இடுகைகள்

2020 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த கணினி பொருட்கள் 2020!

படம்
                கம்ப்யூட்டர் கேமிற்கான டிவிக்கள் சாம்சங் க்யூஎல்இடி க்யூ 80 டி நல்ல பெரிய வீட்டை கட்டிவிட்டீர்கள் என்றால் அதில் செமையாக விளையாட இந்த டிவி உதவும் . பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் எக்ஸ் ஆகிய விளையாட்டு சாதனங்களுக்கு ஏற்றது . 65 இன்ச் அளவு கொண்டது . அசத்தும் க்யூஎல்இடி திரை உங்களுக்கு விளையாட்டு அனுபவத்தை பரவசமாக்கும் . சோனி எக்ஸ் 90 ஹெச் ஹெச்டிஎம்ஐ 2.1 அப்டேட் இல்லாமல் வந்துள்ள டிவி . பிளேஸ்டேஷன் விளையாட்டுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் டிவி என்பதால் விளையாட்டு பற்றி கவலைப் படாதீர்கள் . மற்ற அம்சங்கள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளன . எல்ஜி சிஎக்ஸ் அடுத்த தலைமுறை டிவி என்ற விளம்பரத்தோடு 55 இன்ச்சில் வெளிவந்துள்ளது எல்ஜி . எக்ஸ்பாக்ஸ் விளையாட்டை ஸ்மூத்தாக விளையாடலா்ம் என்று கூறப்பட்டுள்ளது . ஹெச்டிஎம்ஐ 2.1, 4 கே , நொடிக்கு 120 பிரேம்கள் என விளையாட்டி்ற் கு ஏற்றபடி தயாரித்திருக்கிறார்கள் . ஆபீஸூக்கு போகலாமா ? கிரியேட்டிவ் லைவ் கேம் சின்க் 1080 பி அனைத்து லேப்டாப்களிலும் வெப்கேம் உள்ளது . ஆனால் மீட்டிங்குகளில் சரியாக

2020ஆம் ஆண்டின் அசத்தல் விளையாட்டுகள்

படம்
தி லாஸ்ட் ஆஃப் அஸ் பாகம் 2 சோனியின் தயாரிப்பு. அதற்கேற்ப அசரடிக்கும் சூழல்களும், சவால்களும் நாயகியான எல்லியைப் போலவே நம்மையும் அதிர்ச்சியடைய செய்கின்றன. இந்த விளையாட்டை விளையாடும் முன்பு இதற்கு முந்தைய பாகத்தை விளையாடிவிட்டு இதனை தொடுவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள மாற்றங்கள் தெரியும். சைபர் பங்க் 2077 எதிர்காலத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை டிஜிட்டல் இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுகிறார்கள். பல்வேறு திரைப்படங்கள் உங்கள் மனதில் ஓடினால் அதற்கு ஹாலிவுட்தான் காரணம். இந்த விளையாட்டு அல்ல. இந்த கொடுமையை செஞ்சவன சுட்டுப் பொசுக்கணும் சார் என பொங்கினால் நீங்கள் இந்த விளையாட்டை மதர் பிராமிசாக விளையாடலாம் ப்ரோ. ஃபைனல் ஃபேன்டசி 7 இதுவும் சோனியின் கைவண்ணம்தான். பழைய கிளாசிக் விளையாட்டை ரீமேக்கியிருக்கிறார்கள். விளையாடிப் பார்த்துவிட்டு நீங்களே நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். அனிமல் கிராசிங் நினென்டோவின் விளையாட்டு. 2020க்கான தன் திட்டங்களை கம்பெனி நிறுத்திவிட்டதாக சொல்லும் நிலையில் இந்த விளையாட்டின் பொசிஷன் என்னவென்று யாரிட

2019 டிரெண்டுகள் என்ன? பகுதி 1

படம்
giphy இன்புளூயன்சர்கள் இந்த வார்த்தையை அறிமுகம் செய்த து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட சமூக வலைத்தளங்கள்தான். இம்முறையில் இவர்கள் நவீனமான விளம்பர தூதர்களாக செயல்பட்டு ஆச்சி இட்லி மிளகாய் பொடி முதல் கார்கள் வரை விளம்பரம் செய்து சம்பாதித்தார்கள். கவிதை நேசர்கள் இம்முறை இலக்கியவாதிகளின் கவிதைகளை தாண்டி சாமானியர்களும் கவிதை பாடினார்கள். இதில் சிம்பிளாக அவர்களின் உறவு, பிரச்னைகள் ஆகியவை கவிதையாக வெளிவந்தன. நன்றாக இருந்த தோ இல்லையோ உலகம் இதை ரசித்து பாராட்டியது. இதற்கு முக்கியக் காரணம், நகரங்களில் உருவாகியுள்ள கிளப்புகள்தான். இங்குதான் ஓபன் மைக் சங்கதிகளில் இந்த கவிதைகளைப் பாடி இளைஞர்கள் குதியாட்டம் போட்டனர். இவை உடனுக்குடன் வைரலும் ஆனது. மொபைலே தியேட்டர் இந்தியர்களுக்கு எம்எக்ஸ் பிளேயர் கிடைத்தது, அதிலும் நெட்ஃபிளிக்ஸ் படங்கள் மாதம் 199 ரூபாய்க்கு கிடைத்தால் போதாதா? வார இறுதியில் தங்கள் நண்பர்களை விட போனுடன் கழித்த நவீன இளைஞர்கள் அதிகம். பார்க்கிங், பாப்கார்ன் செலவு பற்றி கவலைப்படாமல் வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வசதி செய்து அமேசான், நெட்ஃபிளிக்சுக்கு படம் கட்ட

தானியங்கி கார்களின் ஆண்டு தொடங்குமா?

படம்
giphy 2020 கேள்வி பதில்கள் தானியங்கி கார்கள் சாலையைத் தொடுமா? கூகுளின் வேமோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கான ஆராய்ச்சியில் உள்ளது. ஆனால் இதில் இன்னும் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. பயணிகளை சரியானபடி கவனித்து கார்கள் செல்லவேண்டியதில் பயிற்சி தேவைப்படுகிறது. இல்லாதபோது விபத்துகளை சந்திக்கவேண்டும். இந்த ஆண்டில் சாலைக்கு வர தானியங்கி கார்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.ஆராய்ச்சிகள் வேகம் பிடித்துள்ளதுதான் காரணம். தகவல்களை பாதுகாப்பதில் இனி டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுமா? நமது தகவல்கள் பாதுகாக்கப்படுமா? இணைய உலகில் இப்படியொரு கேள்வியா?இலவசம் என்று வரும் சேவைகள் எப்படி தகவல்களை பாதுகாப்பவையாக இருக்கும் என நம்புகிறீர்கள். ஐரோப்பிய யூனியன் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தால்தான் அதெல்லாம் சாத்தியம்.விதிமுறைகளை கடைபிடித்தால்தானே அவையெல்லாம் நடைமுறைக்கு வரும். டெக் நிறுவனங்கள் அடிக்கடி அபராத பிரச்னையில் மாட்டுவதே விதிகளை கடைபிடிக்காத மூர்க்கமான வியாபார வெறிக்காகத்தான். பிரைவசி செட்டிங்குகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். நிறுவனங்களை அந்தளவுக்கு மட்டுமே நம்பலாம்.

உலகை மாற்றும் 2020 தொழில்நுட்பங்கள் இவைதான்!

படம்
pixabay உலகம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. தலைமுறையாக செய்து வந்த தொழில்கள் இன்று இழுத்து மூடப்படுகின்றன. பெரும்பாலான தொழில்கள் இணையம் சார்ந்து இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு தொழிற்கூடங்களில் ஆட்டோமேஷன் நுட்பம் இயக்கப்படத் தொடங்கிவிட்டார்கள். செயற்கை நுண்ணறிவும் வேகம் கொள்ளத் தொடங்கி உள்ளது., இதனால் வேலை இழப்பு அபாயமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. புத்தாண்டில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மிக்ஸ்டு ரியாலிட்டி பிளேடு ரன்னர் படத்தில் ஏஜண்ட் கே, தன் செயற்கை நுண்ணறிவுத்தோழன் ஜோய் உடன் பேசுவது போல காட்சி அமைத்திருப்பார்கள். நிஜமும் அதுதான். தற்போது டிவிகளில் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றை பாப்கார்ன் கொரித்தபடி பார்க்கிறோம். அடுத்த வரவிருக்கும் ஆண்டுகளில், விஆர் ஹெட்செட்டில் அதே விளையாட்டை நாமும் விளையாடியபடி இருப்போம். சூழல் அந்தளவு நெருங்கிவிட்டது. மும்பையைச் சேர்ந்த டெசராக்ட் என்ற மிக்ஸ்டு ரியாலிட்டு தொழில்நுட்ப கம்பெனியை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது இதையே காட்டுகிறது. இத்துறையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இமேஜினேட் என்ற நிறுவனமும் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளத