இடுகைகள்

அணுகுண்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளியில் பேரரசைக் கட்டும் சீனா! - விண்வெளியில் சாதித்தது எப்படி?

படம்
    இடதுபுறத்தில் விஞ்ஞானி ஸூசென்   விண்வெளியில் பேரரசு – சீனாவின் லட்சியத்திட்டம்   2019 ஆம் ஆண்டு, சீனாவில் “வாண்டரிங் எர்த்” என்ற திரைப்படம் வெளியானது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும், இணையத்தில் நெட்பிளிக்சிலும் கூட வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது. படத்தின் கதை இதுதான். பூமியை சூரியக்குடும்பத்தில் இருந்து பிரித்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி கொண்டு சென்றால்தான், அழிந்த மக்கள் போக மீதியுள்ளவர்கள் உயிர்பிழைக்கமுடியும். இப்படி கொண்டு செல்ல பூமியை நகர்த்த வேண்டும். இதற்கென ஏராளமான எந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவை பழுதடையும் சூழலில், அதை சரிசெய்ய போராடும் அறிவியலாளர்களின் போராட்டத்தையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பற்றி சீனப்படம் பேசுகிறது. அடிப்படையில் விண்வெளி சார்ந்த படம் என்றாலும், இதிலுள்ள முக்கிய நோக்கம் சீன அரசின் லட்சியத்தை உலகிற்கு கடத்துவதுதான். எனவேதான், சீன அரசின் சீனா ஃபிலிம் குரூப் கார்ப்பரேஷன் படத்தை தயாரித்துள்ளது. சீன கல்வித்துறை வாண்டரிங் எர்த் படத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் திரையிட்டுக் காட்டுவதற்கு உத்த

பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு!

படம்
  பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம்! உலகம் தோன்றியது முதல் பல்வேறு சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. வளமான நிலம் வளமிழந்து பாலையாவதும், பாலையான மண் மெல்ல வளம் பெறுவதும் இயற்கையின் சுழற்சிதான். இப்படி மாறுவதில் மனிதர்களின் பங்களிப்பு என்ன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டறிய முயன்று  வருகின்றனர். இதற்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயர்.  நிலத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிடுவதன் மூலம் வெப்பமயமாதல், மாசுபாடு, வேதிப்பொருட்களின் பாதிப்பு, அணு ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறியலாம்.  கடந்த 11,650 ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு,  மனிதர்கள் காரணம் என புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  இதனை சில மானுடவியல் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். அணு ஆயுத வெடிப்பு,  நிலக்கரியை எரிப்பது, பிளாஸ்டிக் துகள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் தாக்கத்தை அளவிடுவதே சரி என்கிறார்கள். இவ்வகையில்  1950ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களின் தாக்கத்தை அளவிடலாம் என்கிறார்கள். வாதங்களை நிரூபிக்க, மனிதர்கள் தாக்கம் கொண்ட  இடங்களைக் கண்டுபிடிப்பது அவசியம். கடந்த 2021ஆ

இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மனி!

படம்
இரண்டாம் உலகப்போர்  இரண்டாம் உலகப்போர் 1939ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது, ஜெர்மனி நாடு. இந்த நாடு ஆக்ரோஷமாக போலந்து நாட்டை ஆக்கிரமித்தது. இப்படி உலக நாடுகளுக்கு இடையில் தொடங்கிய போர் ஐந்து ஆண்டுகள் நீடித்தது.  இந்தப் போரில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இவர்களுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிரே நின்றன.  இரண்டாம் உலகப்போரில் 30 நாடுகள் கலந்துகொண்டன. இதன் விளைவாக இங்கு வாழ்ந்த 100 மில்லியன் மக்கள்  பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஏராளமான மக்கள் தற்கொலை, மன அழுத்தம், ஆயுத தாக்குதல், நோய் பாதிப்பு என 85 மில்லியன் மக்கள் இறந்துபோயினர். மனிதகுல வரலாற்றில் இது மறக்கமுடியாத களங்கமாக மாறியது.  செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி உலகை ஆட்சி செய்யும் வேகத்தில் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் எதிர்வினையாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன.  1939ஆம் ஆண்டு ராணுவ பலத்தைப் பொறுத்தவரை நவீனமான ஆயுதங்களைக் கொண்டிருந்தது ஜெர்மனிதான். இதன் காரணமாக போரின் தொடக்கத்தில் இ

அணுகுண்டு தயாரிப்பு, கொரில்லா பாதுகாப்பு, ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடிப்பு, டிஎன்ஏவின் உருவ அமைப்பு கண்டறிந்த சாதனைப் பெண்கள்!

படம்
                    சியன் சுங் வு இயற்பியல் ஆராய்ச்சியாளர் சீனாவைத் தாயகமாக கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் இவர் . அணு இயற்பியலாளராக உலகின் முதல் அணுகுண்டைத் தயாரிக்க பங்களிப்பை அளித்தவர் . 1949 ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது . இதன் காரணமாக அமெரிக்கா , சீனா உறவு பாதிக்கப்பட்டது . 1973 ஆம் ஆண்டு வரையில் சியன் தனது தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லமுடியாது தவித்தார் . சீனாவில் உள்ள நான்ஜியாங் என்ற பல்கலைக்கழகத்தில் கணிதம் , இயற்பியலை கற்றுத்தேர்ந்தார் . பிறகு அமெரிக்காவில் கதிர்வீச்சு பற்றி படிக்க சென்றார் . இவரது பேராசிரியர் எர்னஸ்ட் லாரன்ஸ் , அணு துகள்களை தூண்டும் கருவி ஒன்றை உருவாக்கினார் . சியன் அதனைப் பயன்படுத்தி அணுக்களை பிரித்து கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கினார் . இவற்றில் புரோட்டான்கள் ஒரே எண்ணிக்கையிலும் நியூட்ரான்கள் வேறுபட்ட எண்ணிக்கையிலும் இருக்கும் . 1940 இல் சியன் தனது படிப்பை நிறைவு செய்தார் . கதிரியக்கம் பற்றி மேலும் அறிய அமெரிக்காவில் தங்கியிருந்தார் . அப்போதுதான் அவருக்கு மான்ஹாட்டன் எனும் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கி

இயற்பியலை மாற்றிய ஃபெய்மன் வரைபடம்!

படம்
  இயற்பியலை மாற்றிய ஃபெய்மன் வரைபடம்! இயற்பியலில் அணுத்துகள்களைக் கணக்கிடுவதில் 1940 ஆம் ஆண்டு ஒரு புரட்சிகர மாற்றம் நடந்தது.  ஆம் ஆண்டில்தான் இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெய்மன், அணுத்துகள்களைக் கணக்கிடுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.  இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ரிச்சர்ட் ஃபெய்மனை நாம் நினைத்துப் பார்ப்பதற்கான காரணமும் அதுதான். அமெரிக்காவில் மன்ஹாட்டன் ப்ராஜெக்டில்  அணுகுண்டை மேம்படுத்துவதற்கான குழுவில் ஃபெய்மன் பணியாற்றி வந்தார்.  இக்குழுத்தலைவராக இயங்கிய ஹான்ஸ் பெதே(Hans bethe) வுக்கு 1967 ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ஹான்ஸ் சொன்ன வாக்கியம் மறக்க முடியாதது. உலகில் இருவகை அறிவாளிகள் உண்டு. ஒருவர் கடினமான உழைத்து பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள். சிலர் மாந்த்ரீகர்கள் போல செயல்பட்டு எப்படி சாதித்தார்கள் என வியக்க வைப்பார்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர், ஃபெய்மன் என்று கூறினார்.  மிகச்சிறந்த அறிவாளி, கோமாளித்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்தவர் என அறிவியல் வட்டாரங்களும், நண்பர்களும் புகழும் ஆளுமை. 1962 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இயற்பியல் பற்றி

ஆபரேஷன் டோர்ஸ்டெப் - உண்மையில் நடந்தது இதுதான்!

படம்
அணுகுண்டு வெடித்தால் என்னாகும்? அமெரிக்காவில் 1953 ஆம் ஆண்டு, அணுகுண்டு வெடித்தால் என்னாகும் என்று அறிவதற்கான சோதனையைச் செய்தனர். இதற்காக நெவடா பாலைவனத்தில் வீடுகளைக் கட்டினர். அணுகுண்டு வெடிக்கும் இடத்திலிருந்து 2.5 கிலோமீட்டர்  தொலைவில் வீடு கட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் டோர்ஸ்டெப் என்று பெயரிடப்பட்டது. 90 மீட்டர் உயரத்திலிருந்து 150 கிலோ டன் அணுகுண்டு கீழே விழுந்து வெடிக்க வைக்கப்பட்டது. பாதிப்பு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஏற்பட்டதுபோலத்தான் இருந்தது. ஆனால் கட்டப்பட்ட வீடுகள் உடைந்து நொறுங்கினாலும் கீழ்ப்பகுதி மாத்திரம் பெரிய பாதிப்பின்றி தப்பியது. நன்றி:பிபிசி