இடுகைகள்

உழைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவிகள் மதிப்பெண் பெறுவது தொடர்பான மூடநம்பிக்கைகளை தகர்த்த ஆய்வாளர்!

படம்
  மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவது முயற்சியாலும் உழைப்பாலும்தான்! மாணவிகள் பத்தாவது, பனிரெண்டாவது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது நாளிதழ்களில் ஆண்டுதோறும் பார்க்கும் செய்தி. இதை சமூகம் எப்படி பார்க்கிறது? காதலை ஆயுதமாக பயன்படுத்தி மாணவர்களை வீழ்த்தி மாணவிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று திரைப்பட பாடல்கள் வெளிவந்துள்ளன.  முயற்சியும், உழைப்பும் கைகோக்க வெற்றி என்பது எவருக்கும் கிடைப்பதுதான். இதில் ஆண், பெண் என வேறுபாடு ஏதும் கிடையாது. ஆனால், ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சமூகத்தில் பெண்களின் வெற்றி இழிவு, அவதூறுகளுக்கு உள்ளாகிறது. பள்ளியில் மட்டுமல்ல பெண்கள் சாதிக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களின் திறமையை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல் என பலதையும் இழிவுபடுத்தி வெளியேற்ற முயல்வதும் சமூக வழக்கமாகிவிட்டது. உண்மையில் பெண்கள் மதிப்பெண்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லையா? அவர்களின் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் கிடைத்ததுதானா என்பதை அமெரிக்க உளவியலாளர் எலினார் மெக்கோபை ஆராய்ந்தார். இவரது ஆராய்ச்சியே ஆண், பெண் பாகுபாடு சார்ந்த மூடநம்பிக்கைகளை வேரோடு களைந்தெற

குழுவாக பழக்கங்களை கையாண்டு வெற்றி பெறுவது எப்படி? - பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி மந்திரங்கள்

படம்
                  குழுவாக வெற்றி பெறுவது எப்படி ? குழுவின் தலைவராக இருப்பவரின் பல்வேறு விதிகள் அந்த குழுவினரின் மீது தாக்கம் ஏற்படுத்தும் . குறிப்பிட்ட நேர வரையறையில் வேலைகளை முடித்தல் , எதற்கு முன்னுரிமை கொடுப்பது . அலுவலக கலாசாரம் , காதலை அனுமதிப்பது என இதில் நிறைய விவகாரங்கள் உள்ளன . அடிப்படையில் பழக்கங்கள் என்பது தனிநபரிலிருந்துதான் தொடங்குகிறது . அப்பழக்கம் அவருக்கு வெற்றியைத் தந்தால் அது பிறருக்கு அப்படியே காப்பிகேட் செய்யப்படுகிறது . இதில் என்ன தவறு இருக்கிறது ? வெற்றி பெற்ற பார்முலாதானே ? பல்வேறு நிறுவனங்களிலுள்ள குழுக்கள் சிறப்பான பழக்கங்களை கடைபிடிப்பதால்தான் வெற்றி பெற்று நிறுவனத்தையும் உயரத்திற்கு கொண்டு செல்கின்றன . சிறிய பழக்கங்களாக இருந்தாலும் கூட பெரிய மாற்றங்களை இவை ஏற்படுத்துகின்றன . வணிக உலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேலை செய்வதைப் பொறுத்தவரை சில கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன . பல்வேறு கொள்கைகள் , நோக்கங்கள் , துறைகள் என்றாலும் பழக்கங்கள்தான் நிறுவனங்களின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன . வணிக வட்டாரங்களில் தோல்வியை நேர்மறையாகவே ஏற்று

நான் கடினமாக உழைக்கிறேன் என்று கூற விரும்பியதில்லை! - கிரிக்கெட் வீர ர் ரவீந்திர ஜடேஜா

படம்
          ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் வீர ர் முன்னர் நீங்கள் தேர்வு செய்யும் பந்துகள் , அடிக்கும் முறை விமர்சனத்திற்கு உள்ளானது . கேப்டன் தோனியே இதனை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும ன்று கூறியிருந்தார் . 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பவுன்சர்களை எதிர்கொண்டு ரன்களை சேகரிப்பது பற்றி இப்படி பேசப்பட்டது . இப்போது நீங்கள் முன்னேறியிருக்கிறீர்களா ? முதலில் பந்துகளை எதிர்கொண்டு அடிப்பது பற்றி இரண்டு வித கருத்துகள் இருந்தன . ஷார்ட் பால்களையும் பவுன்சர்களையும் ஷாட் அடிக்கலாமா என்பதை யோசித்துக்கொண்டே இருந்தேன் . பின்னர் , பவுன்சர்களை எதிர்கொண்டு சிக்ஸ் அடிக்கத் தொடங்கியதும் மனதில் நம்பிக்கை பிறக்கத் தொடங்கிவிட்டது . ரன்களையும் சேகரிக்கத் தொடங்கிவிட்டேன் . தற்போதைக்கு உங்கள் அளவுக்கு வேகமாக பீல்டிங் செய்து ரன் அவுட் செய்யும்வீரர் உலகில் யாருமே இல்லை . உங்களது பீல்டிங் பற்றிய சீக்ரெட்டை சொல்லுங்கள் . இதற்கு பதிலை என் அப்பாதான் சொல்ல வேண்டும் . அவரின் ஜீன்தான் இதற்கு காரணமாக இருக்கவேண்டும் . பதிமூன்று ஆண்டுகளாக தோள்பட்டைக்கு பயிற்சிகளை செய்து வருகிறேன் . ஜிம்

வேலை செய்யுங்க மக்கா! - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
சப்பாத்தியா, அப்பளமா? மயிலாப்பூர் டைம்ஸ்! யாராவது வேலை செய்யறீங்களா? மயிலாப்பூரில் வாழ்ந்து விட்டு சோற்றை பற்றி எழுதாமல் எப்படி இருப்பது? நானும் லஸ்கார்னர் முருகன் கடை , தள்ளுவண்டி சரவணன் கடை, ரெக்ஸ் கடையருகே உள்ள சைவத்திருநீறு வைத்த காசாளர் கடை, அதற்கு எதிரில் உள்ள இளைஞர்கள் கடை, 30 ரூபாய் பிரியாணி கடை , தங்கம் ஹோட்டல் என சாப்பிட்டாயிற்று. ஆனால் கூட திருப்தி வரவில்லை. காரணம், வாங்குகிற காசுக்கான நேர்மை குறைந்து வருவதுதான். மயிலாப்பூரிலுள்ள பஜார் தெருவில் பல்வேறு கடைகள் இருந்தாலும் சில மாதங்களாக புதிய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. (அ)சைவம் என இரண்டுமே உண்டு. அப்போதுதானே காசு பார்க்க முடியும். ஆனால், அதற்கு உழைக்க வேண்டுமே! புதிய கடை. வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. அப்போது வேலை குறைவாக நடக்குமே என்று நினைத்தேன். அதேபோல ஆயிற்று. மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இரண்டு சப்பாத்தி இரவு உணவுக்கு வாங்க வந்தேன். முதலில் கல்லாவில் உட்கார்ந்திருப்பவருக்கு மரியாதை செய்யவேண்டுமே என்று அவரிடம் போனேன். கருப்பு நிறத்தில் பிள்ளையார் போல இருந்தார். லூசு என்றால் கூட அதனால்