இடுகைகள்

க்வார்ட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனவரி 3 ஆம் தேதி ஏன் முக்கியமானதாகிறது?

படம்
நேரத்தைப் பொறுத்தவரை ஜனவரி 3 முக்கியமாகிறது. காரணம், இதே நாளில் 1957ஆம் ஆண்டுதான் முதன்முதலில் எலக்ட்ரானிக் வாட்ச் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டோடு எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிறது. ஹாமில்டன் என்ற வாட்ச் கம்பெனிதான் இதனை உருவாக்கியது. அதற்கு முன்பு வரை வாட்ச் என்பது சாவி கொடுத்தால் ஓடும். இல்லையென்றால் உடலின் வெப்பம் காரணமாக ஓடும். அதுவரை வாட்ச் நின்றிருக்கும். இதனையெல்லாம் ஹாமில்டனின் எலக்ட்ரானிக் வாட்ச் மாற்றியது. நவீன குவார்ட்ஸ் புரட்சியின் தொடக்கமாக ஹாமில்டன் நிறுவனம் உருவாக்கிய கைக்கடிகாரத்தை கூறலாம். 1946ஆம் ஆண்டு ஹாமில்டன் டைம்பீஸ் ஒன்றை உருவாக்கியது. இதனை சாதாரணமாக உருவாக்கிவிடவில்லை. இதனை தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஹாமில்டன் எலக்ட்ரிக் 500 என்ற வாட்ச் அனைவரையும் ஈர்த்தது. பாடகர் எல்விஸ் ப்ரெஸ்ட்லி இதனை அணிந்து ப்ளூ ஹவாய் என்ற படத்தில் தோன்றினார். அப்போது உருவாகிய வாட்சுகளில் வென்சுரா முக்கியமானது. இதனை ரிச்சர்ட் அர்பிப் என்பவர் வடிவமைத்தார். எப்போதும் பார்க்கும் வடிவமைப்பில் இல்லாத வாட்ச் இது. டிரையாங்குலர் வடி

இ சிகரெட்டை கண்டு அரசுகள் பயப்படுவது இதனால்தான்!

படம்
giphy.com புகை நமக்கு பகை! இ சிகரெட்டுகளைத் தடுத்து புகையிலைக்கு ஆதரவாக இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் உலகளவில் இ சிகரெட்டுகள புகழ்பெற்று வருகின்றன. இதுவரை அமெரிக்காவில் 26 பேர் இதற்கு பலியாகி உள்ளனர். 1200க்கும் மேற்பட்ட ஆரோக்கியம் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இளைஞர்கள் நேரடியாக இ சிகரெட்டை இப்போது புகைக்கத் தொடங்கியுள்ளதுதான் பிரச்னைக்கு காரணம். புகையிலை கம்பெனிகள் இ சிகரெட்டை தடை செய்யக்காரணம், மரபான சிகரெட்டுகள் பீடிகளுக்கான லாபம் பறிபோகிறதே என்றுதான். பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு மக்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி இருக்கின்றன. உண்மையில் இ சிகரெட்டுகளால் சிகரெட் சந்தை பேரழிவில் இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியெல்லாம் கிடையாது என்று பதில் கிடைக்கிறது. தெரிஞ்சுக்கோ... உலகிலுள்ள நிகோட்டின் சந்தை மதிப்பு 785 பில்லியன் டாலர்கள். ஏறத்தாழ 89 சதவீத சந்தையில் சிகரெட்தான் ராஜா. 2013-2018 காலகட்டத்தில் சிகரெட்டுகளின் வளர்ச்சி 8 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதே காலத்தில் இ சிகரெட்டுகளின் வளர்ச்சி இருபது மடங்கு அதிகரித்துள்ளது. எங்கே என்கிறீர்க