இடுகைகள்

பனிப்போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம்!

படம்
  ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் சீன அதிபர் ஐரோப்பாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தருகிறார். அமெரிக்காவுடன் வணிகப்போர் நடந்துவருகிற நிலையில், அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது இதுவரையில் விட்டுப்போன உறவை மீண்டும் உருவாக்குவதற்காகவே என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு ஜின்பிங் செல்லவிருக்கிறார். அதிகாரப்பூர்வ பயணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளும் இருக்கும் என்பது எதிர்பார்க்க கூடியதே. ஆசியாவில் சீன முக்கியமான வளர்ந்து வரும் சக்தி. பிற நாடுகள் சாதி,மதம், இனம் என பிரிவினைக்குள்ளாகி வரும் நிலையில் தனது செல்வாக்கை திட்டமிட்டு வளர்த்துக்கொள்ளும் விதத்தில் சீனா சாமர்த்தியசாலிதான். ஒரே கட்சியைக் கொண்ட தீவிர கண்காணிப்பு முறையைக் கொண்ட நாடு சீனா.  அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை சீனா பிரிக்க முயல்கிறதோ என நினைக்கலாம். 1999ஆம் ஆண்டு மே ஏழாம்தேதி பெல்கிரேட்டில் உள்ள சீன தூதரகத்தில் நேட்டோ படையின் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று சீன பத்திரிகையாளர்கள் இறந்துபோன...

பெர்லின் சுவரும், சீனாவின் கம்யூனிசமும்!

படம்
பெர்லின் சுவர் இடிந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. உலகம் முழுக்க கம்யூனிச விஷயங்களின் சரிவும் அப்போதுதான் தொடங்குகிறது. சோவியத் ரஷ்யாவின் காலத்தில் அங்கிருந்த அகிலம், உலகம் முழுக்க இருந்த கம்யூனிச அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்தது. பின்னர் சோவியத் தொண்ணூறுகளில் கோர்ப்பசேவ் வந்து சோவியத்தை மறு உருவாக்கம் செய்தபோது அனைத்தும் நொறுங்கத் தொடங்கின. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நூறாவது நிறுவன தினத்தை கொண்டாடி வருகிறது. இவர்கள் சோவியத் வீழ்வதற்கு முன்னரே அங்கு சென்று அவர்களின் கோர்ப்பசேவின் கருத்தியல் சரியானதும் முறையானதும் அல்ல என்று கூறிவிட்டு வந்தனர் என்று நண்பர் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது. இன்றும் சீனா எப்படி உலகின் நெருக்குதல்களை சமாளித்து கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்றால் உள்நாட்டிலேயே பல்வேறு தடைகளை போட்டுத்தான் சமாளித்து வருகிறது. தடைகளை அன்று வேலியாக போட்டால் இன்று டிஜிட்டல் வடிவில் அரசுக்கு பாதகமான அம்சங்களை தவிர்த்து ஆட்சியை நடத்தி தனக்கேற்றபடி நாட்டை வடிவமைத்து வருகிறது சீன அரசு. கோர்ப்பசேவ் தனது சீர்த்திருத்தங்களை பெரஸ்ட்ரோய்கா, கிளாஸ்னாஸ்ட் என்ற ப...

ஹூவெய் கம்பெனிக்கு அடுத்த சிக்கல்!

படம்
ஹூவெய் நிறுவனத்திலிருந்து கூகுள் விலகல்! சீன நிறுவனமான ஹூவெய், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதன் நிறுவனரை கைது செய்தது இருநாட்டு நல்லுறவையும் பாதித்துள்ளது. இந்நிலையில் அக்கம்பெனியின் வணிகத்தை குலைக்கும் வகையில் அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விரைவில் ஹூவெய் போனுக்கான சேவையிலிருந்து கூகுள் விலகவுள்ளது. இதற்காகவெல்லாம் ஹூவெய் கவலைப்படவில்லை. நாளை இங்கிலாந்தில் ஹானர் 20 மாடலை வெளியிடவுள்ளது. இது இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஹூவெய்தான். கூகுளின் ஆண்ட்ராய்டை பெருமளவு பரப்பியதிலும் சீன நிறுவனமான ஹூவெய்யின் பங்கு அதிகம். இப்போது அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் கூகுள் தன் சேவைகளை ஹூவெய் நிறுவன போன்களில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூகுளின் முடிவைத் தொடர்ந்து இன்டெல், க்வால்காம் ஆகிய நிறுவனங்களும் தங்களின் தொடர்பை சீன நிறுவனங்களிடம் முறித்துக்கொள்ளவிருக்கின்றன. ஏறத்தாழ சீனாவுடனான பனிப்போரை வணிகத்திலிருந்து அமெரிக்கா தொட...