இடுகைகள்

எல்இடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்இடி விளக்கின் வரலாறு

படம்
  எல்இடி விளக்கு ஆற்றலை சேமிக்கும் விளக்கு -LED   விளக்கை யார் கண்டுபிடித்தது என ரூபி வாய்ப்பாட்டில் பார்த்தால் அன்றைக்கு அனைவரும் நம்பிய அறிவியலாளரான எடிசனைக் கூறுவார்கள். ஆனால் அவரே அவரது உதவியாளராக இருந்த நிகோலா டெஸ்லாவின் அறிவை பயன்படுத்தி துரோகம் செய்துதான் தன்னை நிலைநிறுத்தினார். இதற்கு எடிசன் கடைசிவரை பல்வேறு அரசியல் சதிகள் செய்துகொண்டே இருந்தார்.   எனவே இதுபற்றி முழுமையாக அறிய கிழக்கு டுடேவில் ராம் எழுதும் நிகோலா டெஸ்லா தொடரை வாசித்துக்கொள்ளுங்கள். சாதாரணமாக பல்பு என்றால் பிலிப்ஸ் குண்டு பல்பு அனைவருக்கும் நினைவு வரும். உருண்டையான பல்பில் நடுவில் டங்க்ஸ்டன் இழை இருக்கும், மின்சாரம் அதில் பாயும்போது ஒளிரும். இரண்டே நிமிடங்களில் பல்பின் கண்ணாடி கை பொறுக்க முடியாத வெப்பத்தை அடைந்துவிடும். இன்று அந்த பல்பு விடைபெற்றுவிட்டது. அதே சைசில் மின்சாரத்தை சேமிக்கும் திறன் உள்ள எல்இடி வந்துவிட்டது. குண்டு பல்புகளை பயன்படுத்தும்போது அதிக மின்னாற்றல் செலவாகும். கிடைக்கும் வெளிச்சம் குறைவு. மேலும் அதன் அருகில் நாம் உட்கார்ந்து வேலை செய்வது கடினம். இரவில் சூரியன் வந்துவிட்டதோ எனும்படி ச

சிறந்த டிவி, கேட்ஜெட், சூழலுக்கு உகந்த நிறுவனம், பிராண்ட்! - சந்தைக்குப் புதுசு

படம்
                  சி றந்த கேட்ஜெட் சோனி பிளேஸ்டேஷன் 5 இந்த விளையாட்டு அதன் தரத்திலும் விலையிலும் கூட மக்களின் மனம் கவர்ந்துள்ளது . அதிநவீன டிவி இல்லாவிட்டாலும் அதிலும் இதனை இணைத்து விளையாட முடியும் . எக்ஸ்பாக்ஸை விட பல படிகள் முன்னேற்றம் கண்டுள்ளது . இந்த வகையில் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது . ஃபிட்பிட் ஏஸ் 3 குழந்தைகளின் தூக்கம் , விளையாட்டு ஆகியவற்றை இதன் மூலம் எளிதாக கண்காணிக்கலாம் . கலோரி போன்றவற்றை போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் கையில் கட்டிக்கொள்ள எளிதாக இருக்கிறது . அதிகநேரம் இதனை அணிந்திருந்தாலும் கூட எரிச்சல் ஏற்படுவதில்லை . வார நாட்களில் சில முறை சார்ஜ் செய்யும்படி இருக்கும் . சிறந்த கண்டுபிடிப்பு சாம்சங் மைக்ரோஎல்இடி எல்இடி ஓஎல்இடி போன்ற திரைகளில் உள்ள பலவீனத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் மைக்ரோஎல்இடி வாங்கலாம் என்று முடிவெடுக்கும்படி புதிய டிவியை உ்ருவாக்கியிருக்கிறார்கள் . ஒருவகையில் சாம்சங்கின் முடிவு எதிர்காலத்திற்கான முன்னடி என்று கூட சொல்லலாம் . பத்தாயிரம் மணி நேரங்கள் பாதுகாப்பு எ

எல்இடி பல்பை கண்டுபிடித்த ஜப்பானிய இயற்பியலாளர் இசாமு அகாசகி!

படம்
      இசாமு அகாசகி     இசாமு அகாசகி 1929-2021 2014 ஆம் ஆண்டு அகாசகி மேலும் இரண்டு அறிவியலாளர்களோடு சேர்ந்து நோபல் பரிசு வென்றார் . அகாசகி , ஹிரோஷி அமானோ , சுஜி நகமுரா ஆகியோரோடு சேர்ந்து அகாசகி நோபல் விருது வென்றார் . இதைப்பற்றி அகாடமி , பிறர் தோற்றுப்போன அறிவியல் விஷயங்களில் இம்மூவரும் வெற்றி கண்டனர் . தொண்ணூறுகளில் இம்மூவரும் நீலநிற ஒளி உமிழும் டயோடு ஒன்றைக் கண்டுபிடித்தனர் . இதனை புரட்சிகர மாற்றம் என்று கூறினர் . முப்பது ஆண்டுகளாக மூவரும் நீல நிற ஒளியை ஒளிரும் செமி கண்டக்டர்களை உருவாக்கினர் . அகாசகி என்ற இயற்பியலாளர் 92 வயதில் மறைந்துள்ளார் . இவர்தான் மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்யும் எல்இடி முறையைக் கண்டுபிடித்தார் . எல்இடி பல்புகள் ஒரு லட்சம் மணிநேரம் ஆயுளைக் கொண்டவை . இதில் ப்ளூரசென்ட் பல்புகள் 10 ஆயிரம் மணி நேரங்களைக் கொண்டவை . குண்டுபல்புகள் ஆயிரம் மணிநேரம் மட்டுமே தாக்கு்ப்பிடிக்கும் . எல்இடி பல்புகள் பிற பல்புகளை விட நான்கு மடங்கும் . குண்டுபல்புகளை விட 20 மடங்கும் எரிபொருள் சிக்கனம் கொண்டவை . 2010 ஆம் ஆண்டு மேஜோ பல்கலைக்கழகம

நிறம் மாறும் பல்புகள்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிறம் மாறும் பல்புகள் எப்படி நிறத்தை மாற்றிக்கொள்கின்றன? நிறம் மாறும் பல்புகளுக்கு நீலம் , சிவப்பு, பச்சை ஆகிய முதன்மை நிறங்களே அடிப்படை. நம் கண்களிலுள்ள கோன்கள் நிறத்தை எளிதாக பயன்படுத்தும் திறன் கொண்டவை. மூன்று அலைநீளம் கொண்ட முதன்மை நிறங்களை வைத்து பல்வேறு நிறங்களை உருவாக்குகின்றனர். எல்இடி பல்புகள் இதனை எளிதாகப் பயன்படுத்தி பல்வேறு நிறங்களில் ஒளியை உருவாக்குகின்றன. நன்றி: பிபிசி