இடுகைகள்

எரிக் மிஜிகோவ்ஸ்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பீப்பர் மினி செயலி மூலம் அனைத்து குறுஞ்செய்தி செயலிகளுக்கும் செய்தி அனுப்ப முடியும்!

படம்
  ஆப்பிளோடு மல்லுக்கட்டும் பீப்பர்! அண்மையில், பீப்பர் என்ற செயலி  இணையத்தில் பிரபலமானது.  இதன் சிறப்பு, இதை ஒருவர் ஆண்ட்ராய்ட் போனில், தரவிறக்கி அதன் மூலம் பிற உரையாடல் செயலிகளுக்கு செய்திகளை அனுப்ப முடியும். குறிப்பாக, ஆப்பிளின் ஐபோனில் உள்ள ஐமெசேஜ் செயலிக்கு செய்திகளை அனுப்பலாம். உலக நாடுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற உரையாடல் செயலிகளுக்கு வரம்புகள் உண்டு. அதாவது, அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் மட்டுமே அவர்களுக்குள் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ள முடியும், வாட்ஸ்அப்பில் இருப்பவர் டெலிகிராம் அல்லது சிக்னல் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்தியை அனுப்ப, பகிர முடியாது. ஆனால் பீப்பர் செயலி மூலம் பிற உரையாடல் செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்குக் கூட செய்திகளை அனுப்ப முடியும். இதுவே பீப்பரை பிரபலப்படுத்திய முக்கிய அம்சம். ஆப்பிள் ஐபோன் அதன் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் விரும்பப்படுகிறது. தற்போதைய சூழலில், ஆண்ட்ராய்ட் இயக்கமுறைமையைப் பயன்படுத்துபவர் அனுப்பும் செய்தி, ஐபோனுக்கு வரும்போது பச்சை நிறத்தில