் ராகுல் அல்வரிஸ் தமிழில் - சுஷில்குமார்  தன்னறம் நூல்வெளி ரூ.200 பக்கங்கள் 203 பொதுவான கல்விமுறையில் நாம் படித்து நிறுவனத்தில் வேலைக்கு செல்லலாம். ஆனால் இதில் நாம் கற்பவை பெரும்பாலும் உதவாது. அவை கல்வி சான்றிதழில் இருக்கும். நேரடியாக வாழ்க்கையில் அவை பெரிய பங்காற்றாது. இப்போது கல்லூரி படிப்பவர்கள் பெரும்பாலானோர்க்கு அவை கல்யாணப் பத்திரிக்கையில் குறிப்பிட உதவுகிறது. பெருமைக்கு மட்டுமே.  இதைத்தாண்டி நடைமுறை வாழ்க்கையைக் கற்க நாம் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி என மூடிய வகுப்புகளைத் தாண்டி சாளரம் திறந்தால்தான் சூரிய ஒளி, காற்று என வெளிப்புற சூழல்களை உணரமுடியும்.  கோவாவைச் சேர்ந்த ராகுலும் அப்படித்தான் தனது படிப்பை அமைத்துக்கொண்டார். ஜூன் 1995 முதல் ஜூன் 1996 என பள்ளிப்படிப்பில் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென என்பதை தெருக்களே பள்ளிக்கூடம் நூல் விவரிக்கிறது.  ராகுல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது உறவினர்கள், நண்பர்கள் போல கல்லூரியில் சேரவில்லை. அதில்

முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி!- முதலையால் ஒற்றைக்கையை இழந்தும் குறையாத அன்பு!

படம்
                  முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி ! சத்தீஸ்கர் மாநிலத்தில் கோட்மி சோனார் எனும் குளத்தில் உள்ள மக்கர் வகை முதலைகளை பாதுகாக்கும் பணியை 2006 ஆம் ஆண்டிலிருந்து செய்துவருகிறார் . சீத்தாராம் தாஸ் என்பதுதான் அவரின் பெயர் . ஆனால் கிராமத்தினர் ஒற்றைக்கை இல்லாத அவரின் பணிகளைப் பார்த்து பாபாஜி என்று அழைக்கின்றனர் . துன்பம் செய்தவருக்கும் நன்மை நினைத்து நல்லது செய்யவேண்டும் என்று சொல்வார்கள் . திருக்குறளிலும் கூட இப்படி சொல்லப்படுவதுண்டு . உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்தால் அவரை நாம் சந்திக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் ? பாபாஜியும் அப்படித்தான் . 2006 ஆம் ஆண்டு குளத்திலுள்ள முதலை முட்டைகளை காப்பாற்ற முயன்றார் . இதில் கோபமுற்ற பெண் முதலை அவரது இடதுகையை கடித்துவிட்டது . முற்றாக சேதமடைந்த கையை அகற்ற வேண்டியதாகிவிட்டது . அப்படி ஒரு கொடுமை நடந்தபோதும் பாபாஜிக்கு முதலைகள் மீது கருணை குறையவில்லை . இப்போதும் அவர் காப்பாற்ற நினைத்த மூன்று முதலைகளை வந்து பார்த்துவிட்டு செல்கிறார் . தினசரி மூன்று முறை அதனை அழைக்கிறார் . அவையும் யார் அழைப்பது என எட்டிப்பார்த்துவிட்டு அவரை அட