இடுகைகள்

முதியவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வயதான பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து வல்லுறவு செய்த மர்ம ஆசாமி

படம்
  ஒரே ஆண்டில் மக்களை மீளாத பயத்தில் ஆழ்த்த முடியுமா? அதை வல்லுறவு ஆசாமி ஒருவர் செய்தார். இவரை வெஸ்ட் சைட் ரேபிஸ்ட் என்று அழைக்கிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1974-1975ஆம் ஆண்டில் மட்டுமே 33 பெண்களை மர்ம ஆசாமி வல்லுறவு செய்தார். அதில் பத்து நபர்களைக் கொன்றார். இறந்த பெண்கள் அனைவருமே 63 – 92 வயது கொண்டவர்கள். முதிய பெண்களை தேடிக் கொல்வதால் பலரும் பீதியடைந்தனர். எனவே, சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து துப்பாக்கி, கத்தி, கோடாரி என வாங்கத் தொடங்கினர். எல்லாம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான்… வேறு எதற்கு? யார் கொலையாளி என பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களையே சந்தேகமாக பார்த்துக்கொண்டார்கள். தூங்கும்போதும் கூட கைவிரல்கள் துப்பாக்கி ட்ரிக்கரை தொட்டபடி இருந்தன. 1974ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று, மேரி   என்ற 72 வயது பெண்மணி கொல்லப்பட்டார். அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வயதான பெண்கள் தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டனர். முன்னர் சொன்னது போல அதில், பத்து பேர் கொல்லப்பட்டனர்.   காவல்துறை முடிவு இல்லாத தேடுதலை நடத்திக்கொண்டிருந்தனர். ஆனால் கொலையாளி கிடைத்த பாடில்லை. ஆனால் அதற்கு பதிலாக வயதான பெ

முதியவர்களைக் கொல்வதே கடவுளாகும் வழி!

படம்
  ஆஸ்திரியா நாடு, அங்குள்ள வியன்னாவில் லைன்ஸ் பொது மருத்துவமனையை பலரும் மறக்கமுடியாது. மருத்துவமனையின் பிரமாண்டத்தை 2 ஆயிரம் ஊழியர்களே உங்களுக்கு சொல்லுவார்கள். அங்கு எல்லாம் நன்றாக நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் திடீரென   சிகிச்சை பெற்று வந்த எழுபது வயதிற்கும் அதிக வயதுடையவர்கள் இறந்துபோக தொடங்கினார்கள். இப்படி வயதானவர்கள் இறந்துபோனால் பலரும் என்ன   நினைப்பார்கள்? தள்ளாமைதான் காரணம் என நினைப்பார்கள். காரணம் அதுவல்ல.   1983ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரையில் 42 பேர் காலமானார்கள். ஆனால் இதெல்லாம் அதிகாரப்பூர்வ கணக்குதான். ஆனால் இறுதியாக என்ன நடந்தது என்று தெரிய வந்தபோது, பலருக்கும் பேரதிர்ச்சி.   300க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக சேர்ந்து உடல் நலிவுற்று இறந்தனர். இப்படி இறந்தவர்களின் இறப்புக்கு காரணம், மரணதேவதைகள்தான். நான் இங்கு சொல்வதற்கு பின்னணியாக, பேய் எல்லாம் கிடையாது. அத்தனையும் சூழ்ச்சி நிறைந்த மனிதர்கள்தான். வேக்னர் என்ற இரவு நேர வேலைக்கு வந்த செவிலியர்தான் கொலைகளுக்கான முக்கியமான காரணம். 1983ஆம் ஆண்டு தனது   23 வயதில், முதல்கொலையைச் செய்தார். முதன்முதலில் 77 வயதுப் பெ

குழந்தை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை தளர்த்தும் சீன அரசு

படம்
                மூன்று குழந்தை - சீனாவின் புதிய கொள்கை ரெடி சீனாவில் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து வருகின்றனர் . இதனால் மூன்றாவது குழந்தையை ஒருவர் பெற முயன்றால் , குழந்தையை அரசே கருக்கலைப்பு செய்வதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது . சீன அரசு , இந்த கொள்கையை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது . நகரங்களில் குழந்தைகளுக்கான கல்விச்செலவு , வீட்டுக்கான வாடகை பெருமளவு அதிகரித்து வந்ததால் பெரும்பாலானோர் மிகவும் கஷ்டப்பட்டனர் . இதை தீர்க்கும் விதமாக அரசே இரண்டு குழந்தைகள் சட்டம் உருவாக்கப்பட்டது என சீன அரசு நாளிதழ்கள் கூறின . 1970 இல் ஒரே குழந்தை சட்டம் அமலாகி 2016 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் நடைமுறையில் இருந்தது . சிறுபான்மையினருக்கு மட்டும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது . பிறகு அரசு இந்தக் கொள்கையை மாற்றிக்கொண்டது . இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகையை அரசு வழங்கவேண்டியிருந்தது நிதிச்சுமையை ஏற்படுத்தியது . இக்கொள்கையின் விளைவால் வயதானவர்களின்

குழந்தைகளுக்கு கதை சொல்வதில் முதியோர் எப்படி வெல்கிறார்கள்?

படம்
மிஸ்டர் ரோனி கதை சொல்வதில் வயதானவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்களே எப்படி? மரண அடிதான் ப்ரோ. வாழ்க்கை முழுவதும் ஏதேனும் ஒன்றை சுமந்துகொண்டு இருக்கிறார்கள். வீண்பழி சுமக்கிறார்கள். தினசரி ஏராளமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்களுக்குச் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன. மேலும் இளைஞர்களை விட (18-30), 60-92 வயது கொண்டவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளை கஷ்டப்படுத்தாத இலக்கணங்களைக் கொண்டது. எளிதில் புரியும்படியான விஷயங்களைக் கொண்டது. அறத்தை வலியுறுத்துவது என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கதைகளைச் சொல்லும்போது கதைகளுக்கு ஏற்றது போல குரலின் தொனிகளை மாற்றுவதும் பெரியவர்களுக்கு இயல்பாக வருவதை மைக்கேல் பிரான், சூசன் ராபின்ஸ், நான்சி மெர்க்லர் ஆகியோரின் ஆராய்ச்சிகள் விளக்கியுள்ளன. நன்றி: பிபிசி